மௌங்கி பவெண்டி
மௌங்கி பவெண்டி | |
---|---|
இயற்பெயர் | منجي الباوندي |
பிறப்பு | 15 மார்ச்சு 1961 பாரிஸ், பிரான்சு |
துறை | வேதியியல் குவைய வேதியியல் |
பணியிடங்கள் | மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம் |
கல்வி | ஆர்வர்டு பல்கலைக்கழகம் (AB, முதுகலை) சிக்காகோ பல்கலைக்கழகம் (முனைவர்) |
ஆய்வேடு | மிகப்பெரியது முதல் மிகச்சிறிய பலவணு மூலக்கூறுகள் வரை: செயற்பாட்டில் புள்ளியியல் இயக்கவியலும் குவாண்டம் இயக்கவியலும் (1988) |
ஆய்வு நெறியாளர் | காரல் பிரீடு தக்கேசி ஓக்கா |
விருதுகள் | வேதியியலுக்கான நோபல் பரிசு (2023) |
மௌங்கி காப்ரியேல் பவெண்டி (Moungi Gabriel Bawendi, அரபு மொழி: منجي الباوندي; பிறப்பு: 15 மார்ச் 1961)[1][2] ஒரு அமெரிக்க-துனிசிய-பிரான்சிய வேதியியலாளர் ஆவார்.[3] [4] இவர் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில் லெஸ்டர் வுல்ஃப் பேராசிரியராக உள்ளார்.[5] [6] பவெண்டி உயர்தர குவாண்டம் புள்ளிகளின் வேதி உற்பத்தியில் மேற்கொண்ட முன்னோடி முயற்சிகளுக்காக அறியப்படுகிறார்.[7] 2023- ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.
வாழ்க்கை வரலாறு
[தொகு]மௌங்கி பவெண்டி, பிரான்சின் பாரிசில், துனிசியக் கணிதவியலாளரான முகமது சலா பௌண்டியின் மகனாகப் பிறந்தார். பிரான்சு மற்றும் துனிசியாவில் வாழ்ந்த காலங்களுக்குப் பிறகு, பவெண்டி குழந்தையாக இருந்தபோதே அவரது குடும்பத்தினர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தனர். சலா பௌண்டி பர்டூ பல்கலைக்கழகத்தில் கணிதத் துறையில் பணிபுரிந்ததால், அவர்கள் இந்தியானாவின் வெஸ்ட் லஃபாயெட்டில் வசித்து வந்தனர்.[8] 1978-ஆம் ஆண்டில் வெஸ்ட் லஃபாயெட் ஜூனியர்-சீனியர் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார்.
கூழ்ம குவாண்டம் புள்ளிகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் பவெண்டி ஒரு முன்னணி நபர் ஆவார். மேலும், 2000-2010 வரையிலான பத்தாண்டுகளில் மிகவும் மேற்கோள் காட்டப்பட்ட வேதியியலாளர்களில் இவரும் ஒருவர். 1982 ஆம் ஆண்டு ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில், இளங்கலைப் பட்டம் பெற்றார். 1988-ஆம் ஆண்டில் சிகாகோ பல்கலைக்கழகத்தில் கார்ல் பிரீடு மற்றும் தாகேஷி ஓகா ஆகியோரின் மேற்பார்வையில் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார்.[7] பிரீடுடன் இவர் [9] பலபடி இயற்பியலில் பணிபுரிந்தார். மற்றும் ஓகாவுடன், பவெண்டி H3+ அயனியின் வெப்பப்பட்டைகளின் சோதனைகளில் பணியாற்றினார். இது 1989-ஆம் ஆண்டில் கவனிக்கப்பட்ட வியாழனின் உமிழ்வு நிறமாலையைப் புரிந்துகொள்வதில் பங்கு வகித்தது.
