ஆன் லியூலியே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆன் லியூலியே
Anne L'Huillier
பிறப்பு16 ஆகத்து 1958 (1958-08-16) (அகவை 65)
பாரிசு, பிரான்சு
துறைஆட்டோசெக்கண்டு இயற்பியல்
பணியிடங்கள்லுண்ட் பல்கலைக்கழகம்
கல்விபியேர், மேரி கியூரி பல்கலைக்கழகம் (முது அறிவியல், முனைவர்)
ஆய்வேடுபல-ஒளியன், பல-இலத்திரன் அயனியாக்கம் (1986)
ஆய்வு நெறியாளர்பெர்னார்டு கன்யாக்
விருதுகள்யுனெசுக்கோ லோரியல் விருது (2011)
BBVA அறக்கட்டளையின் எல்லைகள் அறிவு விருது (2022)
இயற்பியல் வுல்ஃப் பரிசுகள் (2022)
இயற்பியலுக்கான நோபல் பரிசு (2023)
துணைவர்கிளாயசு-கோரன் வால்சுட்ரோம்[1]

ஆன் யெனிவீவ் லியூலியே (Anne Geneviève L'Huillier; பிறப்பு: 16 ஆகத்து 1958)[2] ஒரு பிரான்சிய-சுவீடிய இயற்பியலாளரும்,[3] சுவீடனில் உள்ள லுண்ட் பல்கலைக்கழகத்தில் அணு இயற்பியல் பேராசிரியரும் ஆவார். இவர் ஒரு அட்டோநொடி இயற்பியல் குழுவை வழிநடத்துகிறார், இது நிகழ்நேரத்தில் எலக்ட்ரான்களின் இயக்கங்களை ஆய்வு செய்கிறது, இது அணு மட்டத்தில் வேதிவினைகளைப் புரிந்து கொள்ள பயன்படுகிறது.[4] 2003-ஆம் ஆண்டில், இவரும் இவரது குழுவும் 170 அட்டோநொடிகள் கொண்ட மிகச்சிறிய சீரொளி ஒளித்துடிப்புடன் உலக சாதனையை முறியடித்தனர்.[5] 2022-ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான வுல்ஃப் பரிசு [6] 2023-ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசு உட்பட பல்வேறு மதிப்புமிக்க இயற்பியல் விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

வாழ்க்கை[தொகு]

இவர் 1958-ஆம் ஆண்டில் பாரிசில் பிறந்தார். இவர் கோட்பாட்டு இயற்பியல் மற்றும் கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஆனால், சாக்லே தளத்தில் உள்ள அணு ஆற்றல் மற்றும் மாற்று ஆற்றல் ஆணையத்தில் (CEA) முனைவர் பட்ட ஆய்வின் போது இயற்பியலுக்கு மாறினார். அதிக தீவிரம் கொண்ட சீரொளிப்புலங்களில் பல அயனியாக்கம் பற்றி இவரது ஆய்வுக் கட்டுரை இருந்தது.[7]

முனைவர் பட்டத்திற்குப் பிறகான ஆய்வு மாணவியாக, இவர் கோதன்பர்க், சுவீடன் மற்றும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய இடங்களில் இருந்தார். 1986-ஆம் ஆண்டு முதல், இவர் நிரந்தரமாக பாரீசு சாக்லே பல்கலைக்கழகத்தின் அணு ஆற்றல் மற்றும் மாற்று ஆற்றல் ஆணையத்தில் பணியாற்றினார். 1992- ஆம் ஆண்டில், இவர் லுண்டில் ஒரு பரிசோதனையில் பங்கேற்றார், அங்கு ஐரோப்பாவில் ஃபெம்டோநொடி ஒளித்துடிப்புகளுக்கான முதல் தைட்டானியம் - நீலுக்கல் திட-நிலை சீரொளி அமைப்புகளில் ஒன்று நிறுவப்பட்டது. 1994-ஆம் ஆண்டில் இவர் சுவீடனுக்குச் சென்றார், அங்கு இவர் லுண்ட் பல்கலைக்கழகத்தில் 1995- ஆம் ஆண்டில் விரிவுரையாளராகவும், 1997- ஆம் ஆண்டில் பேராசிரியராகவும் பணியாற்றினார்.[8]

கௌரவங்களும் விருதுகளும்[தொகு]

