ரோஜர் கோர்ன்பெர்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரோஜர் டேவிட் கோர்ன்பெர்க்
Roger.Kornberg.JPG
ரோஜர் டேவிட் கோர்ன்பெர்க்
பிறப்புஏப்ரல் 24, 1947 (1947-04-24) (அகவை 74)
செயிண்ட் லூயிசு, மிசௌரி, அமெரிக்கா
வாழிடம்அமெரிக்கா
தேசியம்அமெரிக்கா
துறைஅமைப்பு உயிரியல்
பணியிடங்கள்ஸ்டன்போர்ட் பல்கலைக்கழகம்,
யெருசலெம் ஈபுரூ பல்கலைக்கழகம்,
ஆர்வர்ட் மருத்துவப் பள்ளி
கல்வி கற்ற இடங்கள்ஆர்வர்ட் பல்கலைக்கழகம் (இளங்கலை),
ஸ்டன்போர்ட் பல்கலைக்கழகம் (முனைவர்)
அறியப்படுவதுடி.என்.எ இலிருந்து ஆர்.என்.ஏவிற்கு மரபியல் தகவல் பரவல்
விருதுகள்வேதியியல் நோபல் பரிசு (2006),
லூசா கிராஸ் ஹோர்விடுஸ் பரிசு (2006),
கைர்டுனர் நிறுவன பன்னாட்டு விருது (2000)

ரோஜர் டேவிட் கோர்ன்பெர்க் (பி. ஏப்ரல் 24, 1947) அவர்கள் அமெரிக்காவில் உள்ள மிசௌரி மாநிலத்தில் உள்ள செயிண்ட் லூயிசு என்னும் ஊரில் பிறந்தார். இவர் 2006ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு பெற்று புகழ் படைத்த அறிஞர். ரோஜர் கோர்ன்பெர்க் அவர்கள் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டன்போர்டு பல்கலைக்கழகத்தில் (Stanford University) பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இவர் செய்த ஆய்வுகளின் பயனாய் எவ்வாறு பல கண்ணறைகள் (செல், cell) கொண்ட யூகார்யோட் (Eukaryotic) வகை உயிரினங்களில், ஈரிழை டி என் ஏ (DNA) வானது ஓரிழை ஆர் என் ஏ (RNA)வாக, அடிப்படை மூலக்கூறு இயல்பின் அடிப்படையில் மாறுகின்றது என்று அறிய இயன்றது. இவ்வாய்வுகளுக்காக 2006ஆம் ஆண்டுக்கான வேதியல் நோபல் பரிசு அளிக்கப்பட்டது[1]. பேராசிரியர் ரோஜர் கோர்ன்பெர்க்கின் தந்தையார் ஆர்தர் கோர்ன்பெர்க் அவர்களும் 1959ஆம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது[2]. தந்தை ஆர்தர் கோர்ன்பெர்க் அவர்களும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

ரோஜர் கோர்ன்பெர்க் அவர்கள் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் 1967ல் பட்டம் பெற்றார். பின்னர் 1972ல் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் (பி.ஹெச்.டி) பட்டம் பெற்றார். பிறகு ஐக்கிய இராச்சியத்தில் உள்ள கேம்பிரிட்ஜ் நகரத்தில், மருத்துவ ஆய்வுக் குழுவில் மேல்முனைவர் நிலை ஆய்வுகள் நடத்தினார். 1976ல்ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உயிர்வேதியல் துறையில் துணைப்பேராசிரியராகச் சேர்ந்தார். பின்னர் 1978ல் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள உயிரியல் கட்டமைப்புத் துறையில் பேராசிரியராக மீண்டு வந்து சேர்ந்தார். 1984-1992 காலப்பகுதியில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் அவர் துறைத்தலைவராகப் பணியாற்றினார்.

நோபல் பரிசு[தொகு]

பட்டங்களும் பரிசுகளும்[தொகு]

 • 1981: எலி லில்லி விருது
 • 1982: பசனோ விருது,பசனோ நிறுவனம்
 • 1990: சிகா-ட்ரூ விருது (Ciba-Drew Award)
 • 1997: ஹார்வி பரிசு (Harvey Prize from the Technion)
 • 2000:கைர்டுனர் நிறுவன பன்னாட்டு விருது (Gairdner Foundation International Award)
 • 2002: ASBMB-மெர்க் பரிசு (ASMB-Merck Award)
 • 2002: புற்றுநோய்த்துறை ஆய்வுக்காக பாசரோவ் பரிசு (Pasarow Award)
 • 2002: சார்லே லியோபோல்ட் மாயர் பரிசு ( Le Grand Prix Charles-Leopold Mayer)
 • 2005: ஜெனெரல் மோட்டார் புற்றுநோய் ஆய்வு நிறுவனத்தின் ஆல்ஃவ்ரட் பி ஸ்லோன் ஜூனியர் பரிசு
 • 2006: வேதியியல் நோபல் பரிசு
 • 2006: லூசா கிராஸ் ஹோர்விடுஸ் பரிசு - கொலம்பியா பல்கலைக்கழகம்

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. ""Roger D. Kornberg - Facts".". Nobelprize.org. Nobel Media AB (2014. Web. 19 Jul 2015). பார்த்த நாள் 19 சூலை 2015.
 2. ""Arthur Kornberg - Facts".". Nobelprize.org. Nobel Media AB (2014. Web. 19 Jul 2015). பார்த்த நாள் 19 சூலை 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோஜர்_கோர்ன்பெர்க்&oldid=3227194" இருந்து மீள்விக்கப்பட்டது