கியூலியோ நட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கியூலியோ நட்டா
பிறப்பு(1926-02-26)26 பெப்ரவரி 1926
இம்பெரியா, இத்தாலி
இறப்பு2 மே 1979(1979-05-02) (அகவை 76)
பெர்கமோ, இத்தாலி
தேசியம்இத்தாலியர்
துறைஉயிர்வேதியியல்
பணியிடங்கள்பாவியா பல்கலைக்கழகம்
ரோம் டா சாபியென்சா பல்கலைக்கழகம்
பாலிடெக்னிகோ டி டொரினோ
கல்வி கற்ற இடங்கள்பாலிடெக்னிகோ டி மிலானோ
அறியப்படுவதுசீக்லர்-நட்டா வினையூக்கி
விருதுகள்வேதியியலுக்கான நோபல் பரிசு (1963)
லோமோனோசோவ் தங்கப் பதக்கம் (1969)

கியூலியோ நட்டா (Giulio Natta: 26 பிப்ரவரி, 1903 – 2 மே, 1979) ஓர் இத்தாலிய வேதியியலாளர் ஆவார். இத்தாலியில் இம்பெரியா என்னுமிடத்தில் பிறந்தார்[1]. இவரது முந்தைய ஆய்வுகள் மெத்தனால், ஃபார்மால்டிஹைடு, பியூட்ரால்டிஹைடு மற்றும் சக்சினிக் அமிலம் ஆகியவற்றின் நவீன தொழில்துறை தொகுப்புமுறைகளுக்கான அடிப்படையை உருவாக்கியது. 1953 ஆம் ஆண்டில் இவர் பெருமூலக்கூறுகள் தொடர்பான தீவிர ஆய்வைத் தொடங்கினார். ஜீக்லரின் வினையூக்கிகளைப் பயன்படுத்தி, இவர் புரோப்பிலீனின் பலபடியாக்கல் மூலம் பரிசோதனை செய்தார் மற்றும் மிகவும் வழக்கமான மூலக்கூறு கட்டமைப்பின் பாலிப்ரோப்பிலீன்களைப் பெற்றார். இந்த பலபடிகளின் பண்புளான அதிக வலிமை, அதிக உருகு நிலை போன்றவை விரைவில் வணிகரீதியாக மிக முக்கியமானதாக நிரூபிக்கப்பட்டது. உயர்ரக பலபடி வகைகளைக் கண்டுபிடித்ததற்காக 1963 ஆம் ஆண்டு வேதியலில் நோபல் பரிசு பெற்றவர். கார்ல் சீக்லெர் என்பவருடன் இப்பரிசினை கியூலியோ நட்டா பகிர்ந்துகொண்டார்.[2]

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. ""Giulio Natta - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. C.E.H. Bawn (1979). "Giulio Natta, 1903—1979". Nature 280 (5724): 707. doi:10.1038/280707a0. Bibcode: 1979Natur.280..707B. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கியூலியோ_நட்டா&oldid=3395458" இலிருந்து மீள்விக்கப்பட்டது