உள்ளடக்கத்துக்குச் செல்

முனைவர் பட்ட மேலாய்வாளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முனைவர் பட்ட மேலாய்வாளர்
பணி
பணி வகை
தொழில்சார் பணி
செயல்பாட்டுத் துறைகள்
கல்வி, தனியார் தொழிலகம்
விளக்கம்
திறமைகள்
கல்வித் தகைமை
முனைவர் (அ) சமமான

வேலைவாய்ப்புத்
துறைகள்
கல்வி, தனியார் தொழிலகம்



துறைவாரியாக முனைவர் பட்ட மேலாய்வாளர் (ஐக்கிய நாடுகள், 2012)[1]

  உயிர் அறிவியல் (65%)
  இயற்பியல் (13%)
  பொறியியல் (11%)
  கணிதம் மற்றும் கணினி அறிவியல் (3%)
  நில அறிவியல் (3%)
  சமூக அறிவியல், பிற (5%)

முனைவர் பட்ட மேலாய்வாளர் (Postdoctoral researcher) என்பவர் ஒருவர், தனது முனைவர் படிப்புகளை முடித்த பிறகு (பொதுவாக பிஎச்டி) தொழில் ரீதியாக ஆராய்ச்சி மேற்கொள்பவர் ஆவார். ஒரு முனைவர் பட்ட மேலாய்வாளரின் இறுதி இலக்கு, கல்வி, ஆராய்ச்சி அல்லது வேறு எந்தத் துறையிலும் ஒரு தொழிலைத் தொடர சிறந்த திறன்களைப் பெறக் கூடுதல் ஆராய்ச்சி, பயிற்சி அல்லது கற்பித்தலைத் தொடருவதாகும்.[2] இது ஒரு தற்காலிகப் பணியாகவோ அல்லது கல்வி நிலையங்களில் நியமனம் ஒன்றைப் பெறும் வரையிலானக் காலப் பணியாகவும் உள்ளது. சிறப்புப் பாடத்தில் நிபுணத்துவத்தை மேலும் அதிகரிக்கவும் சிலர் இப்பணியினை மேற்கொள்கிறார்கள். ஆராய்ச்சி குழுவை ஒருங்கிணைத்தல் மற்றும் புதிய திறன்கள் மற்றும் ஆராய்ச்சி முறைகளைப் பெறுதல் ஆகியவையும் இவர்களது நோக்கங்களில் அடங்கும். ஆய்வு நிறுவனத்தின் அறிவார்ந்த பணியை முன்னேற்றும் போது முனைவர் பட்ட மேலாய்வு பெரும்பாலும் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. இவர்கள் சக மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்விதழ்கள் அல்லது ஆராய்ச்சி கருத்தரங்கம் மற்றும் மாநாடுகளில் தொடர்புடைய ஆய்வுமுடிவுகளை வெளியிடுவார்கள். சில நாடுகளில், முனைவர் பட்ட மேலாய்வு மேலும் முறையான தகுதிகள் அல்லது சான்றிதழ் பெற வழிவகுக்கின்றன. பிற நாடுகளில் இந்த வழக்கம் இல்லை.[3][4]

முனைவர் பட்ட மேலாய்விற்கு நிதி நிறுவனங்கள் உதவித்தொகை வழங்குகின்றன. இத்தகைய ஆராய்ச்சி பதவிக்கான நியமனங்களில் ஆய்வு மேற்கொள்பவர் முனைவர் பட்ட மேலாய்வு ஆராய்ச்சியாளர், முதுநிலை ஆராய்ச்சியாளர் அல்லது முதுகலை ஆராய்ச்சி உதவியாளர் என்று அழைக்கப்படலாம். முதுகலை ஆய்வாளர்கள் பொதுவாக முதன்மை ஆய்வாளர் ஒருவரின் மேற்பார்வையின் கீழ் பணிபுரிகின்றனர்.[5]

பணிப் பாதுகாப்பு

[தொகு]

முனைவர் பட்ட மேலாய்வு ஆராய்ச்சியாளர்களின் பணியின் தன்மை காரணமாகவும்,[6][7][8][9][10] பல துறைகளில் முனைவர் பட்டம் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாலும்[11][12] சில ஆய்வாளர்கள் நிச்சயமற்ற எதிர்காலத்தினை எதிர்கொள்கிறார்கள்.[4][13] பெரும் பகுதியினர் பதவிக்காலம் முழுவதையோ[14] அல்லது தேர்ந்தெடுத்த ஆராய்ச்சித் துறையில் விரும்பத்தக்க ஆசிரியர் பதவியினைப் பெறுவதில்லை.[15][16][17][18] எவ்வாறாயினும், 2022ஆம் ஆண்டு நிலவரப்படி, கோவிட் பெருந்தொற்றுக்கு விடையறுக்கும் வகையில் தொழிலாளர் சந்தையில் பரந்த மாற்றங்கள், விண்ணப்பதாரர்கள் பற்றாக்குறையால் குறைந்தது சில துறைகளில் முனைவர் பட்ட மேலாய்வு இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.[19]

