உள்ளடக்கத்துக்குச் செல்

ரிச்சர்ட் ஆர். எர்ன்ஸ்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரிச்சர்ட் ஆர். எர்ன்ஸ்ட்
Richard R. Ernst
1980களில் எர்ன்சுட்
பிறப்புரிச்சர்டு ராபர்ட் எர்ன்சுட்
(1933-08-14)14 ஆகத்து 1933
வின்டர்தர், சுவிட்சர்லாந்து
இறப்பு4 சூன் 2021(2021-06-04) (அகவை 87)
வின்டர்தர், சுவிட்சர்லாந்து
துறை
பணியிடங்கள்
கல்வி கற்ற இடங்கள்சுவிட்சர்லாந்து நடுவண் தொழில்நுட்ப நிறுவனம், சூரிக் (முனைவர்)
ஆய்வேடுசீரற்ற கதிரியக்க அதிர்வெண் புலங்களுடன் கூடிய அணு காந்த அதிர்வு நிறமாலையியல் (1962)
அறியப்படுவது
விருதுகள்
இணையதளம்
chab.ethz.ch/en/the-department/people/emeriti/emeriti-homepages/richard-ernst.html

ரிச்சர்ட் ஆர். எர்ன்ஸ்ட் (Richard R. Ernst, 14 ஆகத்து 1933 – 4 சூன் 2021) சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இயல்வேதியியல் அறிவியலாளரும்,[1] நோபல் பரிசு வென்றவரும் ஆவார். இவர் சுவிட்சர்லாந்தில் உள்ள விண்டேர்தரில் பிறந்தார். எர்ன்ஸ்ட் 1957 ம் ஆண்டு ஜூரிச்சில் உள்ள நடுவண் தொழில்நுட்பக் கழகத்தில் இருந்து இளநிலை வேதியியல் பட்டம் பெற்றார் பின்னர் 1962-ஆம் ஆண்டு இயற்வேதியியல் முனைவர் பட்டம் பெற்றார். இவர் மூனிக் மற்றும் சூரிக் பல்கலைக்கழகங்களில் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றுள்ளார். எர்ன்ஸ்ட்க்கு 1991-ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ""Richard R. Ernst - Biographical"". Nobelprize.org. Nobel Media AB. 19 July 2015. Retrieved 19 சூலை 2015.
  2. ""Richard R. Ernst - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 19 July 2015. Retrieved 19 சூலை 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிச்சர்ட்_ஆர்._எர்ன்ஸ்ட்&oldid=4442295" இலிருந்து மீள்விக்கப்பட்டது