குவாண்டம் புள்ளி
Appearance
ஒரு நானோ படிக குறைகடத்தி குவாண்டம் புள்ளி (Quantum dot, சுருக்கமாக QD ) என அழைக்கப்படுகிறது. இது ஒளியை உமிழும் பண்புகளை பெற்ற நானோ துகள் ஆகும். இந்த துகள்களின் எக்சைடான்கள் (excitons) மூன்று அச்சுகளிலும் குவாண்டம் எல்லையால் கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே இது ஒரு பூஜிய பரிமாண துகள் ஆகும். இந்த தனிப்பட்டப் பண்பின் காரணமாக இந்த நானோ படிகங்கள் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப் படுகின்றன.(எ.கா) CdSe , CdTe QDs . QD -இன் ஓளி உமிழும் பண்பு உயிர் தொழில் நுட்பவியலில் கேன்சர் அணுக்களைப் படம் பிடித்துக் காட்டப் பயன்படுகின்றன. மேலும் சூரிய மின்கலம், சுற்றுச் சூழல் என பல துறைகளில் இதன் பயன்பாடுகள் ஆராயப்பட்டு வருகின்றன. இத்துகள்கள் உமிழும் ஒளியின் அலைநீளம் மற்றும் இத்துகள்களின் அளவு இத்துகள்களின் ஆற்றல் இடைவெளி மட்டத்தைப் பொறுத்து மாறுபடும்.