பெரும்பாலான இந்தியாவின் முதன்மையான பொறியியல், அறிவியல் மற்றும் மேலாண்மை நிறுவனங்கள் (இந்திய அறிவியல் நிறுவனம், இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், இந்திய மேலாண்மை நிறுவனங்கள் மற்றும் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகங்கள் முனைவர் பட்ட மேலாய்வு பதவிகளைக் கொண்டுள்ளன. இவர்களுக்கான ஆய்வு நிதியுதவி பொதுவாக மாதத்திற்கு 40,000 முதல் 70,000 இந்திய ரூபாயில் வழங்கப்படுகிறது.[20] இந்தியச் சமூக அறிவியல் ஆராய்ச்சி கழகம் முனைவர் பட்டம் மேலாய்விற்கு ஆய்வு நிதியினை வழங்குகிறது.[21]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Nature, volume 520, 9 April 2015.
  2. Cornell Staff (14 June 2018). "Structure of Postdoctoral Study". Postdocs.Cornell.edu. Ithaca, N.Y.: Office of Postdoctoral Studies, Cornell University. Archived from the original on 14 June 2018. பார்க்கப்பட்ட நாள் 4 August 2022.
  3. "What is a Postdoc?". Archived from the original on 2015-04-02.
  4. 4.0 4.1 Powell, Kendall (2015). "The future of the postdoc: There is a growing number of postdocs and few places in academia for them to go". Nature 520 (7546): 144–7. doi:10.1038/520144a. பப்மெட்:25855437. 
  5. "National Postdoctoral Association: Career Development Resources". NationalPostDoc.org. Archived from the original on 2015-03-16.
  6. Bourne, P. E.; Friedberg, I. (2006). "Ten Simple Rules for Selecting a Postdoctoral Position". PLOS Computational Biology 2 (11): e121. doi:10.1371/journal.pcbi.0020121. பப்மெட்:17121457. Bibcode: 2006PLSCB...2..121B. 
  7. Ruben, A. (2013). "The Postdoc: A Special Kind of Hell". Science. doi:10.1126/science.caredit.a1300256. 
  8. Brooks, I. M. (2008). "Postdoc glut means academic pathway needs an overhaul". Nature 454 (7208): 1049. doi:10.1038/4541049a. பப்மெட்:18756230. Bibcode: 2008Natur.454.1049B. 
  9. Theodosiou, M; Rennard, J. P.; Amir-Aslani, A (2012). "The rise of the professional master's degree: The answer to the postdoc/PhD bubble". Nature Biotechnology 30 (4): 367–8. doi:10.1038/nbt.2180. பப்மெட்:22491294. 
  10. Lauto, G.; Sengoku, S. (2015). "Perceived incentives to transdisciplinarity in a Japanese university research center". Futures 65: 136–149. doi:10.1016/j.futures.2014.10.010. 
  11. Cyranoski, D.; Gilbert, N.; Ledford, H.; Nayar, A.; Yahia, M. (2011). "Education: The PhD factory". Nature 472 (7343): 276–279. doi:10.1038/472276a. பப்மெட்:21512548. Bibcode: 2011Natur.472..276C. 
  12. McCook, A. (2011). "Education: Rethinking PhDs. Fix it, overhaul it or skip it completely — institutions and individuals are taking innovative approaches to postgraduate science training". Nature 472 (7343): 280–282. doi:10.1038/472280a. பப்மெட்:21512549. 
  13. Anon (2014). "Harsh reality: Two reports highlight the plight of postdocs on both sides of the pond aiming for academia". Nature 516 (7529): 7–8. doi:10.1038/516007b. பப்மெட்:25471843. 
  14. Kaplan, K. (2010). "Academia: The changing face of tenure". Nature 468 (7320): 123–125. doi:10.1038/nj7320-123a. பப்மெட்:21157983. 
  15. Jones, A. (2013). "The explosive growth of postdocs in computer science". Communications of the ACM 56 (2): 37–39. doi:10.1145/2408776.2408801. 
  16. Anon (2011). "Fix the PhD: No longer a guaranteed ticket to an academic career, the PhD system needs a serious rethink". Nature 472 (7343): 259–260. doi:10.1038/472259b. பப்மெட்:21512527. 
  17. Jennifer Rohn (2011). "Give postdocs a career, not empty promises". Nature 471 (7336): 7. doi:10.1038/471007a. பப்மெட்:21368781. Bibcode: 2011Natur.471....7R. 
  18. Alberts, B; Kirschner, M. W.; Tilghman, S; Varmus, H (2015). "Opinion: Addressing systemic problems in the biomedical research enterprise". Proceedings of the National Academy of Sciences 112 (7): 1912–3. doi:10.1073/pnas.1500969112. பப்மெட்:25691698. 
  19. "As professors struggle to recruit postdocs, calls for structural change in academia intensify". www.science.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-14.
  20. IIT Delhi, PostDoc. "Postdoc in IIT Delhi". IIT Delhi. பார்க்கப்பட்ட நாள் 2015-08-08.
  21. "Post Doctoral Fellowship | Indian Council of Social Science Research (ICSSR)". icssr.org. பார்க்கப்பட்ட நாள் 2020-06-28.