உள்ளடக்கத்துக்குச் செல்

இயற்கைத் துணைக்கோள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(துணைக்கோள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களின் சில துணைக்கோள்கள்
வியாழன் மற்றும் அதன் நான்கு மிகபெரிய துணைக்கோள்கள்

இயற்கைத் துணைக்கோள் (Natural satellite) அல்லது நிலா என்பது ஒரு கோளின் ஈர்ப்பு விசையால் அக்கோளைச் சுற்றி வரும் இயற்கையில் அமைந்த ஒரு பொருள். நமது சூரியக் குடும்பத்தில் 173 இயற்கைத் துணைக்கோள்களும்[1][2] குறைந்தது 8 குறுங்கோள்களும் உள்ளன. [3] பூமியைச் சுற்றி வரும் நிலா அதன் ஒரே இயற்கையான துணைக்கோள் ஆகும். இதே போல வியாழனை 63 துணைக்கோள்கள் சுற்றி வருகின்றன. கலீலியோ தம் காலத்திலேயே (கி.பி. 1610ல்) வலு குறைந்த தொலைநோக்கியைக் கொண்டு வியாழனைச் சுற்றி நான்கு துணைக்கோள்கள் இருப்பதைக் கண்டார். நமது சூரியக் குடும்பத்தில் புதன் மற்றும் வெள்ளியைத் தவிர்த்து அனைத்துக் கோள்களுக்கும் துணைக்கோள்கள் உள்ளன. அதே போல் மற்ற நட்சத்திரங்களைச் சுற்றி வரும் கோள்களுக்கும் துணைக்கோள்கள் இருப்பதற்கான வாய்ப்பு உள்ள போதும், அது இன்னும் நிரூபிக்கப்படாமலேயே உள்ளது.

பொதுவாக நிலாக்கள் அதன் கோள்களின் துவக்க நிலையிலேயே உருவாகி விடுகின்றன. இத்துணைக்கோள்கள் அதன் முதன்மைக்கோளின் பகுதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. முதன்மைக் கோளின் துவக்க காலத்தில் அதன் அருகில் திரண்டிருந்த பொருட்கள் கோளின் நிறையால் கவரப்பட்டு ஒருங்கிணைந்து பிறகு அதன் ஈர்ப்பு விசையால் அதற்கு துணைக்கோளாகவும் ஆகியிருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் புற விண்கற்கள் மோதலின் மூலம் முதன்மைக் கோளின் ஒரு பகுதி அதனை விட்டுப் பிரிந்து அதன் துணைக் கோளாகவுமாக வாய்ப்புண்டு.

நிலவின் எடைக்கும் புவியின் எடைக்கும் உள்ள விகிதமானது மற்ற துணைக்கோள் - கோள் எடை விகிதத்தை விட மிகவும் அதிகம். மேலும் நிலவின் வட்டப்பாதையானது சூரியனை ஒப்பீடு செய்யும் போது உட்குழிந்து (concave) இருக்கும். [4]

குள்ள கோள்களைப் பொருத்தவரை சிரிஸ் மற்றும் மெக்மெக்கெவிற்கு இயற்கை துணைகோள்கள் கிடையாது. புளூட்டோ கிரகத்திற்கு சரோன் என்ற ஒரு பெரிய துணைகோளும் நான்கு சிறிய துணைகோள்களும் உண்டு. [5] புளூட்டோ– சாரோன் இணையின் பொருண்மை மையம் அவற்றிற்கு இடையில் உள்ள திறந்த வெளியில் உள்ளதால் அது விசித்திரமாக உள்ளது. பெரும்பாலும் இது இரட்டை கோள்களுக்கே உண்டான ஓர் அம்சமாகும்.


துணைக்கோள்களைக் கொண்டுள்ள கோள்கள் சில

[தொகு]
பத்தொன்பது துணைக்கோள்கள் அளவில் பெரியதாக உள்ளதால் வட்ட வடிவில் உள்ளன. சனி கோளின் துணைக்கோளான டைட்டனில் வளி மண்டலம் உள்ளது.

Tidal locking

[தொகு]

பெரும்பாலான வழக்கமான நிலாக்கள் (குறைந்த தூரம் மற்றும் சாய்வு நிலையில் உள்ளவை) அவை சார்ந்திருக்கும் கோள்களுடன் tidally locked ஆக இருக்கும். அதாவது எந்நேரமும் அந்த நிலவின் ஒரு முகத்தை மட்டுமே அந்த கோளில் இருந்து காண முடியும். ஆனால் மிகப்பெரிய கிரகங்களை சுற்றி வரும் நிலவுகள், அவற்றின் தூரம் காரணமாக ஒழுங்கற்றதாக இருக்கும். உதாரணம்: வியாழனின் துணைக்கோளான ஹிமாலியா, சனியின் துணைக்கோளான ஃபோப், நெப்டியூனின் துணைக்கோளான நிரிட். இவற்றின் சுழற்சிக் காலம் சில மணிநேரங்களாக இருக்கும் போதிலும் இவை அந்த கோளை சுற்றி வர பல நூறு நாட்கள் ஆகும்.

