51 பெகாசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பெகாசஸ் விண்மீன் தொகுதியில் 51 பெகாசியின் அமைவு சிவப்பு வட்டத்தால் காட்டப்பட்டுள்ளது.

51 பெகாசி (51 Pegasi) என்பது சூரியனைப் போன்ற ஒரு விண்மீன் ஆகும். இது பூமியில் இருந்து 15.4 பார்செக் (50.1 ஒளியாண்டுகள்) தொலைவில் பெகாசசு என்ற விண்மீன் தொகுதியில் அமைந்துள்ளது. இதுவே சூரியனுக்கு அடுத்ததாகக் கோள்களைக் கொண்டிருக்கக்கூடிய விண்மீன் என 1995 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது.

இக்கண்டுபிடிப்பு பற்றிய தகவலை 1995, அக்டோபர் 6 ஆம் நாள் மைக்கல் மேயர் மற்றும் டிடியர் குவெலொஸ் ஆகியோர் அறிவித்தனர்[1].

இதனை பூமியில் இருந்து தொலைக்காட்டி மூலமாகவோ, அல்லது இரவு நேரங்களில் வெறும் கண்ணினாலோ பார்க்கக் கூடியதாக உள்ளது. 51 பெகாசி ஒரு குறு விண்மீன் எனவும் இது 7.5 பில்லியன் ஆண்டுகள் பழமையானதென்றும் (சூரியனை விடப் பழமையானது), 4-6 விழுக்காடு அதிக பருமனுடையதென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகளவு உலோகங்களையும், குறைந்தளவு ஐதரசனையும் கொண்டுள்ளது.

கோள்கள்[தொகு]

51 பெகாசி பி என்பது பெகாசியைச் சுற்றி வரும் கோள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. பெகாசியைச் சுற்றிவருவதாக மேலும் கண்டறியப்பட்டுள்ள கோள்கள் c, d, e எனப் பெயரிடப்பட்டுள்ளன. 51 பெகாசி பி கோள் "பெலெரொபோன்" எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் பல வானியல் அறிஞர்கள் அதனை மேலும் அவதானித்து அதன் இயல்புகளை அறிவித்துள்ளனர். இது தனது சூரியனான 51 பெகாசசுக்கு மிக அண்மையில் சுற்றுவதாகவும், இதனால் அதன் வெப்பநிலை கிட்டத்தட்ட 1200 செல்சியஸ் எனவும், வியாழன் கோளை விட அரைப்பங்கு பொருண்மையைக் கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Mayor, Michel; Queloz, Didier (1995). "A Jupiter-mass companion to a solar-type star". Nature 378: 355 – 359. doi:10.1038/378355a0. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=51_பெகாசி&oldid=1995824" இருந்து மீள்விக்கப்பட்டது