உள்ளடக்கத்துக்குச் செல்

யோக்கிம் பிராங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யோக்கிம் பிராங்கு
Joachim Frank
Joachim Frank under Nobel Prize press conference in Stockholm, December 2017
பிறப்பு12 செப்டம்பர் 1940 (1940-09-12) (அகவை 83)
சீகன், ஜெர்மனி
குடியுரிமைஅமெரிக்கா, ஜெர்மனி [1]
துறைஉயிரியல் கட்டமைப்பு
தாழ்வெப்ப எலக்ட்ரான் நுண்ணோக்கி
பணியிடங்கள்கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சைமருத்துவர்கள் கல்லூரி, உயிர் வேதியல் மற்றும் மூலக்கூறு உயிர் இயற்பியல் துறை
கல்விஃப்ரைபர்க் பல்கலைக்கழகம் (BS)
லுட்விக் மாக்ஸிமில்லியன்ஸ் முனிச் பல்கலைகழகம் (MS)
Max Planck Society
முனிச் தொழில்நுட்ப பல்கலைகழகம் (PhD)
ஆய்வு நெறியாளர்Walter Hoppe
Other academic advisorsRobert M. Glaeser, Robert Nathan
அறியப்படுவதுஒற்றைத் துகள் எலக்ட்ரான் நுண்ணோக்கி
ரைபோசோம் structure and dynamics
விருதுகள்Benjamin Franklin Medal in Life Science (2014)
Wiley Prize in Biomedical Sciences (2017)
வேதியியலுக்கான நோபல் பரிசு (2017)
துணைவர்
Carol Saginaw (தி. 1983)
பிள்ளைகள்Ze Frank & Mariel Frank

யோக்கிம் பிராங்கு (Joachim Frank, ஜோக்கிம் பிராங்க், பிறப்பு: 12 செப்டம்பர் 1940) ஒரு ஜெர்மானிய அமெரிக்கர், கொலம்பியா பல்கலைக்கழகம், நியூயார்க் நகரம் வசிக்கும் உயிர் இயற்பியலாளர் மற்றும் உயிரியல் மூலக்கூறுகளுக்கான ஒற்றைத் துகள் தாழ்வெப்ப எலக்ட்ரான் நுண்ணோக்கி துறையை தோற்றுவித்தவர். இவர் 2017 ஆம் ஆண்டின் வேதியலுக்கான நோபல் பரிசு ரிச்சர்டு ஹென்டர்சன் மற்றும் ஜாக்ஸ் துபோகேத் ஆகியோருடன் இணைந்துப் பெற்றார்.[2] பாக்டீரியா மற்றும் யூக்கரியோட்ஸ் ஆகியவற்றிலிருக்கும் ரைபோசோமின் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டை ஆராய்வதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்தார்.

வாழ்க்கை மற்றும் ஆராய்ச்சிப் பணி[தொகு]

பிரான்க் வெய்டெனா/சீகிலில் பிறந்தார். ஃப்ரைபர்க் பல்கலைக்கழகத்தில் 1963 ஆம் ஆண்டில் இளங்கலை அறிவியல் பிரிவில் இயற்பியலில் பட்டம் பெற்றார்.[3] வால்டர் ரோல்வாகன் வழிகாட்டின்படி லுட்விக் மாக்ஸிமில்லியன்ஸ் முனிச் பல்கலைகழகத்தில் தனது ஆராய்ச்சியான தங்கம் அதன் உருகும் புள்ளியில் துணை எலக்ட்ரான் உமிழ்வு பற்றிய கட்டுரைக்குப் 1967 ஆம் ஆண்டில் பட்டயம் பெற்றார். பிரான்க் தனது முனைவர் பட்டத்தை முனிச் தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் உள்ள வால்டர் ஹோப்ஸ் மேக்ஸ் பிளான்க் ஆராய்ச்சிக் கூடத்தில் (தற்போது மேக்ஸ் பிளான்க் உயிர் வேதியல் நிறுவனம்) பட வேறுபாடு மற்றும் புனரமைப்பு முறைகளைப் பயன்படுத்தி அதிக துள்ளிய எலக்ட்ரான் நுண்ணோக்கி பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைக்காக 1970 ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றார்.

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Frank, Joachim (2017), Curriculum Vitae பரணிடப்பட்டது 2017-10-09 at the வந்தவழி இயந்திரம். Retrieved October 4, 2017.
  2. "The Nobel Prize in Chemistry 2017". The Nobel Foundation. 4 October 2017. பார்க்கப்பட்ட நாள் 6 October 2017.
  3. Entry in the University Archive Freiburg, Prüfungsausschuss für Diplom-Physiker B 11/593
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோக்கிம்_பிராங்கு&oldid=3226397" இலிருந்து மீள்விக்கப்பட்டது