துணைக்கோளின் துணைக்கோள்

[தொகு]

"துணைக்கோளின் துணைக்கோள்" (மற்றொரு கோளின் துணைக்கோளை சுற்றி வரும் துணைக்கோள்கள்) என்பது இதுவரை கண்டறியபடவில்லை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், முதன்மை துணைக்கோளின் அலை விளைவுகள் இது போன்ற ஒரு அமைப்பை நிலையற்றதாக்கி விடும். இருப்பினும் சனிக்கிரகத்தின் இயற்கை துணைக்கோளான ரியாவை சுற்றி உள்ள வளையங்களை ஆராயும்போது ரியாவினை சுற்றி வருபவற்றிற்கு நிலையான வட்டப்பாதை இருப்பதற்கான சாத்தியக்கூறு வலுவடைகிறது. [6] ஆனால் காசினி செயற்கை கோள் எடுத்த படங்கள் ரியாவை சுற்றி உள்ள வளையங்களை கண்டறிய தவறிவிட்டன. [7]

புவியின் துணைக்கோள்

[தொகு]
நிலவு, புவியின் துணைக்கோள்

புவியின் துணைக்கோள் சந்திரன் ஆகும். துணைக்கோள்கள் பொதுவாக சுய ஒளியைக்கொண்டிருப்பதில்லை.

செவ்வாயின் துணைக்கோள்கள்

[தொகு]
போபொசு மற்றும் டெய்மொசு சுற்றுவட்டப்பாதை

செவ்வாயின் துணைக்கோள்கள் 2 ஆகும். அவையாவன போபொசு (14 மைல் விட்டம்) மற்றும் டெய்மொசு (8 மைல் விட்டம்). இரு துணைக்கோள்களும் 1877 இல் ஆசப் ஹால் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றை தவிர 50-100 மீட்டர்கள் விட்டம் கொண்ட சிறிய நிலவுகள் கூட இருக்கலாம்.

வியாழனின் துணைக்கோள்கள்

[தொகு]

வியாழனுக்கு 67 இயற்கையான துணைக்கோள்கள் உள்ளன. இவற்றில் நான்கு நிலவுகள் கலீலியோ கலிலியால் கண்டுபிடிக்கப்பட்டவை. இவற்றை கலிலியின் நிலவுகள் என்கிறோம். சூரியன், பூமியை தவிர மற்றொரு விண்பொருளை சுற்றி வருபவற்றை முதன்முதலில் அப்போது தான் மக்கள் அறிந்தார்கள்.

ஹிமாலியா

[தொகு]

இது வியாழனின் மிகப்பெரிய ஒழுங்கற்ற துணைக்கோளாகும்.

நிலவிற்கான வரையறை

[தொகு]
புவி மற்றும் நிலா ஒப்பீடு

எப்போது ஒரு விண்பொருள் "நிலவாக" கருதப்படுகிறது என்று ஒரு நிறுவப்பட்ட கீழ் எல்லை இல்லை. ஒரு கிரகத்தை சுற்றி ஒரு குறிப்பிட்ட சுற்றுப்பாதையில் சுற்றி வரும் ஒவ்வொரு வான்பொருளும் - அவற்றின் விட்டம் ஒரு கிலோமீட்டர் அளவில் இருந்தால் கூட- அது நிலவு என்று கொள்ளப்படும்.

அதே போல் அதிகபட்ச மேல் எல்லை கூட தெளிவற்றே உள்ளது. சில சமயங்களில் இணையாக சுற்றும் இரு வான்பொருட்களை கோள் - துணைகோள் என்று சொல்லாது இரட்டை கோள் என்று கூட சொல்வதுண்டு. பொதுவாக ஒரு வான்பொருளின் பொருண்மை மையம் அது சுற்றி வரும் கோளின் மேற்பரப்பில் கீழே இருந்தால் அதை அக்கோளின் துணைகோள் என கொள்ளலாம்.

இவற்றையும் பார்க்க

[தொகு]

கோள்களின் துணைக்கோள்கள்

[தொகு]

குறுங்கோள்களின் துணைக்கோள்கள்

[தொகு]

மேற்கோள்

[தொகு]
  1. Sheppard, Scott S. "The Giant Planet Satellite and Moon Page". Departament of Terrestrial Magnetism at Carniege Institution for science. பார்க்கப்பட்ட நாள் 2013-12-06.
  2. "How Many Solar System Bodies". NASA/JPL Solar System Dynamics. பார்க்கப்பட்ட நாள் 2013-12-06.
  3. "Planet and Satellite Names and Discoverers". International Astronomical Union (IAU) Working Group for Planetary System Nomenclature (WGPSN). பார்க்கப்பட்ட நாள் 2013-12-06.
  4. "...if you were to draw a picture of the orbits of the Earth and Moon about the Sun exactly to scale, you would see that the Moon's orbit is everywhere concave toward the Sun. It is always "falling toward" the Sun. All the other satellites, without exception, "fall away" from the Sun through part of their orbits, caught as they are by the superior pull of their primary planets – but not the Moon." – ஐசாக் அசிமோவ் [Asimov, Isaac (1975). "Just Mooning Around", collected in Of Time and Space, and other things (Avon)]
  5. "Hubble Discovers New Pluto Moon". ESA/Hubble Press Release. http://www.spacetelescope.org/news/heic1212/. பார்த்த நாள்: 2013-12-06. 
  6. "Saturn satellite reveals first moon rings – 06 March 2008 – New Scientist". பார்க்கப்பட்ட நாள் 2013-12-06.
  7. "Cassini imaging search rules out rings around Rhea - Tiscareno - 2010 - Geophysical Research Letters - Wiley Online Library". Agu.org. Archived from the original on 2013-07-10. பார்க்கப்பட்ட நாள் 2013-12-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயற்கைத்_துணைக்கோள்&oldid=3543903" இலிருந்து மீள்விக்கப்பட்டது