கடல் வேதியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடல் நீரின் மொத்த மோலார் இயைபு (உவர்தன்மை = 35)[1]
கூறு அடர்த்தி (மோல்/கி.கி)
H
2
O
53.6
Cl
0.546
Na+
0.469
Mg2+
0.0528
SO2−
4
0.0282
Ca2+
0.0103
K+
0.0102
CT 0.00206
Br
0.000844
BT (மொத்த போரான்) 0.000416
Sr2+
0.000091
F
0.000068

கடல் வேதியியல் (Ocean chemistry) என்பது பெருங்கடலில் தாக்கத்தை உண்டாகும் பல்வேறு இயற்கைக் கூறுகளையும் கடல் சூற்றுப்புறங்களையும் ஆய்வு செய்கின்ற ஒரு துறையாகும். கடல் வேதியியல் துறை கடலின் வேதியல் என்ற பெயராலும் அறியப்படுகிறது. கலங்குதிறம் நீரோட்டம், வண்டல் படிவுகள், காரகாடித்தன்மை சுட்டெண்| pH அளவுகள்]], வளிமண்டலம்|வளிமண்டலப்]] பகுதிப்பொருட்கள், உருமாற்றம்சார் நடவடிக்கைகள், சூழலியல் உள்ளிட்ட பல்வேறு கூறுகள் கடல் வேதியியல் துறையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் கடல் வேதியியல் என்பது வேதியியல் மூலக்கூற்றுகளின் பரிமானங்களைப் பற்றி பயில்கின்ற ஒரு துறையாகும். இவ்வுலகிலுள்ள அனைத்து மூலக்கூறுகளையும் கடல் தன்னுள் வெவ்வேறு அளவில் தன்னகத்தே கொண்டுள்ளது.

நிலப்பரப்பில் கடல் வேதியியல்[தொகு]

கடலில் கரிமச் சேர்மங்கள்[தொகு]

கடலில் 20 முதல் 70 சதவீதம் வண்ணக் கரிமப் பொருட்கள் கரைந்துள்ளதாக கருதப்படுகிறது. கடலின் திறந்த வெளியில் இந்த அளவு குறைவாகும் ஆறு வெளியேறும் வழியில் இந்த அளவு அதிகமாகவும் காணப்படுகிறது[2]

உயிரினங்களின் கடல் வாழ்க்கையானது உப்பு நீர் சூழல் என்பதைத் தவிர, நிலப்பரப்பில் அவற்றின் உயிர் வேதியியல் வாழ்க்கையை ஒத்தே உள்ளது. கடல் உயிரினங்களின் தகவமைப்புக்கு கிடைக்கும் ஒரே பயன் ஆலசனேற்றம் பெற்ற கரிமச் சேர்மங்கள் மிக நிறைவான ஆதாரமாக இருக்கின்றன என்பதுதான் ஆகும்[3].

உச்சவிரும்பிகளுக்கான வேதிச்சூழல் மண்டலம்[தொகு]

உச்சவிரும்பிகள் செழித்து வாழ்கின்ற அசாதாரணமான கடல் வெப்பம், அழுத்தம், மற்றும் இருள் போன்ற அசாதாரண சூழ்நிலைகளை கடல் அவற்றிற்கு வழங்குகிறது. கடற்படுகையிலுள்ள கருந் திறப்பு, குளிர் கசிவு போன்றவை உள்ளிட்ட இச்சூழலுக்கு உரிய சில எடுத்துக்காட்டுகளாகும். இவற்றுடன் தொடர்புள்ள சூழல்மண்டலம் முழுவதிலுமுள்ள உடன்வாழும் நுண்ணுயிர்களான பாக்டீரியா, ஐதரோகார்பன் சேர்மங்கள் வேதிமுறைத் தொகுப்பு மூலம் உச்ச விரும்பிகளுக்கான ஆற்றலை வழங்குகின்றன. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கரிம மூலக்கூறுகள் ஊட்டச் சத்துக்களை, கரிமமல்லா மூலக்கூறுகள் அல்லது மீத்தேனின் ஆக்சிசனேற்றம் மூலமாக கரிம வேதிப் பொருளாக மாற்றும் உயிரியற் செயற்பாடு வேதிமுறைத் தொகுப்பு ஆகும். ஒளித்தொகுப்பில் உள்ளது போல இங்கு சூரிய ஒளியை ஆற்றல் மூலமாகப் பயன்படுத்துவது இல்லை.