தனது பட்டப்படிப்பின் போது, ஓகா பெல் ஆய்வுக்கூடங்களில் கோடைகால திட்டத்திற்கு பாவெண்டியை பரிந்துரைத்தார், அங்கு லூயிசு இ. புரூசு குவாண்டம் புள்ளிகள் பற்றிய ஆராய்ச்சிக்கு பாவெண்டியை அறிமுகப்படுத்தினார்.[10] பட்டப்படிப்பு முடிந்ததும், பவெண்டி புரூசுடன் பெல் ஆய்வுக்கூடத்தில் முதுகலை ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்தார். [11]
பவெண்டி 1990 இல் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில் (MIT) சேர்ந்தார். 1996 ஆம் ஆண்டில்[11] பேராசிரியரானார்.
விருதுகளும் கௌரவங்களும்
[தொகு]பவெண்டிக்கு 1994- ஆம் ஆண்டில் ஸ்லோன் ரிசர்ச் பெல்லோஷிப் வழங்கப்பட்டது.[12] அமெரிக்க வேதியியல் குமுகத்தின் (ACS) வேதியியலில் பட்டதாரி கல்விக்கான 1997-ஆம் ஆண்டிற்கான நோபல் கையொப்ப விருதை வென்றார்.[13] 2001 ஆம் ஆண்டில், மேம்பட்ட பொருட்களின் (மீநுண் பொருள்கள், உயிரிய பொருள்கள் மற்றும் ஆற்றல் பொருள்கள்) இயற்பிய வேதியியலில் சாக்லர் பரிசைப் பெற்றார்.[14] 2006-ஆம் ஆண்டில், இவருக்கு எர்னஸ்ட் ஆர்லாண்டோ லாரன்ஸ் விருது வழங்கப்பட்டது.[15]
இவர் 2003- ஆம் ஆண்டில் அறிவியல் முன்னேற்றத்திற்கான அமெரிக்க சங்கத்தின் உறுப்பினராகவும்,[16] 2004-ஆம் ஆண்டில் அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாதமியின் உறுப்பினராகவும்[17] மற்றும் 2004-ஆம் ஆண்டில்[18] தேசிய அறிவியல் அகாதெமியின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மார்ச் 23, 2010 அன்று நடந்த அமெரிக்க வேதியியல் குமுகத்தின் (ACS) தேசியக் கூட்டத்தின் போது, கூழ்மம் மற்றும் மேற்பரப்பு வேதியியலில் இந்த அமைப்பின் விருதை பவெண்டி பெற்றார்.[19]
"உடல், உயிரியல் மற்றும் மருத்துவ முறைகளில் பரவலான பயன்பாடுகளுக்கான துல்லியமான பண்புகளுடன் கூடிய மீநுண் படிகங்களின் (nanocrystals) தொகுப்புக்காக" கிறிஸ்டோபர் பி. முர்ரே மற்றும் ஐயோன் டேக்வானுடன் இணைந்து 2020 ஆம் ஆண்டில் வேதியியலில் கிளாரிவேட் தகுதியுரை பரிசு பெற்றவராக பவேண்டி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[20]
2023 ஆம் ஆண்டில், பவெண்டிக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு புரூஸ் மற்றும் அலெக்சி எகிமோவு ஆகியோருடன் இணைந்து "குவாண்டம் புள்ளிகளைக் கண்டுபிடிபபிற்காகவும் தொகுப்பு முறைக்காகவும்" வழங்கப்பட்டது.[3]
2023 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் என பவெண்டி, புரூஸ் மற்றும் எகிமோவ் ஆகியோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு சற்று முன்பு இச்செய்தி கசிந்தது.[21] சுவீடிய அகாதமியின் வேதியியலுக்கான நோபல் கமிட்டியின் தலைவர், "... இராயல் சுவீடிய அறிவியல் அகாதெமி செய்த தவறு காரணமாக... இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படவில்லை" என்று கூறினார். [21] இஸ்டாக்ஹோம் நேரப்படி மு.ப 11:52 வரை, வெற்றியாளர்கள் முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட பெறுநர்களைப் போலவே உறுதிசெய்யப்பட்டுள்ளனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tiss, Mohsen (October 4, 2023). "Le Tunisien Moungi G. Bawendi parmi les lauréats du prix Nobel de chimie".
- ↑ "Le Tunisien Moungi Bawendi parmi le trois Prix Nobel de chimie 2023". October 4, 2023.
