கலிலியின் நிலவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலிலியின் நிலவுகளினதும் வியாழனினதும் அளவை ஒப்பிடும் காட்சி

கலிலியின் நிலவுகள் என்பது ஜனவரி 1610ஆம் ஆண்டில் கலிலியோ கலிலியால் கண்டுபிடிக்கப்பட்ட வியாழனின் நிலவுகள் ஆகும். வியாழனின் 63 நிலவுகளில் இந்த நான்கு நிலவுகளே பெரியவையும், சாதாரண தொலை நோக்கியாலும் அவதானிக்கப்படக்கூடியவை ஆகும். இவை ஐஓ, யுரோப்பா, கனிமீடு மற்றும் காலிஸ்டோ ஆகும். இவை அனைத்தும் குறுங்கோள்களை விடவும் பெரியவை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கனிமிடு ஆனது புதன் கோளை விடவும் பெரியதாகும், இதுவே ஞாயிற்றுத் தொகுதியிலேயே மிகப் பெரிய துணைக்கோளாகும்.கலிலியோ தானே உருவாக்கிய தொலைநோக்கியால் இவற்றைக் கண்டுபிடித்தார்.

நான்கு நிலவுகளையும் கண்டுபிடித்த கலிலியோ கலிலி
பெயர்
படம் உட்கட்டமைப்பின் மாதிரி
I E G C
விட்டம்
(km)
திணிவு
(kg)
அடர்த்தி
(g/cm³)
அரைப் பிரதான அச்சு
(km)[1]
சுற்றுகக் காலம்
[2](relative)
சாய்வு
(°)[3]
மைய பிறழ்ச்சி
ஐஓ (சந்திரன்)
வியாழன் I
3660.0
×3637.4
×3630.6
8.93×1022 3.528 421,800 1.769

(1)
0.050 0.0041
யுரோப்பா
வியாழன் II
3121.6 4.8×1022 3.014 671,100 3.551

(2)
0.471 0.0094
கனிமீடு
வியாழன் III
5262.4 1.48×1023 1.942 1,070,400 7.155

(4)
0.204 0.0011
காலிஸ்டோ
வியாழன் IV
4820.6 1.08×1023 1.834 1,882,700 16.69

(9.4)
0.205 0.0074

மேற்கோள்களும் குறிப்புக்களும்[தொகு]

  1. Computed using the IAU-MPC Satellites Ephemeris Service µ value
  2. Source: JPL/NASA பரணிடப்பட்டது 2008-09-17 at the வந்தவழி இயந்திரம்
  3. Computed from IAG Travaux 2001 பரணிடப்பட்டது 2018-10-31 at the வந்தவழி இயந்திரம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலிலியின்_நிலவுகள்&oldid=3485783" இலிருந்து மீள்விக்கப்பட்டது