இராபர்த்து ப. வில்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராபர்ட்டு ப. உவில்சன்
Robert B. Wilson
பிறப்பு16 மே 1937 (1937-05-16) (அகவை 86)
செனீவா, நெப்ராசுக்கா, ஐக்கிய அமெரிக்கா
துறைபொருளியலாளர்
மேலாண்மை அறிவியல்
பணியிடங்கள்இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்
ஆர்வர்டு சட்டப் பள்ளிக்கூடம்
கல்விஆர்வர்டு பல்கலைக்கழகம் (இ.க, மு.க.மே, முனைவர்)
ஆய்வேடுA simplicial algorithm for concave programming (1963)
ஆய்வு நெறியாளர்அவார்டு இரைபிபா
முனைவர் பட்ட 
மாணவர்கள்
பென் ஒம்சுடொரோம்
பால் மில்கிரோம்
ஆல்வின் ரோத்
அறியப்படுவதுஆட்டக் கோட்பாடு
விருதுகள்கோல்டன் கூசு விருது (2014)
பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு (2020)

இராபர்த்து பட்லர் "பாபு" வில்சன், இளையவர் (Robert Butler "Bob" Wilson, Jr. பிறப்பு: மே 16, 1937) ஓர் அமெரிக்க பொருளாதார வல்லநரும் இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் மேலாண்மை பிரிவில் புகழ்பெற்ற பேராசிரியரும் ஆவார். ஏலக் கோட்பாட்டின் மேம்பாடுகளைப்பற்றியும் புதிய ஏல வடிவங்களின் கண்டுபிடிப்புகளுக்காகவும் இவருடன் பணிபுரியும் பேராசிரியரான பால் மில்கிரோமுடன் [1] இணைந்து 2020 ஆம் ஆண்டில் பொருளியலுக்கான நோபல் நினைவு பரிசு பெற்றார்.[2]

மேலாண்மை அறிவியல் மற்றும் வணிக பொருளாதாரத்தில் இவரது பங்களிப்பிற்காக பரவலாக இவர் அறியப்பட்டவர். இவரது முனைவர் பட்ட ஆய்வு தொடர்ச்சியான இருபடி நிரலாக்கத்தை அறிமுகப்படுத்தியது, இது நேரியல் அல்லாத நிரலாக்கத்திற்கான ஒரு முன்னணி செயல்பாட்டு முறையாக மாறியது. இசுட்டான்போர்டு தொழிற் பள்ளியில் உள்ள மற்ற கணித பொருளாதார வல்லுனர்களுடன், கூட்டுறவு அல்லாத விளையாட்டுக் கோட்பாட்டைப் பயன்படுத்தி தொழில்துறை அமைப்பையும், அமைப்புக் கோட்பாட்டின் பொருளாதாரத்தையும் மறுசீரமைக்க உதவினார். நேரியல் சாரா விலைமதிப்பீடு குறித்த அவரது ஆராய்ச்சி பெரிய நிறுவனங்களுக்கான கொள்கைகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. எரிசக்தி துறையில் குறிப்பாக மின்சாரத்தில் அதிக தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

விருதுகள்[தொகு]

வில்சன் ஆர்வர்டு கல்லூரி மற்றும் தொழிற்கல்வி பள்ளியில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களை முடித்ததிலிருந்து, தொழில்முறை பத்திரிகைகள் மற்றும் புத்தகங்களில் சுமார் 100 கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், இதற்காக அவர் பல விருதுகளைப் பெற்றுள்ளார். [3]

அக்டோபர் 2020 இல், ராயல் சுவீடிய அறிவியல் உயர்கழகம் (அகாதமி ஆஃப் சயின்சஸ்), மில்கிரோம் மற்றும் இராபர்த்து வில்சன் ஆகியோருக்கு கூட்டாக நோபல் நினைவு பரிசை வழங்கியதாகக் கூறியது, ஏனெனில் அவர்கள் "பாரம்பரிய வழிகளில் அதாவது, வானொலி அதிவெண்கள் மூலமாக விற்கக் கடினமாக இருக்கும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான புதிய ஏல வடிவங்களை வடிவமைக்க தங்கள் நுண்ணறிவினை பயன்படுத்தினர் எனக் கூறியுள்ளது. இவர்களின் இந்த கண்டுபிடிப்புகள் உலகெங்கிலும் உள்ள விற்பனையாளர்கள், வாங்குபவர்கள் மற்றும் வரி செலுத்துவோருக்கு பயனளித்துள்ளன.[4]

சான்றுகள்[தொகு]

  1. Business, Charles Riley, CNN. "Nobel Prize in economics awarded to Paul Milgrom and Robert Wilson". https://www.cnn.com/2020/10/12/business/nobel-prize-economics/index.html. 
  2. Royal Swedish Academy of Sciences(October 12, 2020). "The Prize in Economic Sciences 2020". செய்திக் குறிப்பு.
  3. "Robert Wilson". https://www.gsb.stanford.edu/faculty-research/faculty/robert-wilson. 
  4. Royal Swedish Academy of Sciences(October 12, 2020). "The Prize in Economic Sciences 2020". செய்திக் குறிப்பு.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராபர்த்து_ப._வில்சன்&oldid=3593433" இருந்து மீள்விக்கப்பட்டது