பீட்டர் ஆக்ரீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீட்டர் ஆக்ரீ

பீட்டர் ஆக்ரீ (Peter Agre) (ஜனவரி 30, 1949) ஓர் அமெரிக்க மருத்துவர், நோபல் பரிசு பெற்ற மூலக்கூறு உயிரியலாளர் ஆவார். மேலும் இவர் பொது சுகாதார ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் பள்ளி மற்றும் மருத்துவ ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பள்ளியின் பேராசிரியர் மற்றும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மலேரியா ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் ஆவார் . 2003 ஆம் ஆண்டில், 2003 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசை "உயிரணு சவ்வுகளில் உள்ள வரிசைகள் தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக" ஆக்ரீ, ரோட்ரிக் மெக்கின்னனுடன் பகிர்ந்து கொண்டார். [1] 2009 ஆம் ஆண்டில், ஆக்ரீ அமெரிக்கன் அசோசியேஷன் ஃபார் தி அட்வான்ஸ்மென்ட் ஆஃப் சயின்சின் (ஏஏஏஎஸ்) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [2]

வாழ்க்கை வரலாறு[தொகு]

நோர்வே மற்றும் ஸ்வீடிஷ் வம்சாவளியைச் சேர்ந்த பெற்றோரின் ஆறு குழந்தைகளில் இவர் இரன்டாவது குழந்தையாகப் பிறந்தார். மினசோட்டாவின் நார்த்ஃபீல்டில் ஜனவரி 30, 1949 இல் பிறந்தார். ஆக்ரீ லூதரனியம் மரபினைச் சேர்ந்தவர் ஆவார் . [3] தான் உயர்நிலைப்பள்ளியில் பயின்ற போது சோவியத் யூனியன் வழியாக சர்வதேச பயணத்தினை மேற்கொண்டார். அந்த பயணம் இவரை அதிகமாக ஈர்த்தது.இவரது தந்தை வேதியியல் பேராசிரியராக இருந்தார். இவருக்கு அறிவியலில் ஆர்வம் வரும் வரை படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்தார். [4] [5]

மினியாப்பொலிசில் உள்ள ஆங்க்ஸ்பெர்க் கல்லூரியில் இவர் வேதியியல் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1974 ஆம் ஆண்டில் பால்டிமோர், மேரிலாந்திலுள்ள, ஜான் ஹாப்கின்ஸ்சின் மருத்துவப் பள்ளியில் இவர் எம். டி பயின்றார். 1975 முதல் 1978 வரை சார்லஸ் சி.ஜே. கார்பெண்டரின் வழிகாட்டுதலின் கீழ் கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ மையத்தில், உள் மருத்துவத் துறையில் மருத்துவப் பயிற்சியை முடித்தார். இதைத் தொடர்ந்து வட கரொலைனா நினைவு பலகலைக்கழகத்தில் இவருக்குஉதவித் தொகை கிடைத்தது. 1981 ஆம் ஆண்டில், ஆக்ரீ ஜான்ஸ் ஹாப்கின்சின் மருத்துவப் பள்ளிக்குத் திரும்பினார். பின்னர் வான் பென்னட்டின் ஆய்வகத்தில் உயிரியல் துறையில் சேர்ந்தார். [5]

1984 ஆம் ஆண்டில், விக்டர் ஏ. மெக்குசிக் தலைமையிலான மருத்துவத் துறையின் ஆசிரியராக ஆக்ரீ நியமிக்கப்பட்டார். பின்னர் டான் லேன் தலைமையிலான உயிரியல் வேதியியல் துறையில் சேர்ந்தார். ஆக்ரீ 1992 இல் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார்.2005 ஆம் ஆண்டு வரை ஜான்ஸ் ஹாப்கின்சின் மருத்துவப் பள்ளியில் இருந்தார். ஆக்,ரீ பின்னர் வட கரோலினாவின் டர்ஹாமில் உள்ள டியூக் பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துணைவேந்தராக பணியாற்றினார். அங்கு, டியூக்கின் உயிரியல் மருத்துவ ஆராய்ச்சிக்கு வழிகாட்டியாக இருந்தார். 2008 ஆம் ஆண்டில் மீண்டும் இவர் ஜான்ஸ் ஹாப்கின்சின் மருத்துவ பள்ளிக்குத் திரும்பினார், அங்கு அவர், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் எனும் நிறுவனத்தில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மலேரியா ஆராய்ச்சி நிறுவனம் என்பதின் இயக்குநராகப் பணியாற்றினார்.[6]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

ஆக்ரீ மற்றும் அவரது மனைவி மேரி 1975 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் மற்றும் இளம் பேத்திகள் உள்ளனர். [5] இவரது சகோதரர்களில் இருவர், மருத்துவர்களாக உள்ளனர்.2012 இல் இவருக்கு நடுக்குவாதம் நோய் இருப்பது கண்டறியப்பட்ட பின்னர் தனது அன்றாட நடவடிக்கைகளை குறைக்க வேண்டியிருந்தது.

குறிப்புகள்[தொகு]

  1. "The Nobel Prize in Chemistry 2003". www.nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2018-03-21.
  2. Earl Lane (2010). "Agre, Pickering: Science Diplomacy a "Critical Tool" in U.S. Foreign Policy". American Association for the Advancement of Science. பார்க்கப்பட்ட நாள் 2016-08-20.
  3. "Peter Agre". www.nndb.com. பார்க்கப்பட்ட நாள் 2018-03-21.
  4. P. Agre, (May 2, 2008), lecture presented in Cellular Biology, The Johns Hopkins University, Baltimore, MD.
  5. 5.0 5.1 5.2 "Peter Agre - Biographical". www.nobelprize.org. Archived from the original on 2013-05-15. பார்க்கப்பட்ட நாள் 2018-03-21.
  6. "Nobel Laureate Peter Agre to Lead Johns Hopkins Malaria Research Institute". Johns Hopkins Bloomberg School of Public Health. 2007-10-24. பார்க்கப்பட்ட நாள் 2008-07-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டர்_ஆக்ரீ&oldid=3776378" இலிருந்து மீள்விக்கப்பட்டது