பொதுச் சார்புக் கோட்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பொதுச் சார்புக் கோட்பாடு என்பது 1916[1]-ஆம் ஆண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனால் வெளியிடப்பட்ட ஈர்ப்புக்கான வடிவவியல் கோட்பாடு ஆகும். இதுவே நவீன இயற்ப்பியலில் ஈர்ப்புவிசைக்கான தற்போதைய விளக்கமாகும். இக்கோட்பாடு சிறப்பு சார்புக்கோட்பாட்டையும் நியூட்டனின் ஈர்ப்பு விதியையும் ஒருங்கிணைத்து ஈர்ப்பானது வெளிநேர வடிவியல் உடமை என விளக்குகிறது. பொதுச் சார்பியலின் மையக்கருத்து வெளியும் நேரமும் வெளிநேரம் எனப்படுவதன் இரண்டு அம்சங்கள் என்பதாகும். குறிப்பாக வெளிநேரத்தின் வடிவானது ஆற்றல், உந்தம் மற்றும் கதிர்வீச்சு என்பவற்றுடன் நேரடியாக தொடர்புள்ளது. இத்தொடர்பானது ஐன்ஸ்டின் புல சமன்பாட்டால் வரையறுக்கப்பட்டுள்ளது.

பொதுச் சார்புக்கோட்பாடின் சில முட்கணிப்புகள் பாரம்பரிய இயற்பியலுடன் மிகவும் வேறுபட்டுள்ளது. குறிப்பாக காலப்போக்கு, வெளியின் வடிவியல், பொருட்கனின் சுயத்தீன வீழ்ச்சி, வெளிச்சத்தின் பரவுகை என்பன சில. இவ்வித்தியாசத்தின் உதாரணங்களாக ஈர்ப்பு நேர நீட்டிப்பு, ஈர்ப்பு வில்லை, ஒளியின் ஈர்ப்பு செவ்பெயர்ச்சி, ஈர்ப்புக் காலதாமதம் என்பவற்றை குறிப்பிடலாம். பொதுச் சார்புக்கோட்பாடின் முட்கணிப்புகள் எல்லாம் இதுவரை அவதானிப்புகள் மூலமும் பரிசோதனை மூலமும் உறுதிசெய்யப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் விளக்கமுடியாத சில விடயங்களுள்ளன, முக்கியமாக பொதுச் சார்புக்கோட்பாட்டையும் குவாண்டம் இயங்கியலையும் இணைத்து ஒரு முழுமையான தன்னிறைவான விதியால் குவாண்டம் ஈர்ப்பை விளக்குவது.

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. "Nobel Prize Biography". Nobel Prize Biography. Nobel Prize. பார்த்த நாள் 25 February 2011.