ழோன் திரோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ழோன் திரோல்
Jean Tirole
2019இல் ழோன் திரோல்
பிறப்புஆகத்து 9, 1953 (1953-08-09) (அகவை 70)
இத்துவா, பிரான்சு
தேசியம்பிரான்சு
நிறுவனம்துலூசு பொருளியல் பள்ளி
துறைகுறும்பொருளியல்
ஆட்டக் கோட்பாடு
தொழிலகக் கட்டமைப்பு
பயின்றகம்மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம்

பாரிசு தோஃபீன் பல்கலைக்கழகம்
இகோல் நேசனல் டெசு பொன்ட்சு எ சூசி

இகோல் பாலிடெக்னிக்
விருதுகள்ஜான் வொன் நியூமன் விருது (1998) பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு (2014)
ஆய்வுக் கட்டுரைகள்

ழோன் மார்செல் திரோல் (Jean Marcel Tirole, ஆகத்து 9, 1953) பிரெஞ்சு பொருளியல் பேராசியர் ஆவார். தொழிலகக் கட்டமைப்பு, ஆட்டக் கோட்பாடு, வங்கியியல் மற்றும் நிதி, மற்றும் உளவியல்சார் பொருளியல் துறைகளில் பணியாற்றுகிறார். துலூசு பொருளியல் பள்ளியில் உள்ள ழோன்-ழாக் லபோன் பவுண்டேசனின் தலைவராகவும் துலூசில் உள்ள தொழிலக பொருளியல் கழகத்தில் (IDEI) அறிவியல் இயக்குநராகவும் துலூசு மேம்பட்ட ஆய்வுக் கழகத்தின் (IAST) நிறுவன உறுப்பினராகவும் பொறுப்பேற்றுள்ளார். மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற பின்னர் 1984 வரை இகோல் நேசனல் டெசு பொன்ட்சு எ சூசியில் ஆய்வாளராக பணியாற்றினார். 1984–1991 காலகட்டத்தில் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில் பொருளியல் பேராசிரியராகப் பணியாற்றினார். 1998இல் பொருளியலளவை சமூகத்தின் தலைவராக விளங்கினார். 2001இல் ஐரோப்பிய பொருளியல் சங்கத்தின் தலைவராக பொறுப்பில் இருந்தார். இன்னமும் அவர் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில் வருகைப் பேராசிரியராக பணிபுரிகிறார். " சந்தைச் செல்வாக்கு மற்றும் கட்டுப்பாடு குறித்த இவரது பகுப்பாய்விற்காக" 2014ஆம் ஆண்டுக்கான பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு திரோலுக்கு வழங்கப்பட்டுள்ளது.[1]

மேற்சான்றுகள்[தொகு]

  1. Sveriges Riksbank's Prize in Economic Sciences in Memory of Alfred Nobel 2014, Sveriges Riksbank, October 13, 2014, பார்க்கப்பட்ட நாள் October 13, 2014

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ழோன்_திரோல்&oldid=3362087" இலிருந்து மீள்விக்கப்பட்டது