- ↑ 3.0 3.1 Devlin, Hannah (2023-10-04). "Scientists share Nobel prize in chemistry for quantum dots discovery". https://www.theguardian.com/science/2023/oct/04/nobel-prize-in-chemistry-winners-2023.
- ↑ "An overview of the main Tunisian scientists in Chemistry and Materials Science" (PDF).
- ↑ "Moungi Bawendi".
- ↑ "Moungi Bawendi".
- ↑ 7.0 7.1
{{cite web}}
: Empty citation (help) - ↑ Baklouti, Ali; El Kacimi, Aziz; Kallel, Sadok; Mir, Nordine (2015). Analysis and Geometry: MIMS-GGTM, Tunis, Tunisia, 2014. In Honour of Mohammed Salah Baouendi (in ஆங்கிலம்). Heidelberg: Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783319174426. பார்க்கப்பட்ட நாள் 4 October 2023.
- ↑ Oka, Takeshi (2013-10-03). "My 45 Years of Astrochemistry: Memoirs of Takeshi Oka" (in en). The Journal of Physical Chemistry A 117 (39): 9308–9313. doi:10.1021/jp4035826. பன்னாட்டுத் தர தொடர் எண்:1089-5639. பப்மெட்:24490724. Bibcode: 2013JPCA..117.9308O. https://pubs.acs.org/doi/10.1021/jp4035826.
- ↑
{{cite web}}
: Empty citation (help) - ↑ 11.0 11.1 "Names of purported Nobel chemistry prize winners inadvertently released" (in en). 2023-10-04. https://www.reuters.com/world/names-purported-nobel-chemistry-prize-winners-inadvertently-released-2023-10-04/.
- ↑ "Fellows Database". பார்க்கப்பட்ட நாள் 2023-10-05.
- ↑ "American Chemical Society's president comments on award of 2023 Nobel Prize in Chemistry". பார்க்கப்பட்ட நாள் 2023-10-05.
- ↑ "Past Laureates of the Raymond and Beverly Sackler International Prize in the Physical Sciences". பார்க்கப்பட்ட நாள் 2023-10-05.
- ↑ "LAWRENCE Award Laureates | U.S. DOE Office of Science (SC)". பார்க்கப்பட்ட நாள் 2023-10-05.
- ↑ "AAAS Elects Fellows in Chemistry". March 31, 2003. பார்க்கப்பட்ட நாள் 2023-10-05.
- ↑ "Member Directory | American Academy of Arts and Sciences". பார்க்கப்பட்ட நாள் 2023-10-05.
- ↑ "Moungi G. Bawendi". பார்க்கப்பட்ட நாள் 2023-10-05.
- ↑ "Dresselhaus and Bawendi Honored by ACS". MIT the Spectograph 26. 2010. https://web.mit.edu/spectroscopy/events/newsletter/news_v26_n2.pdf.
- ↑ "Clarivate Reveals 2020 Citation Laureates - Annual List of Researchers of Nobel Class"(in en). செய்திக் குறிப்பு.
- ↑ 21.0 21.1 Devlin, Hannah (4 October 2023). "Names of Nobel prize in chemistry winners apparently leaked before announcement". https://www.theguardian.com/science/2023/oct/04/nobel-prize-in-chemistry-winners-2023.
வெளி இணைப்புகள்
[தொகு]- மௌங்கி பவெண்டி on Nobelprize.org
[[பகுப்பு:நானோ தொழில்நுட்பவியலாளர்கள்
- CS1 errors: empty citation
- 1961 பிறப்புகள்
- அமெரிக்க வேதியியலாளர்கள்
- துனீசிய அறிவியலாளர்கள்
- பிரான்சிய வேதியியலாளர்கள்
- ஆர்வர்டு பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்
- வாழும் நபர்கள்
- நோபல் வேதியியற் பரிசு பெற்றவர்கள்
- சிக்காகோ பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்
- நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்கள்
- நோபல் பரிசு பெற்ற துனீசியர்கள்
- நோபல் பரிசு பெற்ற பிரான்சியர்கள்