புறப்பரப்பு அறிவியல்
புறப்பரப்பு அறிவியல் (Surface science) என்பது பருப்பொருள்களின் ஏதேனும் இரண்டு நிலைகளின் இடைமுகங்களில் அதாவது திண்மம்–நீர்மம் இடைமுகங்கள், திண்மம்–வளிமம் இடைமுகங்கள், திண்மம்–வெற்றிடம் இடைமுகங்கள் மற்றும் நீர்மம்–வளிமம் இடைமுகங்கள் உள்ளிட்ட இடைமுகங்களில் இயற்பிய மற்றும் வேதியிய நிகழ்வுகளைப் பற்றிய ஆய்வியலாகும். புறப்பரப்பு இயற்பியல் மற்றும் புறப்பரப்பு வேதியியல் ஆகிய களங்களை உள்ளடக்கியதாகும்.[1] இதனோடு தொடர்புடைய நடைமுறைப் பயன்பாடுகள் புறப்பரப்பு பொறியியல் என்று வகைப்படுத்தப்படுகின்றன. இந்த அறிவியலானது பலபடித்தான வினைவேக மாற்றம், குறைக்கடத்தி சாதன கட்டமைப்பு, எரிபொருள் மின்கலங்கள் மற்றும் ஒட்டுபொருள்கள் போன்றவற்றைக் குறித்த கருத்தியல்களை உள்ளடக்கியுள்ளது . புறப்பரப்பு அறிவியல் என்பது இடைமுகம் மற்றும் கூழ்ம அறிவியலோடு நெருங்கிய தொடர்புடையது.[2] இடைமுக வேதியியல் மற்றும் இடைமுக இயற்பியல் போன்றவை இரண்டிற்குமான பொதுவான பாடப்பொருளாகும்.
வரலாறு
[தொகு]புறப்பரப்பு வேதியியல் களமானது பவுல் சேபாட்டியரால் முன்னெடுக்கப்பட்ட ஐதரசனேற்றத்தின் மீதான பலபடித்தான வினைவேக மாற்றம் மற்றும் பிரிட்சு ஏபரின் ஹேபர் செயல்முறை ஆகியவற்றுடன் தொடங்கியது.[3] இர்வின் லாங்மூர் என்பவதும் இந்த ஆய்வியலின் நிறுவநர்களில் ஒருவராவார். இவர் அறிவியல் பருவ இதழ்களில் புறப்பரப்பு அறிவியல் என்ற பெயரையும் முன்மொழிந்தவர் ஆவார். லாங்மூர் உட்கவர்தல் சமன்பாடு ஒற்றை அடுக்கு உட்கவர்லை மாதிரியாக்கப் பயன்படுகிறது. இந்த சமன்பாடானது, அனைத்து மேற்பரப்பு உறிஞ்சும் தளங்களும் உறிஞ்சும் இனங்களுடன் ஒரே மாதிரியான தொடர்பைக் கொண்டுள்ளன என்பதாகவும் மற்றும் ஒன்றோடொன்று தொடர்பு கொள்வதில்லை என்ற நிபந்தனையோடும் வெற்றிகரமாகப் பொருந்தும். 1974- ஆம் ஆண்டில் கெரார்டு எர்ட்டில் என்பார் குறை ஆற்றல் எதிர்மின்னி சிதறல் என்ற புதிய ஒரு உத்தியைக் கொண்டு பலேடியத்தின் பரப்பின் மீதான ஐதரசனின் உட்கவர்தலை முதன்முதலாக விவரித்தார். [4] இதே போன்ற ஆய்வுகள் பிளாட்டினம்,[5] நிக்கல்,[6][7] மற்றும் இரும்பு[8] போன்ற தனிமங்களுடன் தொடர்ந்தன. புறப்பரப்பு அறிவியலின் மிகச் சமீபத்திய மேம்பாடுகள் 2007-ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு வெற்றியாளர் கெரார்டு எர்ட்டிலின் புறப்பரப்பு வேதியியலுடன் தொடர்புடையவையாகும், குறிப்பாக பிளாட்டினத்தின் புறப்பரப்பின் மீது கார்பன் மோனாக்சைடு மூலக்கூறுகளின் இடைவினை குறித்த இவரது புலனாய்வுச் சோதனைகளுடன் தொடர்புடையவை எனலாம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Prutton, Martin (1994). Introduction to Surface Physics. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-853476-1.
- ↑ Luklema, J. (1995–2005). Fundamentals of Interface and Colloid Science. Vol. 1–5. Academic Press.
- ↑ Wennerström, Håkan; Lidin, Sven. "Scientific Background on the Nobel Prize in Chemistry 2007 Chemical Processes on Solid Surfaces" (PDF).
- ↑ Conrad, H.; Gerhard Ertl; Latta, E.E. (February 1974). "Adsorption of hydrogen on palladium single crystal surfaces". Surface Science 41 (2): 435–446. doi:10.1016/0039-6028(74)90060-0. Bibcode: 1974SurSc..41..435C.
- ↑ Christmann, K.; Gerhard Ertl; Pignet, T. (February 1976). "Adsorption of hydrogen on a Pt(111) surface". Surface Science 54 (2): 365–392. doi:10.1016/0039-6028(76)90232-6. Bibcode: 1976SurSc..54..365C.
- ↑ Christmann, K.; Schober, O.; Gerhard Ertl; Neumann, M. (June 1, 1974). "Adsorption of hydrogen on nickel single crystal surfaces". The Journal of Chemical Physics 60 (11): 4528–4540. doi:10.1063/1.1680935. Bibcode: 1974JChPh..60.4528C.
- ↑ Christmann, K.; Behm, R. J.; Gerhard Ertl; Van Hove, M. A.; Weinberg, W. H. (May 1, 1979). "Chemisorption geometry of hydrogen on Ni(111): Order and disorder". The Journal of Chemical Physics 70 (9): 4168–4184. doi:10.1063/1.438041. Bibcode: 1979JChPh..70.4168C.
- ↑ Imbihl, R.; Behm, R. J.; Christmann, K.; Gerhard Ertl; Matsushima, T. (May 2, 1982). "Phase transitions of a two-dimensional chemisorbed system: H on Fe(110)". Surface Science 117 (1): 257–266. doi:10.1016/0039-6028(82)90506-4. Bibcode: 1982SurSc.117..257I.