அண்டவியல்
Appearance
அண்டவியல் (Cosmology) அண்டத்தின் தோற்றம், இயக்கம், கட்டமைப்பு, பரிணாமம் ஆகியவற்றை இயற்பியலின் அடிப்படையில் ஆய முயலும் இயல். இதன் நடைமுறை கோட்பாடுகள் பல உறுதிப்படுத்தப்படவில்லை. அண்டத்தின் தோற்றம் பற்றிய கோட்பாடுகளில் இன்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது பெரு வெடிப்புக் கோட்பாடு ஆகும்.[1]
வகைகள்
[தொகு]- இயற்பு அண்டவியல்(physical cosmology) - வானியலாலர்களால் ஆராயப்பட்டு நிறுவப்பட்ட அல்லது கருதப்படும் கோட்பாடுகளைக் கொண்டது.
- மாயவியற்பு அண்டவியல்(metaphysical cosmology) - மதம், தொன்மங்கள் சார்ந்த கோட்பாடுகளைக் கொண்டது.[1]
மாறும் கொள்கைகள்
[தொகு]அண்டவியல் கொள்கைகள் அவ்வப்போது மாறிக்கொண்டே இருப்பது இயல்பு. ஒரு விஞ்ஞானி கூறிய கொள்கை நெடு நாட்களாக ஏற்கப்பட்டு மீண்டும் வேறொருவரால் பல ஆண்டுகள் கழித்து மறுக்கப்படலாம். இது தற்போது பரவலாக ஏற்கப்பட்ட பெரு வெடிப்புக் கோட்பாடு போன்றவற்றுக்கும் பொருந்தும்.[2]
மேற்கோள்களும் குறிப்புகளும்
[தொகு]- ↑ 1.0 1.1 வேங்கடம். வான சாஸ்திரம். சென்னை: விகடன் பிரசுரம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978 8189936228.
- ↑ “டாலமி [Ptolemy] ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கினார்! அது ஈராயிரம் ஆண்டுகள் நீடித்தன! நியூட்டன் ஒரு பிரபஞ்சத்தைக் கண்டுபிடித்தார்! அது இரு நூறாண்டுகள் நீடித்தன! இப்போது டாக்டர் ஐன்ஸ்டைன் ஒரு புதிய பிரபஞ்சத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்! அது எத்தனை ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று யாருக்கும் தெரியாது!” - டென்னிஸ் ஓவர்பை [Dennis Overbye, Times Writer]