புரூஸ் பொய்ட்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரூஸ் பொய்ட்லர்
Bruce Beutler
Nobel Prize 2011-Press Conference KI-DSC 7512.jpg
பிறப்புதிசம்பர் 29, 1957 (1957-12-29) (அகவை 65)
சிக்காகோ, இலினோய், ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைநோய்த் தடுப்பாற்றல்
பணியிடங்கள்டெக்சாசு பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்சிக்காகோ பல்கலைக்கழகம்
விருதுகள்2011 மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு

புரூஸ் அலன் பொய்ட்லர் (Bruce Alan Beutler, பிறப்பு: டிசம்பர் 29, 1957) அமெரிக்க நோய்த்தடுப்பாற்றல் மருத்துவரும், மரபுவியலரும்[1] ஆவார். இவரும், ரால்ஃப் ஸ்டைன்மனும், சூல்ஸ் ஹொஃப்மனும் இணைந்து 2011 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசினைப் பகிர்ந்து கொண்டனர்[2]. ஒரு நோய்க் கிருமி உடலுக்குள் நுழைந்த பின்னர் அதனை உணர்ந்து நோயெதிர்ப்பு ஆற்றல் எவ்வாறு செயல்பட ஆரம்பிக்கிறது, கிருமியை அழிக்க என்னென்ன முதற்கட்ட நடவடிக்கைகளை எடுக்கிறது என்பதை பேராசிரியர்கள் பொய்ட்லரும், ஹொஃப்மனும் கண்டறிந்திருந்தனர். நோபல் பரிசின் மற்றைய பாதி கனடாவைச் சேர்ந்த ரால்ஃப் ஸ்டைன்மன் என்பவருக்கு "புதிய அச்சுறுத்தல்கள் வர வர அவற்றுக்கேற்ப நோய் எதிர்ப்புக் கட்டமைப்பின் ஒரு பிரிவு எப்படி உருமாறிக்கொள்கிறது" என்பதைக் கண்டுபிடித்தமைக்காகக் கொடுக்கப்பட்டது[3].

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.jinfo.org/Nobels_Medicine.html.
  2. ""Bruce A. Beutler - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. 19 சூலை 2015 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
  3. 3.0 3.1 நோபல் நிறுவனம்(3 அக்டோபர் 2011). "Nobel Prize in Physiology or Medicine 2011". செய்திக் குறிப்பு.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரூஸ்_பொய்ட்லர்&oldid=3455983" இருந்து மீள்விக்கப்பட்டது