யுரேனியப் பின் தனிமங்கள்
Jump to navigation
Jump to search

தனிம அட்டவணையில் தனிமங்கள் அவற்றின் நிலையான ஐசோடோப்புகளின் (ஓரிடத்தான்) அரை-வாழ்வுகளின் அடிப்படையில் நிறப்படுத்தப்பட்டுள்ளன..
குறைந்தது ஒரு நிலையான ஓரிடத்தானைக் கொண்டுள்ள தனிமங்கள்.
மிகச் சிறிதளவு கதிரியக்கம் கொண்ட தனிமங்கள்: இதன் அதிகூடிய நிலையான ஓரிடத்தானின் அரை-வாழ்வுக் காலம் 4 மில். ஆண்டுகளுக்கும் அதிகம்.
குறிப்பிடத்தக்க கதிரியக்கம் கொண்ட தனிமங்கள்: இதன் அதிகூடிய நிலையான ஓரிடத்தானின் அரை-வாழ்வுக் காலம் 800 முதல் 34,000 ஆண்டுகள்.
கதிரியக்கத் தனிமங்கள்: இதன் அதிகூடிய நிலையான ஓரிடத்தானின் அரை-வாழ்வுக் காலம் 1 நாள் முதல் 103 ஆண்டுகள் வரை.
கதிரியக்கம் கூடிய தனிமங்கள்: இதன் அதிகூடிய நிலையான ஓரிடத்தானின் அரை-வாழ்வுக் காலம் சில நிமிடங்கள் முதல் 1 நாள் வரை.
அதிகூடிய கதிரியக்கத் தனிமங்கள்: இதன் அதிகூடிய நிலையான ஓரிடத்தானின் அரை-வாழ்வுக் காலம் சில நிமிடங்கள் வரை.
யுரேனியப் பின் தனிமங்கள் (transuranic elements) என்பன தனிம அட்டவணையில் யுரேனியத்திற்குப் பின்னால் வரும் தனிமங்களாகும். அணுவெண் 93 முதல் அணுவெண் 117 வரையிலான தனிமங்கள் இதில் அடங்கும். இவைகள் அனைத்தும் கதிரியக்கமுடையன. சில தனிமங்களுக்கு இன்றுவரை பெயரிடப் படவில்லை.