கிறிஸ்டோபர் ஆல்பர்ட் சிம்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிறிஸ்டோபர் ஆல்பர்ட் சிம்ஸ்
2011 ஆண்டிலிருந்து
பிறப்புஅக்டோபர் 21, 1942 (1942-10-21) (அகவை 81)
வாசிங்டன், டி. சி.
தேசியம்ஐக்கிய அமெரிக்கா
நிறுவனம்பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்
யேல் பல்கலைக்கழகம்
மின்னசட்டா பல்கலைக்கழகம்
ஹார்வர்டு பல்கலைக்கழகம்
துறைபருப்பொருளியல்
பொருளியல்
Time series
பயின்றகம்ஹார்வர்டு பல்கலைக்கழகம், (A.B, PhD)
பங்களிப்புகள்Use of vector autoregression
விருதுகள்Nobel Memorial Prize in Economic Sciences (2011)
ஆய்வுக் கட்டுரைகள்

கிறிஸ்டோபர் ஆல்பர்ட் சிம்ஸ் (பிறப்பு அக்டோபர் 21, 1942) ஒரு அமெரிக்க பொருளியலாளர் மற்றும் பருப்பொருளியலாளர். தற்போது இவர் பிரின்ஸ்டன் பல்கலைகழகத்தில் பேராசிரியாராக உள்ளார்.[1] தாமஸ் ஜான் சார்ஜெண்ட் உடன் இணைந்து கிறிஸ்டோபர் சிம்ஸ் பருப்பொருளியல் விளைவுகள் மற்றும் காரணிகள் குறித்த அனுபவ ஆராய்ச்சிக்காக 2011 ஆம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.[2][3]

வாழ்க்கை[தொகு]

சிம்ஸ் வாசிங்டன், டி. சி.யில் பிறந்தார். அவரது தந்தை ரூத் போடுமேன், ஜனநாயக கட்சியின் அரசியல்வாதி.[4] ரூத் ஒரு ஆங்கில மற்றும் வடக்கு ஐரிஸ் வம்சாவழியில் வந்தவர். அவரது தாய் பாதி யுதராகவும் மற்றும் பாதி ஆங்கில கலப்பு வம்சாவழியாகவும் இருந்தார்.[5] அவருடைய மாமா மார்க் லிசர்சன் யேல் பொருளாதார நிபுணராக இருந்தார்.[6] சிம்ஸ் 1963 ஆம் ஆண்டில் ஹார்வார்டு பல்கலைகழகத்தில் கணிதத்தில் பட்டம் பெற்றார். 1968 ஆம் ஆண்டு ஹார்டுவிக் மேற்பார்வையில் ஹார்வார்டில் சிம்ஸ் தனது முனைவர் பட்டம் (PhD) பெற்றார்.[7] அவர் 1963-64 இடைபட்ட காலப்பகுதியில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பட்டதாரி மாணவராகவும் இருந்தார். அவர் ஹார்வர்டு, யேல் பல்கலைக்கழகத்திலும், 1999 ஆம் ஆண்டு முதல், பிரின்ஸ்டன் நிறுவனத்திலும் ஆசிரியராக இருந்தார்.

அவர் மினசொட்டா பல்கலைக்கழகத்தில் தனது நீண்டகால வாழ்வை கழித்தார், அங்கு 1970 முதல் 1990 வரை ஆசிரியராக இருந்தார்.[8] சிம்ஸ் பொருளாதார சமூகத்தில் 1974 இல் இருந்து உறுப்பினராக உள்ளார்,[9] அமெரிக்க அறிவியல் மற்றும் கலை கழகத்தில் 1988 ஆம் ஆண்டு முதல் உறுப்பினராகவும், தேசிய அறிவியல் கழகத்தில் 1989 இல் இருந்து உறுப்பினராகவும் உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Christopher A Sims". Thomson Reuters website. Archived from the original on அக்டோபர் 17, 2011. பார்க்கப்பட்ட நாள் October 10, 2011.
  2. "Nobel prize for economics awarded to two Americans". BBC News website. October 10, 2011. http://www.bbc.co.uk/news/business-15241454. பார்த்த நாள்: October 10, 2011. 
  3. "The Prize in Economic Sciences 2011". Nobelprize.org. December 10, 2008. பார்க்கப்பட்ட நாள் October 10, 2011.
  4. https://www.nytimes.com/2012/06/14/nyregion/ruth-sims-first-woman-elected-to-lead-greenwich-conn-dies-at-92.html
  5. "Christopher A. Sims - Biographical". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 31 May 2017.
  6. Mark Leiserson: Noted international economist
  7. http://www.dictionaryofeconomics.com/article?id=pde2012_S000550
  8. "CV (Christopher A. Sims)" (PDF). Princeton University. பார்க்கப்பட்ட நாள் 31 May 2017.
  9. Fellows of the Econometric Society as of February 2011 பரணிடப்பட்டது திசம்பர் 10, 2008 at the வந்தவழி இயந்திரம், Econometric Society, Retrieved October 12, 2011.