கார்ல் சுவார்சுசைல்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கார்ல் சுவார்சுசைல்டு
Karl Schwarzschild
Schwarzschild.jpg
கார்ல் சுவார்சுசைல்டு (1873–1916)
பிறப்புஅக்டோபர் 9, 1873(1873-10-09)
பிராங்குபர்ட்டம் மெயின்
இறப்புமே 11, 1916(1916-05-11) (அகவை 42)
போட்சுடாம்
தேசியம்செருமானியர்
துறைஇயற்பியல்
வானியல்
கல்வி கற்ற இடங்கள்உலூத்விக் மேக்சிமிலியப் பல்கலைக்கழகம், மூனிச்
ஆய்வு நெறியாளர்இயூகோ வான் சீலிகர்
பின்பற்றுவோர்மார்ட்டின் சுவார்சுசைல்டு
கையொப்பம்

கார்ல் சுவார்சுசைல்டு (Karl Schwarzschild, இடாய்ச்சு: [ˈkaʁl ˈʃvaʁtsʃɪlt]; அக்தோபர் 9, 1873 – மே 11, 1916) ஒரு செருமானிய இயற்பியலாளரும் வானியலாளரும் ஆவார். இவர் வானியற்பியலாளர் மார்ட்டின் சுவார்சுசைல்டு அவர்களின் தந்தையார் ஆவார்.

அய்ன்சுட்டீனின் பொதுச் சார்பியல் புலச் சமன்பாடுகளுக்கு முதல்சரிநிகர் தீர்வை அக்கோட்பாடு வெளியாகிய அதே 1915 இல் தந்தார். இத்தீர்வு மிக எளிய ஒற்றைக் கோள சுழலாத பொருண்மை வரம்புநிலைக்கு தரப்பட்டது. சுவார்சுசைல்ட் ஆயங்களையும் சுவார்சுசைல்டுப் பதின்வெளியையும் பயன்படுத்தும் இந்தச் சுவார்சுசைல்டு தீர்வு, சுவார்சுசைல்டு ஆரத்தைக் கொணர உதவியது. இந்த ஆரம் சுழலாத கருந்துளையின் நிகழ்ச்சித் தொடுவான் உருவளவாகும்.

இவர் முதல் உலகப் போரில் செருமானியப் படையில் பணிபுரிந்தபோது இச்சாதனையைப் படைத்துள்ளார். அடுத்த ஆண்டே இவர் பெம்பகசு எனும் தோல்நோயால் இறந்தார். முதல் உலகப்போரின்போது இந்நோய் இவரை உருசிய போர்முனையில் கிழக்கு முகப்பில் இருந்தபோது தாக்கியது. அசுகெனாசி யூதர்களை பல்வேறு நோய்வகைகள் தாக்குதல் உண்டு. இவரது நினைவாகப் 837 சுவார்சுசைல்டா குறுங்கோளும் நிலாவின் சுவார்சுசைல்டுக் குழிப்பள்ளமும் பெயரிடப்பட்டுள்ளன.

[[File:Göttingen Stadtfriedhof Grab Karl Schwarzschild und Familie.jpg|thumb|கார்ல் சுவார்சுசைல்டின் கல்லறை, சுடாத்பிரீடுகோப், கோட்டிங்கன்

இவரது பெம்பிகசு எனும் தோல் நோயுடனான போராட்டம் இவரை இறப்பு நோக்கிச் செலுத்தியிருக்கலாம். இவர் 1916 மே 11 இல் இறந்தார்.

பணிகள்[தொகு]

சார்பியல்[தொகு]

பொதுச் சார்பியலில் சுவார்சுசைல்டின் பதின்வெளியைப் பயன்படுத்திய கெப்ளர் சிக்கல்
சுவார்சுசைல்டின் உள், வெளித் தீர்வுகளின் எல்லையோரப் பகுதி

மக்கள் பண்பாட்டில்[தொகு]

கொன்னி வில்லிசு எழுதிய "சுவார்சுசைல்டு ஆரம்" (1987) எனும் அறிபுனைவுச் சிறுகதையில் கார்ல் சுவார்சுசைல்டு ஒரு பாத்திரமாக வருகிறார்.

பணிகள்[தொகு]

சார்பியல்
பிற கட்டுரைகள்
English translations

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  • O'Connor, John J.; Robertson, Edmund F., "கார்ல் சுவார்சுசைல்டு", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
  • Roberto B. Salgado The Light Cone: The Schwarzschild Black Hole பரணிடப்பட்டது 2006-06-17 at the வந்தவழி இயந்திரம்
  • Obituary in the Astrophysical Journal, written by எய்னார் எர்ட்சுபிரங்கு
  • கார்ல் சுவார்சுசைல்டு at the Mathematics Genealogy Project
  • Biography of Karl Schwarzschild by Indranu Suhendro, The Abraham Zelmanov Journal, 2008, Volume 1.