மே-பிரிட் மோசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மே-பிரிட் மோசர்
May-Britt Moser 2014.jpg
மே-பிரிட், எட்வர்டு மோசர் இணையர் கடந்த பத்தாண்டுகளில் மூளையில் இடம் குறித்த நினைவு எவ்வாறு பதியப்படுகிறது என்பதைக் குறித்த முன்னோடியான ஆய்வினை நிகழ்த்தி யுள்ளனர். 2014ஆம் ஆண்டின் நோபல் பரிசு வெற்றியாளர்கள்
பிறப்பு4 சனவரி 1963 (1963-01-04) (அகவை 60)
பாசுநாவாகு, நோர்வே
வாழிடம்டிரான்தீம்
தேசியம்நோர்வே
துறைநரம்பணுவியல்
பணியிடங்கள்காவ்லி நரம்பணுவியல் அமைப்புக்கள் கழகம் மற்றும் நினைவு உயிரியல் மையம்
அறியப்படுவதுகிரிட் கலங்கள், நரம்பணுக்கள்
விருதுகள்மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (2014)

மே-பிரிட் மோசர் (May-Britt Moser, பி: சனவரி 4, 1963) நோபல் பரிசு வென்றுள்ள நோர்வே நாட்டு உளவியலாளரும் நரம்பணுவியல் அறிவியலாளரும் காவ்லி நரம்பணுவியல் அமைப்புக்கள் கழகம் மற்றும் நினைவு உயிரியல் மையத்தின் (KI/CBM) நிறுவனரும் ஆவார். இந்த மையம் டிரான்தீம் நகரில் நோர்வீஜிய அறிவியல் தொழினுட்பப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ளது. மோசரும் அவரது கணவர் எட்வர்டு மோசரும் கடந்த பத்தாண்டுகளில் மூளையில் இடம் குறித்த நினைவு எவ்வாறு பதியப்படுகிறது என்பதைக் குறித்த முன்னோடியான ஆய்வினை நிகழ்த்தி யுள்ளனர்.

மே-பிரிட் மோசர் 2014ஆம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசை தமது கணவர் எட்வர்டுடனும் ஜான் ஓ'கீஃப் உடனும் பகிர்ந்து கொண்டுள்ளார்.[1]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "2014-ம் ஆண்டின் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு;அமெரிக்கா மற்றும் நார்வே நாட்டு விஞ்ஞானிகள் 3 மூவர் இவ்விருதை பெறுகின்றனர்". தினத்தந்தி. 6 அக்டோபர் 2014. 6 அக்டோபர் 2014 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மே-பிரிட்_மோசர்&oldid=2895697" இருந்து மீள்விக்கப்பட்டது