பால் சோசப் கிரட்சன்

பால் சோசப் கிரட்சன் (Paul Jozef Crutzen; 3 திசம்பர் 1933 – 28 சனவரி 2021) டச்சு நாட்டு அறிவியல் அறிஞரும் தட்பவெப்ப வேதியலாளரும் ஆவார். பருவநிலை மாற்றம் குறித்து ஆய்வுகள் செய்தவர். மனிதச் செயல்பாடுகள் நடவடிக்கைகள் ஆகியன புவியைப் பெரும் மாற்றம் அடையச் செய்யும் என்னும் கருத்தைக் கொண்டிருந்தவர் ஆவார்.[1][2][3]
ஓசோன் உருவாவது பற்றியும் அதன் பிரிவாக்கம் பற்றியும் தட்பவெப்ப வேதியல் பற்றியும் செய்த ஆய்வுகளுக்காக இவருக்கும் மரியோ மோலினா மற்றும் பிராங்க் செர்வுட் ரோலண்ட் ஆகியோருக்கும் கூட்டாக நோபல் பரிசு 1995 இல் வழங்கப்பட்டது.
வாழ்க்கைச் சுருக்கம்
[தொகு]நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்தாமில் பால் சோசப் கிரெட்சன் பிறந்தார். பொறியாளர் ஆக விரும்பிய கிரெட்சன் அதற்குரிய கல்வியைப் படித்தார். பின்னர் பாலம் கட்டுமானக் குழுமம் ஒன்றில் பணி செய்தார். 1958 இல் மனைவியுடன் சுவீடனுக்குக் குடி பெயர்ந்தார். ஸ்டாக்ஓம் பல்கலைக் கழகத்தில் வானிலைத் துறையில் கணினிப் பிரிவில் பணி ஆற்றினார். அமெரிக்கா, செருமனி, நெதர்லாந்து, ஆத்திரியா ஆகிய நாடுகளிலும் பணியாற்றினார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Autobiography from nobelprize.org
- ↑ CV from nobelprize.org
- ↑ An Interview - Paul Crutzen talks to Harry Kroto Freeview video by the Vega Science Trust.
- ↑ http://www.nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/1995/crutzen-facts.html
வெளி இணைப்புகள்
[தொகு]- பால் சோசப் கிரட்சன் on Nobelprize.org including the Nobel Lecture, 8 December 1995 My Life with O3, NOx and Other YZOxs
- Memoirs Paul Jozef Crutzen. 3 December 1933—28 January 2021 auf The Royal Society Publishing (englisch)
