வலைவாசல்:வானியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


வானியல் வலைவாசல்
.
வானியல் வலைவாசல்
தொகு 

வானியல் - அறிமுகம்

Crab Nebula.jpg

வானியல் (Astronomy) என்பது விண்பொருட்கள் (அதாவது இயற்கைத் துணைக்கோள்கள், கோள்கள், விண்மீன்கள், விண்முகில்கள் மற்றும் விண்மீன் பேரடைகள்) பற்றியும், அவற்றின் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் படிப்படியான வளர்ச்சி பற்றியும், மற்றும் பூமிக்கும் அதன் காற்று மண்டலத்துக்கும் வெளியே நடைபெறும் நிகழ்வுகளை (உ-ம்: மீயொளிர் விண்மீன் வெடிப்பு, காமா கதிர் வெடிப்பு, விண்-நுண்ணலை-பின்புலம் (Cosmic microwave background) போன்றவற்றை) அவதானிப்பதிலும், விளக்குவதிலும் ஈடுபட்டுள்ள ஒரு அறிவியலாகும். தொடர்புடைய, ஆனாலும் முற்றிலும் தனித்துவமான துறையான அண்டவியல் என்பது அண்டத்தைப் பற்றி முழுமையாக ஆய்வதாகும்.தொகு 

சிறப்புக் கட்டுரை

பல்வேறு பிரகாசமான வாயு மற்றும் தூசிச் சீறல்கள் தெரிகின்றன.

வால்வெள்ளி (Comet) (தமிழக வழக்கில்:வால்நட்சத்திரம்) சிறுகோளை ஒத்த அளவுள்ள, ஒப்பீட்டளவில் சிறியதொரு விண்பொருளாகும். எனினும் இது பெரும்பாலும் பனிக்கட்டியாலானது. நமது சூரியக் குடும்பத்தில், வால்வெள்ளிகளின் சுற்றுப்பாதை, புளூட்டோவையும் தாண்டிச் செல்கிறது. சூரியக் குடும்பத்தின் உட்பகுதிக்குள் வரும் வால்வெள்ளிகளுள் பெரும்பாலானவை மிக நீண்ட நீள்வளையச் சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளன. "dirty snowballs," என்று பெரும்பாலும் வர்ணிக்கப்படும் வால்வெள்ளிகள், பெருமளவு உறைந்த காபனீரொட்சைட்டு, மெத்தேன் மற்றும் நீர் என்பவற்றுடன் தூசி, கனிம (aggregates) என்பனவும் கலந்து உருவானவை.


தொகு 

உங்களுக்குத் தெரியுமா?

Stonehenge Clouds.jpg
 • பாரிய கற்கள் போன்றவற்றை ஒழுங்குபடுத்தி உருவாக்கிய அமைப்புக்கள் வானியல் நோக்கங்களைக் கொண்டிருந்ததாகக் கருதப்படுகின்றது. "ஸ்டோன்ஹெஞ்ச்" (படம்) இத்தகைய அமைப்புக்களுக்கு எடுத்துக்காட்டு ஆகும்.
 • பூமியின் நிலவு முதலாவதாக விண்வெளி ஆய்வுக்குட்படுத்தப்பட்ட விண்வெளிப் பொருள் (பூமி தன்னைத் தவிர) ஆகும்.
 • சனி எனும் கோளுடைய பெயரின் கருத்து போருக்கான ரோமானியக் கடவுள் என்பதாகும்.
 • மீயொளிர் விண்மீன் வெடிப்பு (supernova) என்பது அளவில் பெரிய விண்மீன்கள் தம் எரிபொருள் எரிந்து தீர்ந்தபின் மாபெரும் அளவில் ஒளியாற்றலை வீசி பேரொளியுடன் வெடிப்பதை குறிக்கும்.
 • வானியல் அலகின் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட நீளம் 149 597 870 691 ± 30 மீட்டர்கள் (150 மில்லியன் கிலோமீட்டர்கள் அல்லது 93 மில்லியன் மைல்கள்) ஆகும்.
 • ஒரு சராசரி பேரடையில் 10 மில்லியன் முதல் ஒரு டிரில்லியன் (107 முதல் 1012) வரையான எண்ணிக்கையில் விண்மீன்கள் இருக்கும்.


தொகு 

நீங்களும் பங்களிக்கலாம்

Nuvola apps korganizer.png
 • வானியல் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
 • வானியல் தொடர்பான குறுங்கட்டுரைகளை விரிவுபடுத்தலாம்.
 • வானியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
 • வானியல் தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
 • வானியல் தொடர்பான பகுப்புகளை ஒழுங்கமைத்து சீர்படுத்தலாம்.
 • வானியல் தேவைப்படும் கட்டுரைகள் பகுதியில் கோரப்பட்டுள்ள கட்டுரைகளை உருவாக்கலாம்.


தொகு 

விக்கி நூல்கள்

Ta wiki books.png

விக்கிமீடியாவின் ஒரு திட்டமான விக்கி நூல்களில் சிறுவர் நூல்கள் பகுதியில் இந்நூல்கள் உள்ளன. இது வானியலின் ஒரு பகுதியான சூரியக் குடும்பம் பற்றியது.

சிறுவர் நூல்கள்

தொகு 

முக்கிய செய்திகள்

Wikinews-logo.svg
தொகு 

சிறப்புப் படம்

Kepler11.png

கெப்லர்-11 என்பது சூரியனைப் போன்ற ஒரு விண்மீன். இந்த விண்மீனைக் குறைந்தது ஆறு புறக்கோள்கள் குறைந்த சுற்றுப்பாதையுடன் சுற்றிவருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக 2011, பெப்ரவரி 2 ஆம் நாள் அறிவிக்கப்பட்டது. இது பூமியில் இருந்து ஏறத்தாழ 2,000 ஒளியாண்டுகள் தூரத்தில், சிக்னசு என்ற விண்மீன் குழுவின் திசையில் அமைந்துள்ளது. நாசாவின் கெப்லர் விண்வெளித் தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. படத்தில் கெப்லரும் அதன் புறக்கோள்களும் காட்டப்பட்டுள்ளன.

தொகு 

பகுப்புக்கள்

தொகு 

விக்கித் திட்டங்கள்

தொகு 

தொடர்பானவை

தொகு 

பிற விக்கிமீடியா திட்டங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:வானியல்&oldid=1678607" இருந்து மீள்விக்கப்பட்டது