தாவீது மாக்மிலன்
தாவீது மாக்மிலன் David MacMillan | |
---|---|
பிறப்பு | டேவிட் மாக்மிலன் குரொசு மேக்மிலன் 16 மார்ச்சு 1968 பெல்சுகில், இசுக்கொட்லாந்து, ஐக்கிய இராச்சியம் |
குடியுரிமை | பிரித்தானியர், அமெரிக்கர் |
பணியிடங்கள் | |
கல்வி | கிளாஸ்கோ பல்கலைக்கழகம் (BSc) கலிபோர்னியா பல்கலைக்கழகம் (இர்வைன்) (முதுகலை, முனைவர்) |
ஆய்வேடு | (1996) |
ஆய்வு நெறியாளர் | லாரி ஈ. ஓவர்மேன் |
விருதுகள் | கோர்டே-மோர்கன் பதக்கம் வேதியியலுக்கான நோபல் பரிசு (2021) |
இணையதளம் அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
தாவீது மாக்மிலன் (David MacMillan, டேவிட் மேக்மிலன், பிறப்பு: 16 மார்ச் 1968)[1] இசுக்காட்லாந்தைச் சேர்ந்த[2][3][4][5][6] வேதியியலாளரும், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் ஆவார். இவர் 2010 முதல் 2015 வரை பிரின்சுடன் பல்கலைக்கழக வேதியியல் துறையின் தலைவராகப் பணியாற்றினார்.[7][8] இவர் 2021 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசை "சீரொருமையற்ற வேதிப்பொருள்களை உருவாக்கும் உயிர்க்கரிம வினையூக்கிகளைக் கண்டுபிடித்து வளர்த்தெடுத்தமைக்காக" பெஞ்சமின் இலிசுத்துடன் பகிர்ந்து கொண்டார்.[9]
கல்வியும், ஆய்வுப் பணியும்
[தொகு]மாக்மிலன் வேதியியலுக்கான இளம் அறிவியல் பட்டத்தை கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொண்டார்.[10][11] 1990 இல், அமெரிக்கா சென்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் லாரி ஓவர்மேனின் வழிகாட்டலில் பட்டப்பின்படிப்பை மேற்கொண்டார்.[12] முனைவர் பட்டத்தை 1996 இல் பெற்றுக் கொண்டார்.[11] அதன் பின்னர், மாக்மிலன் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். முனைவர் பட்டத்திற்குப் பின்னரான படிப்பு எதிர் உருவமை வினையூக்கிகளைப் பற்றியதாக இருந்தது, குறிப்பாக Sn(II) இல் இருந்து பெறப்பட்ட பைசோக்சசோலைன் வடிவமைப்பும் வளர்ச்சியும் ஆகும்.[11] கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி) (1998), கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம் (2000) ஆகியவற்றிலும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். 2006 இல் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியப் பணியை ஆரம்பித்தார்.[11]
2010 முதல் 2014 வரை மாக்மிலன் வேதியியலுக்கான வேந்திய சங்கம் வெளியிடும் கெமிக்கல் சயன்சு ஆய்விதழின் தலைமை தொகுப்பாசிரியராகப் பணியாற்றினார்.[11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Professor David MacMillan FRS". Archived from the original on 2013-11-04. பார்க்கப்பட்ட நாள் 2021-10-09.
- ↑ Paterson, Laura (2021-10-06). "Scottish scientist jointly wins Nobel Prize in chemistry". www.standard.co.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-08.
- ↑ "Chemistry Nobel awarded for mirror-image molecules" (in en-GB). BBC News. 2021-10-06. https://www.bbc.com/news/science-environment-58814418.
- ↑ Russell, Jennifer (2021-10-06). "Scots scientist wins Nobel Prize for chemistry". Daily Record (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-08.
- ↑ "Scottish scientist jointly wins Nobel Prize in chemistry". uk.news.yahoo.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-08.
- ↑ "Princeton's David MacMillan receives Nobel Prize in chemistry". Princeton University (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 7 October 2021.
- ↑ "Home". Macmillan Group (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 21 ஜூலை 2020. பார்க்கப்பட்ட நாள் 15 June 2020.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ A short interview of Professor MacMillan is available on the Eminent Organic Chemists Page provided by the ACS Organic Division
- ↑ "The Nobel Prize in Chemistry 2021". NobelPrize.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 October 2021.
- ↑ "Bellshill man and former Glasgow University student David WC MacMillan wins the Nobel prize for chemistry". Glasgow Times. https://www.glasgowtimes.co.uk/news/19630090.bellshill-man-former-glasgow-university-student-david-wc-macmillan-wins-nobel-prize-chemistry/.
- ↑ 11.0 11.1 11.2 11.3 11.4 "David MacMillan". National Academy of Sciences. பார்க்கப்பட்ட நாள் 7 October 2021.
- ↑ MacMillan, David William Cross (1996). Stereocontrolled formation of bicyclic tetrahydrofurans ; and, Enantioselective total synthesis of eunicellin diterpenes (Ph.D. thesis). கலிபோர்னியா பல்கலைக்கழகம் (இர்வைன்). இணையக் கணினி நூலக மைய எண் 35966904. ProQuest 304225710.
வெளி இணைப்புகள்
[தொகு]- தாவீது மாக்மிலன் on Nobelprize.org