உள்ளடக்கத்துக்குச் செல்

எட்வின் மெக்மிலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எட்வின் மட்டிசன் மெக்மிலன் (Edwin Mattison McMillan செப்டம்பர் 18, 1907 - செப்டம்பர் 7, 1991) ஓர் அமெரிக்க நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் மற்றும், நெப்டியூனியம் என்ற யுரேனியப் பின் தனிமங்களை முதன்முதலில் உற்பத்தி செய்தவர் என்ற பெருமையைப் பெற்றார். இதற்காக , வேதியியலுக்கான நோபல் பரிசை க்ளென் சீபோர்க்குடன் 1951ஆம் ஆண்டில் இணைந்து பெற்றார்.

கலிஃபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தில் பட்டம் பெற்ற இவர், 1933 ஆம் ஆண்டில் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார், மேலும் பெர்க்லி கதிர்வீச்சு ஆய்வகத்தில் சேர்ந்தார். அங்கு, ஆக்ஸிஜன் -15 மற்றும் பெரிலியம் -10 ஆகியவற்றைக் கண்டுபிடித்தார் . இரண்டாம் உலகப் போரின்போது, எம்ஐடி கதிர்வீச்சு ஆய்வகத்தில் கதிரலைக் கும்பா, கடற்படை வானொலி மற்றும் ஒலி ஆய்வகத்தில் ஒலிச் செலுத்துவழி மற்றும் வீச்சளவிலும் பணியாற்றினார். 1942 ஆம் ஆண்டில் அவர் அணுக்கரு ஆயுதங்களை உருவாக்குவதற்கான போர்க்கால முயற்சியான மன்ஹாட்டன் திட்டத்தில் சேர்ந்தார்.

மெக்மில்லன் விளாடிமிர் வெக்ஸ்லருடன் ஒத்தியங்கு முடுக்கியினைக் கண்டுபிடித்தார். அவர் போருக்குப் பிறகு கதிர்வீச்சு ஆய்வகத்திற்குத் திரும்பி, அவற்றைக் உருவாக்கினார். 1954 ஆம் ஆண்டில் அவர் கதிர்வீச்சு ஆய்வகத்தின் இணை இயக்குநராக நியமிக்கப்பட்டார், 1958 இல் துணை இயக்குநராக பதவி உயர்வு பெற்றார். அந்த ஆண்டு லாரன்ஸ் இறந்தபோது, அவர் இயக்குநரானார், 1973 இல் ஓய்வு பெறும் வரை அவர் அந்தப் பதவியில் இருந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

செப்டம்பர் 18, 1907 அன்று கலிபோர்னியாவின் ரெடோண்டோ கடற்கரையில் எட்வின் ஹார்பாக் மெக்மில்லன் மற்றும் அவரது மனைவி அன்னா மேரி மெக்மில்லன் நீ மேட்டிசன் ஆகியோரின் மகனாக மக்மில்லன் பிறந்தார். [1] அவருக்கு கேத்தரின் ஹெலன் என்ற தங்கை இருந்தார். அவரது தந்தை ஒரு மருத்துவர் ஆவார்.அக்டோபர் 18, 1908 இல் இவரது குடும்பம் கலிபோர்னியாவின் பசடீனாவுக்கு குடிபெயர்ந்தது, அங்கு அவர் 1913 முதல் 1918 வரை மெக்கின்லி தொடக்கப்பள்ளியிலும், 1918 முதல் 1920 வரை கிராண்ட் பள்ளியிலும், பின்னர் பசடேனா உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். இருந்து அவர் 1924 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார். [2]

கலிஃபோர்னியா தொழில்நுட்பக் கழகம் (கால்டெக்) அவரது வீட்டிலிருந்து ஒரு மைல் தொலைவில் இருந்தது, மேலும் அவர் அங்கு நடைபெற்ற பொது சொற்பொழிவுகளில் கலந்து கொண்டார். [3] அவர் இளங்கலை அறிவியல் பட்டத்தினை 1928 ஆம் ஆண்டிலும் அவருடைய அறிவியலில் முதுகலைப் பட்டத்தினை 1929 ஆம் ஆண்டிலும் பெற்றார்.[1] அதற்குப்பிறகு அவர்முனைவர் பட்டத்தினை பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் 1933 ஆம் ஆண்டில் எட்வர்டு காண்டன் மேற்பார்வையில் பெற்றார். [3]

இரண்டாம் உலக போர்

[தொகு]

மெக்மிலனுக்கு 1984 இல் தொடர்ச்சியான பக்கவாதம் ஏற்பட்டது. [4] கலிபோர்னியாவின் எல் செரிட்டோவில் உள்ள தனது வீட்டில் செப்டம்பர் 7, 1991 அன்று நீரிழிவு நோயால் இறந்தார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இருந்தனர். அவரது நோபல் பரிசு வாஷிங்டன் டி.சி.யில் உள்ள சிமித்சோனியன் நிறுவனத்தின் ஒரு பிரிவான தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் உள்ளது . [5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Nobel Foundation. "Edwin M. McMillan – Biographical". பார்க்கப்பட்ட நாள் July 16, 2015.
  2. "Edwin McMillan – Session I". American Institute of Physics. பார்க்கப்பட்ட நாள் July 16, 2015.
  3. 3.0 3.1 Seaborg 1993.
  4. Lofgren, Edward J. "Edwin McMillan, a biographical sketch" (PDF). Lawrence Berkeley Laboratory. Archived from the original (PDF) on July 23, 2015. பார்க்கப்பட்ட நாள் July 18, 2015.
  5. "Nobel Prize Medal in Chemistry for Edwin McMillan". National Museum of American History, Smithsonian Institution. பார்க்கப்பட்ட நாள் July 18, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்வின்_மெக்மிலன்&oldid=3583892" இலிருந்து மீள்விக்கப்பட்டது