வலைவாசல்:வானியல்/சிறப்புப்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது விக்கிப்பீடியாவிலுள்ள சிறப்புப் படங்களைக் கண்டறிந்து தகுந்த விளக்கமளித்து விக்கிப்பீடியா இந்து சமய வலைவாசலில் காட்சிபடுத்தும் திட்டமாகும்.

இப்பகுதியிலுள்ளவை விக்கிப்பீடியாவின் வானியல் வலைவாசலின் ஒரு பிரிவான சிறப்புப் படம் என்ற பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டவை.

தாங்களும் வானியல் வலைவாசலில் காட்சிப்படுத்துவதற்கான சிறப்பு படத்தினை பரிந்துரைக்கலாம். (காப்பகமானது காட்சிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் அடுக்கப்பட்டுள்ளது.)

காப்பகம்[தொகு]

1[தொகு]

வலைவாசல்:வானியல்/சிறப்புப்படம்/1

'டிஸ்கவரி STS-82 விண்ணோடத்தில் இருந்து தென்படும் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி. அமெரிக்க வானியலாளரான எட்வின் ஹபிள் என்பவரின் பெயரைத் தழுவியே இதற்குப் பெயரிடப்பட்டது. இது ஓர் ஆய்வுக்கருவி மட்டுமல்லாமல், வானியலுக்கான மக்கள் தொடர்பு நடவடிக்கைகளிலும் பேருதவியாக அமைந்தது.


2[தொகு]

வலைவாசல்:வானியல்/சிறப்புப்படம்/2

கெப்லர்-11 என்பது சூரியனைப் போன்ற ஒரு விண்மீன். இந்த விண்மீனைக் குறைந்தது ஆறு புறக்கோள்கள் குறைந்த சுற்றுப்பாதையுடன் சுற்றிவருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக 2011, பெப்ரவரி 2 ஆம் நாள் அறிவிக்கப்பட்டது. இது பூமியில் இருந்து ஏறத்தாழ 2,000 ஒளியாண்டுகள் தூரத்தில், சிக்னசு என்ற விண்மீன் குழுவின் திசையில் அமைந்துள்ளது. நாசாவின் கெப்லர் விண்வெளித் தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. படத்தில் கெப்லரும் அதன் புறக்கோள்களும் காட்டப்பட்டுள்ளன.

3[தொகு]

வலைவாசல்:வானியல்/சிறப்புப்படம்/3

அனைத்துலக விண்வெளி நிலையம் என்பது விண்ணிலே உலகைச் சுற்றிவரும் ஒரு விண்நிலையம். பலநாடுகள் ஒன்றாக இணைந்து உருவாக்கிய, நெடுங்காலம் நிலைத்து விண்ணிலே இயங்கவல்ல ஒரு விண்வெளி நிலையம். இது புவியில் இருந்து 360 கி.மீ. உயரத்தில் வளிமண்டலத்தைத் தாண்டி உள்ள புற வெளியில் 92 நிமிடங்களுக்கு ஒருமுறை உலகைச் சுற்றி வருகின்றது. இது 1998 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது

4[தொகு]

வலைவாசல்:வானியல்/சிறப்புப்படம்/4

ஹேலியின் வால்மீன்என்பது 75 முதல் 76 ஆண்டுகளுக்கொரு முறை புவிக்கு அருகில் வரும் ஒரு வால்நட்சத்திரம் ஆகும். இது குறுகிய நேரத்துக்கு தெளிவாக சாதாரண கண்களுக்குத் தெரியக்கூடியதாகும். இது சூரியக் குடும்பத்துக்குள் கடைசித் தடவையாகபெயரிடப்பட்டது. பிப்ரவரி 9, 1986இல் வந்துபோனது. அடுத்ததாக இது 2061இன் நடுப்பகுதியில் தோன்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.


5[தொகு]

வலைவாசல்:வானியல்/சிறப்புப்படம்/5

டிஸ்கவரி விண்ணோடம் என்பது ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் ஓய்வு பெற்ற மூன்று விண்ணோடங்களில் ஒன்றாகும். 1984இல் டிஸ்கவரி விண்ணோடம் முதன் முதலில் செலுத்தப்பட்டது. இது விண்ணில் பல ஆய்வுகளையும் அனைத்துலக விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. ஹபிள் தொலைநோக்குக் கருவி முதன் முதலில் டிஸ்கவரி மூலமே விண்ணுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

6[தொகு]

வலைவாசல்:வானியல்/சிறப்புப்படம்/6

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு செல்லும் போது, பூமியிலிருந்து காண்கையில் சூரியனும் நிலவும் வான் இணையலில் இருந்தால் சூரிய கிரகணம் ஏற்படும். இது ஓர் அமாவாசை நாளன்று தான் ஏற்படும். இதனால் சூரியன் முழுவதுமோ அல்லது ஒரு பகுதியோ மறைக்கப்படும். படத்தில் ஒரு சூரிய கிரகணத்தின் படிப்படியான நிலைகள் காட்டப்பட்டுள்ளன.

7[தொகு]

வலைவாசல்:வானியல்/சிறப்புப்படம்/7

சோயூஸ் திட்டம் 1960களின் ஆரம்பப் பகுதிகளில் சோவியத் ஒன்றியத்தினால் மனிதரை விண்வெளிக்குக் கொண்டு செல்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு விண்வெளித் திட்டமாகும். சோயூஸ் விண்கலம் இத்திட்டத்தின் ஒரு பகுதியாகும். தற்போது இத்திட்டத்தை உருசிய விண்வெளி நிறுவனம் முன்னெடுத்து வருகிறது. படத்தில் சோயூஸ் TMA-16 விண்கலம் பன்னாட்டு விண்வெளி மையத்தை அணுகிக்கொண்டிருப்பது காட்டப்பட்டுள்ளது.

8[தொகு]

வலைவாசல்:வானியல்/சிறப்புப்படம்/8 வலைவாசல்:வானியல்/சிறப்புப்படம்/8

9[தொகு]

வலைவாசல்:வானியல்/சிறப்புப்படம்/9 வலைவாசல்:வானியல்/சிறப்புப்படம்/9

10[தொகு]

வலைவாசல்:வானியல்/சிறப்புப்படம்/10 வலைவாசல்:வானியல்/சிறப்புப்படம்/10

பரிந்துரைகள்[தொகு]