குவைய வேதியியல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
குவைய வேதியியல் (Quantum chemistry) என்பது வேதி அமைப்புகளின் வடிவமைப்புக்களிலும் சோதனைகளிலும் குவாண்டம் விசையியல் கோட்பாடுகளைப் பயன்படுத்தும் வேதியியல் பிரிவாகும். இதில் வலுவான சோதனை முறைகளும் கோட்பாட்டு முறைகளும் பங்கேற்கின்றன.
- குவைய வேதியியலாளர்கள் நிறமாலையியலை பெரிதும் பயன்படுத்தி மூலக்கூறுகளில் ஆற்றல் குவையப்பட்டிருப்பதை குறித்த தகவல்களைப் பெறுகின்றனர். பெரும்பாலும் அகச்சிவப்பு நிறமாலையும் அணுக்கருக் காந்த ஒத்ததிர்வு நிறமாலையும் பயன்படுத்தப்படுகிறது.
- அறிமுறை குவைய வேதியியலில், அணுக்களும் மூலக்கூறுகளும் தனித்த ஆற்றல் மதிப்புக்களை மட்டுமே கொண்டிருக்க முடியும் என்ற குவாண்டம் விசையியல் எதிர்பார்ப்புகளை கணிதம் மூலம் கணிக்கிடுகிறது. இது கணித வேதியியலின் பகுதியாகவும் உள்ளது. பல அணுக்கள் உள்ள சோதனைப்பொருட்களுக்கு இவற்றை பயன்படுத்தும்போது பல்பொருள் சிக்கல் எழுகிறது. இவற்றை ஓர் கணினி மூலமாகவே தீர்க்க இயலும்.
இவ்வாறாக குவைய வேதியியலாளர்கள் வேதியியற் செயல்பாடுகளை ஆய்கின்றனர்.
- வேதி வினைகளின்போது, ஏற்படுகின்ற தனித்தனி அணுக்கள்/மூலக்கூறுகளின் தரைநிலை, உயராற்றல்நிலை, மாற்றநிலை வேறுபாடுகளை குவைய வேதியியல் ஆராய்கிறது.
- கணக்கீடுகளின்போது சில தோராய கருதுகோள்களை பயன்படுத்துகின்றனர்: அணுக்கருனி இயக்கமின்றி இருப்பதாக எடுத்துக்கொள்ளப்படுகிறது (போர்ன்–ஓப்பன்ஹெய்மர் தோராயம்).
வெளி இணைப்புகள்[தொகு]
- The Sherrill Group – Notes
- ChemViz Curriculum Support Resources
- Early ideas in the history of quantum chemistry
- The Particle Adventure