தாமஸ் ஜான் சார்ஜெண்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாமஸ் ஜான் சார்ஜெண்ட்

தாமஸ் ஜான் சார்ஜெண்ட் (Thomas J. Sargent) ஓர் அமெரிக்க பொருளாதார வல்லுநர் ஆவார். 1943ம் ஆண்டு ஜூலை திங்கள் 19ம் தேதி பிறந்தார்.

படிப்பு[தொகு]

1964ல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் (பி.ஏ) இளங்கலை பட்டம் பெற்றார். அதே ஆண்டு இவரை சிறந்த கல்விமான் என்று பெர்க்லி பல்கலைக்கழகம் அறிவித்தது. இவர் அமெரிக்காவில் பொருளாதாரத்தில் பட்டம் வாங்கியுள்ளார். பெருமப்பொருளியலின் பண பொருளாதாரம் மற்றும் நேரம் தொடர்பான எக்னாமெட்ரிக்ஸ் துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ளார். 1968ம் ஆண்டு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

தொழில்[தொகு]

1970 முதல் 1971 வரை பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திலும், 1971 முதல் 1987 வரை மின்னசோட்டா பல்கலைக்கழகத்திலும், 1991 முதல் 1998 வரை சிகாகோ பல்கலைக்கழகத்திலும், 1998 முதல் 2002 வரை ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்திலும், மற்றும் 2009ம் ஆண்டு பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திலும் பொருளாதார பேராசிரியராக வேலை செய்தார். தேசிய அறிவியல் அகாடமி இவரை 1976 முதல் 1983 வரையான காலத்திற்க்கு பொருளாதார பொருப்பாளராக நியமித்தது.

பட்டம்[தொகு]

இவர் உலக அளவில் பொருளாதாரத்துறையில் 7வது இடத்தில் இருந்தார். 2011 ம் ஆண்டுக்கான நோபல் பரிசை கிறிஸ்டோபர் ஆல்பர்ட் சிம்ஸ் உடன் சேர்ந்து 10.10.2011 அன்று பெற்றுக்கொண்டார். பருப்பொருளியல் (macro-economy) என்பது பற்றிய ஆராய்சியில் காரண விளைவுகள் என்பது பற்றி கூறியமைக்காக இப்பரிசு வழங்கப்பட்டது.