இவர் 2007 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இயற்பியலுக்கான நோபல் குழுவில் இடம் பெற்றிருந்தார்,[9] மற்றும் முதல் சுவீடிய அறிவியல் அகாதெமியின் உறுப்பினராகவும் இருந்தார். 2003- ஆம் ஆண்டில், இவர் யூலியசு இசுபிரிங்கர் பரிசினைப் பெற்றார். 2011- ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் லோரியல் விருதைப் பெற்றார். 2013-ஆம் ஆண்டில், இவருக்கு கார்ல் செயிசு ஆராய்ச்சி விருது வழங்கப்பட்டது. பிளேய்சு பாசுகல் பதக்கம் மற்றும் பாரிசில் உள்ள பியரி மற்றும் மேரி கியூரி பல்கலைக்கழகம் (யுபிஎம்சி), பாரிசில் கெளரவப் பட்டம் ஆகியவற்றை இவர் பெற்றுள்ளார். இவர் 2018- ஆம் ஆண்டில் தேசிய அறிவியல் அகாதெமியின் வெளிநாட்டு கூட்டாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு வருடம் கழித்து, 2019- ஆம் ஆண்டில், ஐரோப்பிய இயற்பியல் சங்கத்தால் அறிவிக்கப்பட்ட குவாண்டம் மின்னணுவியல் மற்றும் ஒளியியலின் அடிப்படை அம்சங்களுக்கான பரிசுடன் இவர் அங்கீகரிக்கப்பட்டார். அன்னா லூயிலியே அமெரிக்க இயற்பியல் கழகம் மற்றும் ஆப்டிகாவின் சக உறுப்பினரும் ஆவார்.

2021 ஆம் ஆண்டில், இவருக்கு அமெரிக்க ஒளியியல் கழகத்தால் "அதிவிரைவு சீரொளி அறிவியல் மற்றும் அட்டோநொடி இயற்பியலில் முன்னோடியாகப் பணியாற்றி, உயர் சீரிசையலைத் தலைமுறையை உணர்ந்து புரிந்துகொண்டு, அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளில் எலக்ட்ரான் இயக்கத்தின் நேர-தீர்மான பிம்பமாகலில் அதைப் பயன்படுத்துதல்" என்ற பணிக்காக மேக்ஸ் பார்ன் விருது வழங்கப்பட்டது.[10] 2022 ஆம் ஆண்டில், "அதிவிரைவு சீரொளி அறிவியல் மற்றும் அட்டோநொடி இயற்பியலுக்கான முன்னோடிப் பங்களிப்புகளுக்காக" பெரென்சு கிரௌசு மற்றும் பால் கார்கம் ஆகியோருடன் இணைந்து இயற்பியலுக்கான வுல்ஃப் பரிசைப் பெற்றார்.[6] மேலும் 2022 ஆம் ஆண்டில், மூவருக்கும் அடிப்படை அறிவியலில் பிபிவிஏ அறக்கட்டளையின் ஃப்ரண்டியர் அறிவு விருது வழங்கப்பட்டது. [11] 2023 ஆம் ஆண்டில், "பொருளின் எலக்ட்ரான் இயக்கவியல் ஆய்வுக்காக ஒளியின் அட்டோநொடி ஒளித்துடிப்புகளை உருவாக்கும் சோதனை முறைகளுக்காக" பெரென்சு கிரௌசு, பியேர் அகோத்தினி ஆகியோருடன் இணைந்து இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார். [12]

பணிகள்[தொகு]

 • Ferray, M; L'Huillier, A; Li, XF; Lompre, LA; Mainfray, G; Manus, C (1988). "Multiple-harmonic conversion of 1064 nm radiation in rare gases". J. Phys. B: At. Mol. Opt. Phys. 21 (3): L31. doi:10.1088/0953-4075/21/3/001. Bibcode: 1988JPhB...21L..31F. 

மேற்கோள்கள்[தொகு]

 1. Svanberg, Sune (2023-10-04). "How we hired 2023 Nobel laureate Anne L'Huillier – and why we knew she was destined for greatness". The Conversation (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-05.
 2. "The Nobel Prize in Physics 2023" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-04.
 3. "Anne L'Huillier". பார்க்கப்பட்ட நாள் 3 October 2023.
 4. "Carl Zeiss Research Award" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 29 April 2017.
 5. (in sv) Fysik i Lund: i tid och rum. 
 6. 6.0 6.1 Wolf Prize in Physics 2022
 7. "Anne L'Huillier". http://www.upmc.fr/en/university/history_and_famous_people/doctors_honoris_causa/dhc_2013/anne_l_huillier.html. 
 8. "Anne L'Huillier". Atomic Physics, Faculty of Engineering, LTH. பார்க்கப்பட்ட நாள் 5 May 2014.
 9. "Prof. Anne L'huillier – AcademiaNet". பார்க்கப்பட்ட நாள் 29 April 2017.
 10. "Max Born Award".
 11. BBVA Foundation Frontiers of Knowledge Award 2022
 12. "Nobel prize in physics awarded to three scientists for work on electrons". https://www.theguardian.com/science/2023/oct/03/nobel-prize-in-physics-awarded-to-three-scientists-for-work-on-electrons. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்_லியூலியே&oldid=3804511" இலிருந்து மீள்விக்கப்பட்டது