உள்ளடக்கத்துக்குச் செல்

வலைவாசல்:கணினியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


கணினியியல் வலைவாசல்
கணினியியல் வலைவாசல்


தொகு 

கணினியியல் - அறிமுகம்

கணினியை மையமாக கொண்ட துறை கணினியியல் ஆகும்.கணினி வன்பொருள், மென்பொருள், கணினியின் பயன்பாடுகள், கணிமையின் அடிப்படைகள் என கணினியை மையமாக கொண்ட பல உட்துறைகளை ஒருங்கே இச் சொல் குறிக்கிறது. அதன் துணை தத்துவார்த்த மற்றும் நடைமுறை துறைகளில் பல்வேறு வகையாக பிரிக்கலாம்.

"கணினியியல்" (Computer Science) என்ற சொல் முதலில் 1959ல் கம்யூனிக்கேஷன்ஸ் ஆப் ஏசிம் (Commuincations of ACM) என்ற மாத நாளிதழில் ஓரு கட்டுரையில் வெளிவந்தது.

கணினியியலை மூன்று கருத்தியல்களாக பிரிக்க வேண்டும் என்று பல கணிணி அறிவியலறிஞர்கள். கருதினர்.பீட்டர் வேக்னர் அவை அறிவியல், தொழில்நுட்பம், மற்றும் கணிதம் கருத்தியல்களாக பிரிக்க வேண்டும் என வாதிட்டார்.பீட்டர் டென்னிங் தலைமையிலான குழு கோட்பாடு, சுருக்க (மாதிரியமைத்தல்), மற்றும் வடிவமைப்பு ஆகியவை எனக் கருதியது.


தொகு 

கணினியியல் - சிறப்புக் கட்டுரை

கணினி மென்பொருள்

கணினி மென்பொருள் அல்லது மென்பொருள் என்பது கணிப்பொறி நிரல்கள் மற்றும் கணிப்பொறிகளால் படிக்கவும் எழுதப்படவும் முடிகின்ற மற்றும் பிற வகைப்பட்ட தகவல் போன்ற டிஜிட்டல் முறையில் சேமிக்கப்படும் தரவு என்று முதன்மையாகப் பயன்படுத்தப்படுகின்ற பொதுவான ஒரு சொல்லாகும். இன்று இந்தச் சொல் திரைப்படச் சுருள், நாடாக்கள் மற்றும் பதிவுப்பொருட்கள் போன்று வழக்கமாக கணிப்பொறியோடு தொடர்புகொண்டிராத தரவையும் உள்ளடக்கியிருக்கிறது.. இந்த சொற்பதம் வன்பொருள் (அதாவது உடலியல் சாதனங்கள்) என்ற பழைய சொல்லுக்கு முரணாக இருக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது; வன்பொருள் என்பதற்கு முரணாக மென்பொருள் என்பது கண்ணுக்குப் புலப்படாதது, அதாவது "தொட இயலாதது" என்பதைக் குறிக்கிறது. மென்பொருள் என்பதும் சிலசமயங்களில் மிகவும் குறுகலான பொருளிலேயே, அதாவது பயன்பாட்டு மென்பொருட்கள் என்பதாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

கணினி வன்பொருள்

ஒரு தனிப்பட்ட கணினி, கணினி வன்பொருள் களின் பல்வேறு இருப்புக் கூறுகளால் ஆனது, அதன் மீது ஒரு இயங்குதள அமைப்பு மற்றும் இயக்கபவரின் விருப்ப செயல்பாடுகளைச் செய்வதற்கான மென்பொருளும் நிறுவப்பட்டுள்ளது.


தொகு 

உங்களுக்குத் தெரியுமா?

கணினி என்பது எண் முதலான தரவுகளை உட்கொண்டு, முறைப்படி கோர்த்த ஆணைக் கோவைகளைச் செயற்படுத்தும் ஒரு கருவி. ஒரு பணியைச் செய்ய, அதனைப் பல கூறாகப் பகுத்து, எதன் பின் எதனைச் செய்ய வேண்டும் என்று எண்ணி, கணினியுள் இடுவதற்காகத் தொகுக்கப்பட்ட ஆணைக் கோவை அல்லது கட்டளைக் கோவையானது, செய்நிரல் எனப்படும். கணினியில் இப்படி செய்நிரல்களைச் சேமித்து வைத்து பணி செய்ய இயக்குவது தனிச் சிறப்பாகும். கணினிக்கு உள்ளிடும் தரவுகள் எவ்வடிவில் இருந்தாலும் (ஒலி, ஒளி, அழுத்தம் முதலியன) அவை கணினியின் இயக்கத்துக்கு அடிப்படையான 0, 1 ஆகிய எண் கோர்வைகளாக மாற்றப்பட்டே உட்கொள்ளப் படுகின்றன.

தொகு 

நீங்களும் பங்களிக்கலாம்

  • கணினியியல் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கணினியியல் தொடர்பான குறுங்கட்டுரைகளை விரிவுபடுத்தலாம்.
  • கணினியியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • கணினியியல் தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • கணினியியல் தொடர்பான பகுப்புகளை ஒழுங்கமைத்து சீர்படுத்தலாம்.
  • கணினியியல் தேவைப்படும் கட்டுரைகள் பகுதியில் கோரப்பட்டுள்ள கட்டுரைகளை உருவாக்கலாம்.


தொகு 

விக்கி நூல்கள்

விக்கிமீடியாவின் ஒரு திட்டமான விக்கி நூல்களில் கணினியியலும் பொறியியலும் பகுதியில் இந்நூல்கள் உள்ளன.

கணினியியல்

தொகு 

படம்

தனிப்பட்ட கணினியில் வன்பொருள்.1. கணினித்திரை2. மதர்போர்ட்3. சி.பி.யு.4.ரேம் நினைவகம் 5. விரிவாக்க கார்ட் 6. மின் அமைப்பு 7. சி.டி.ரோம் டிரைவ் 8.வன் தகடு9. விசைப்பலகை 10. மௌஸ்
தொகு 

பகுப்புக்கள்

தொகு 

விக்கித் திட்டங்கள்


தொகு 

தொடர்புடைய வலைவாசல்கள்

தொகு  

தொடர்புடைய வலைவாசல்கள்


கணிதம்கணிதம்
கணிதம்
:தொழில்நுட்பம்:தொழில்நுட்பம்
:தொழில்நுட்பம்
அறிவியல்அறிவியல்
அறிவியல்
மின்னணுவியல்மின்னணுவியல்
மின்னணுவியல்
கணிதம் தொழில்நுட்பம் அறிவியல் மின்னணுவியல்
தொகு 

பிற விக்கிமீடியா திட்டங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:கணினியியல்&oldid=1946217" இலிருந்து மீள்விக்கப்பட்டது