எஸ்தர் டுஃப்லோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எஸ்தர் டுஃப்லோ
எஸ்தர் டுஃப்லோ (2009)
பிறப்பு25 அக்டோபர் 1972 (1972-10-25) (அகவை 48)
பாரிஸ், பிரான்சு
நிறுவனம்மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையம்
துறைசமூகப் பொருளியல், பொருளாதார வளர்ச்சி
தாக்கம்அமர்த்தியா சென்[1]
அபிஜித் பேனர்ஜீ
மைக்கேல் க்ரெமர்
தாக்கமுள்ளவர்பராக் ஒபாமா[2]
ஆய்வுக் கட்டுரைகள்

எஸ்தர் டுஃப்லோ (Esther Duflo, அக்டோபர் 25,1972) பிரெஞ்சுப் பொருளாதார வல்லுனர் ஆவார். இவர் அப்துல் லதீஃப் ஜமீல் வறுமை நடவடிக்கை ஆய்வகத்தின் துணை நிறுவனர் மற்றும் இயக்குனர் ஆவார். மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையத்தில் பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புத் துறையின் பேராசிரியராக உள்ளார். தேசியப் பொருளாதார ஆய்வுப் பணியகத்தின் சக ஆய்வாளராகவும் இவர் உள்ளார்[3]. மேலும் பொருளாதார ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கானப் பொருளாதாரத் திறனாய்வுப் பணியகத்தில் வாரிய உறுப்பினராக உள்ளார் (BREAD),[4]. பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆய்வு மையத்தின் பொருளாதார வளர்ச்சித் திட்ட இயக்குனராகவும் உள்ளார்[5]. இவரது ஆய்வுகள் வளரும் நாடுகளின் பொருளாதரச் சூழ்நிலையியல், இல்லற நடவடிக்கைகள், கல்வி, சுகாதாரம், மதிப்பீட்டு கொள்கை ஆகியவை குறித்தவையாகும். இவர் அபிஜித் பேனர்ஜீ, டீன் கர்னல், மைக்கேல் க்ரெமர், ஜான் எ. லிஸ்ட், செந்தில் முல்லைநாதன் ஆகியோருடன் இணைந்து, பொருளாதாரத் தொடர்புகளுக்கான ஆய்வில் புதிய அணுகுமுறைகளைக் கண்டறிவதில் முக்கிய உந்து சக்தியாக விளங்கினார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்தர்_டுஃப்லோ&oldid=3027753" இருந்து மீள்விக்கப்பட்டது