உள்ளடக்கத்துக்குச் செல்

புடைநொடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பார்செக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புடைநொடி(parsec) என்பது "புடைபெயர்சியின் நொடி"(parallax of second) என்ற வாக்கியத்தின் குறுக்கம் ஆகும்.[1] புடைநொடி என்பது வானியல் அலகுகள் படி 3.26 ஒளியாண்டு ஆகும். இதை 1913ஆம் ஆண்டு ட(ர்)னர் என்ற வானியலார் கண்டறிந்தார்.[2]

மதிப்பீடு

[தொகு]

  • அஃதாவது ஒரு செங்குத்து முக்கோணத்தில்,
  1. எடுத்துக்கொள்ளும் பாகை 1 பாகையில் 3600 பங்கு இருக்க வேண்டும்.(1 வில்நொடி(arcsecond))
  2. எதிர் பக்கம் ஒரு வானியல் அலகாக இருக்க வேண்டும்.
  3. இப்போது கிடைக்கும் அடுத்த பக்கத்தின் நீளமே ஒரு புடைநொடி.
  4. இதன் படியே வானியலார் புடைநொடியை கணக்கிட்டனர்.

கன அலகு

[தொகு]
  • இதை கன அளவில்(volume) கொடுக்கும் போது பு.நொ.3 (pc3) என்று கொடுப்பர்.[3]
  • எடுத்துக்காட்டு
  1. சூரியனிலிருந்து பிராக்சிமா செஞ்சாரி நட்சத்திரத்தின் தூரம் 1.29 பு.நொ.
  2. பால்வழி மையத்திலிருந்து சூரியனின் தூரம் 8,000 பு.நொ.
  3. ஊர்ட் மேகங்களின் விட்டம் 0.6 பு.நொ.

மேற்கோள்

[தொகு]
  1. Dyson, F. W., Stars, Distribution and drift of,The distribution in space of the stars in Carrington's Circumpolar Catalogue. In: Monthly Notices of the Royal Astronomical Society, Vol. 73, p.334-342. March, 1913.[1]
    "There is a need for a name for this unit of distance. Mr. Charlier has suggested Siriometer ... Professor Turner suggests PARSEC, which may be taken as an abbreviated form of 'a distance corresponding to a parallax of one second'."
  2. Dyson, F. W., "The distribution in space of the stars in Carrington's Circumpolar Catalogue" (1913) Monthly Notices of the Royal Astronomical Society, vol. 73, pp. 334–42, p. 342 fn..
  3. Astrophysical Journal, Harvard
"https://ta.wikipedia.org/w/index.php?title=புடைநொடி&oldid=2744924" இலிருந்து மீள்விக்கப்பட்டது