பிரையன் கோபிலுக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரையன் கோபிலுக்கா
Brian Kobilka
Brian Kobilka (649437151).jpg
பிறப்பு1955 (அகவை 67–68)
மின்னசோட்டா, ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைபடிகவரைவியல்
பணியிடங்கள்இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம், தியூக்குப் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்மின்னசோட்டாப் பல்கலைக்கழகம், துலூத்து, யேல் பல்கலைக்கழகம்
Academic advisorsஇராபர்ட்டு இலெவுக்கோவித்ஃசு
அறியப்படுவதுபீட்டா-2 அட்ரினெர்கிக்கு நுண்வாங்கி கட்டமைப்பு
விருதுகள்நோபல் பரிசு, வேதியியல் (2012)

பிரையன் கே. கோபிலுக்கா (பிறப்பு 1955) ஓர் அமெரிக்க உயிர்வேதிநுட்ப அறிவியலாளர், இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறையில் ஒரு பேராசிரியர். இவர் எழுபடல நுண்வாங்கிப் புலநுண்வாங்கி (7TM receptors) அல்லது குவனைன்-புரத இணைப்பு நுண்வாங்கி (G protein-coupled receptor) பற்றிய ஒரு தனியார் நிறுவனமாகிய கான்ஃபோமெட்டாரெக்ஃசு (ConfometRx) என்பதன் இணைத் தோற்றுநர். 2012 ஆம் ஆண்டின் வேதியியலுக்கான பரிசை தன் முன்னாள் முனைவர்ப் பட்ட நெறியாளர் இராபர்ட்டு இலெவுக்கோவித்ஃசு சேர்ந்து வென்றுள்ளார். இவர் 2011 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அறிவியல்களுக்கான நாட்டகக் கல்விமன்றம் (National Academy of Science) என்பதன் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வாழ்க்கை[தொகு]

இவர் தந்தை வழியில் போலந்திய, இடாய்ச்சுலாந்தியப் பின்னணி கொண்டவர். மின்னசோட்டா மாநிலத்தில் சிறுவீழ்ச்சி (Little Falls, இலிட்டில் ஃபால்சு) என்னும் பிறந்து வளர்ந்தவர். கோபிலுக்காவின் தந்தை பிராங்கிளின் கோபிலுக்காவும் (1921-2004), பாட்டனார் பெலிக்ஃசு கோபிலுக்காவும் (1893-1991)மின்னசோட்டாவின் சிறுவீழ்ச்சியில் வெதுப்பியர்களாக (பேக்கர்) இருந்தவர்கள்[1][2][3] இவருடைய தந்தைவழி பாட்டி இசபெல் சூசன் கோபிலுக்கா (Isabelle Susan Kobilka (née Kiewel, 1891-1980)) பிரசியாவைச் (Prussia) சேர்ந்த கீவெல் (Kiewel) குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவருடைய தாய் பெட்டி (Betty) கோபிலுக்காவும் (née Faust, b. 1930) கீவெல் குடும்பத்தைச் சேர்ந்தவர். பிரையன் கோபிலுக்கா தன் மனைவி தாங்கு சுன் தியன் (Tong Sun Thian) என்பாரை துலூத்தில் (Duluth) மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் சந்தித்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்..[4]

உசாத்துணை[தொகு]

  1. "Franklyn A. Kobilka, 83". 2012-12-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-10-10 அன்று பார்க்கப்பட்டது.
  2. Nobel winner a UMD grad who grew up in Little Falls
  3. "Social Security Death Index". 2012-12-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-10-10 அன்று பார்க்கப்பட்டது.
  4. Buchen, Lizzie (24 August 2011). "Cell signalling: It's all about the structure". Nature 476 (7361): 387–390. doi:10.1038/476387a. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரையன்_கோபிலுக்கா&oldid=3563684" இருந்து மீள்விக்கப்பட்டது