ஆழ்கடல் திறப்புகளைச் சுற்றியுள்ள கடல் வேதியியல் தொடர்பான படம்

காலநிலை மாற்றம்[தொகு]

மனித இனச்சூழல் காரணிகள் காரணமாக அதிகரிக்கும் கார்பன் டையாக்சைடு அளவுகளின் விளைவாக கடல் வேதியியல் பாதிக்கப்படும் சாத்தியம் உள்ளது. புவி வெப்பமடைதல் மற்றும் உவர்நீர் மாற்றங்கள் போன்ற கூறுகளும், கடல் சூழலில் குறிப்பிடும்படியான சூழலியல் விளைவுகளை ஏற்படுத்தும்[4]. ஏராளமான சுண்ணாம்புக் காரத்தை கடலில் கொட்டிக் குவிப்பதால் அமிலமாகும் தன்மை திரும்பும். இதனால் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடை ஈர்க்கும் திறன் கடலுக்கு அதிகரிக்கும் என்று ஒரு முன்மொழிவு பரிந்துரைக்கிறது.[5][6][7]

கோள்களில் கடல் வேதியியல்[தொகு]

கேசினி விண்கலம் கொடுத்த தரவுகளைப் பயன்படுத்தி ஒரு கோள் விஞ்ஞானி சனியின் நிலவான என்செலாதசின் கடல் வேதியியலை புவி வேதியியல் மாதிரிகளைப் பயன்படுத்தி ஆய்வு செய்தார். உப்புகள் இருப்பதற்கான அறிகுறிகள் அங்கு திரவக்கடல் இருக்கலாம் என்ற கருத்தை முன்வைத்தது. இக்கோட்பாடு அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் இருப்பதை அதிகரிக்கிறது அல்லது கரிம வாழ்க்கை தொடங்குவதற்கான முன்னோடி வேதிப்பொருட்களாக அவ்வுப்புகள் இருக்கலாம் என்ற நம்பிக்கையை அளிக்கிறது[8][9]

மேற்கோள்கள்[தொகு]

  1. DOE (1994). "5". in A.G. Dickson & C. Goyet. Handbook of methods for the analysis of the various parameters of the carbon dioxide system in sea water. 2. ORNL/CDIAC-74. http://cdiac.esd.ornl.gov/ftp/cdiac74/chapter5.pdf. பார்த்த நாள்: 2017-01-16. 
  2. Coble, Paula G. (2007). "Marine Optical Biogeochemistry:  The Chemistry of Ocean Color". Chemical Reviews 107: 402–418. doi:10.1021/cr050350. 
  3. Gribble, Gordon W. (2004). "Natural Organohalogens: A New Frontier for Medicinal Agents?". Journal of Chemical Education 81: 1441. doi:10.1021/ed081p1441. https://archive.org/details/sim_journal-of-chemical-education_2004-10_81_10/page/1441. 
  4. Millero, Frank J. (2007). "The Marine Inorganic Carbon Cycle". Chemical Reviews 107: 308–341. doi:10.1021/cr0503557. 
  5. Duncan Clark Cquestrate: adding lime to the oceans; Putting lime into the oceans has the potential to decrease ocean acidity and reduce atmospheric CO2 levels 13 July 2009 The Guardian (UK)
  6. Ian Katz 20 ideas that could save the world; Dump Billions of Tons of Limestone Into 13 July 2009 The Guardian (UK)
  7. http://www.infrastructurist.com/2009/07/14/from-the-uk-20-bold-schemes-that-could-save-us-from-global-warming/ பரணிடப்பட்டது 2009-07-18 at the வந்தவழி இயந்திரம் July 14, 2009 Infrastructurist
  8. Pete Spotts Cassini spacecraft finds evidence for liquid water on Enceladus June 25, 2009 Christian Science Monitor
  9. Sodium salts in E-ring ice grains from an ocean below the surface of Enceladus Nature 459, 1098-1101 (25 June 2009) Nature

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்_வேதியியல்&oldid=3761232" இலிருந்து மீள்விக்கப்பட்டது