உள்ளடக்கத்துக்குச் செல்

அணுவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அணுவியல் (Atomic physics) அல்லது அணு இயற்பியல் என்பது அணு, அணுவின் கூறுகள், இயல்புகள், கட்டமைப்பு மற்றும் இலத்திரன்களின் இயக்கம் மற்றும் அணுக்கரு குறித்தான இயல் ஆகும்.[1] இத்துறை இயற்பியலின் ஒரு முக்கிய பிரிவு. அணு இயற்பியலானது அணுக்கருவைச் சுற்றி இலத்திரன்கள் அமைந்துள்ள முறை மற்றும் அதன் அமைவுகளில் ஏற்படும் மாற்றங்களை குறித்து விவரிக்கிறது.

மேலும் இத்துறை பெரும்பாலும் அணுக்கரு ஆற்றல் மற்றும் அணுக்கரு ஆயுதங்களுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. இருப்பினும் அணுவின் உட்கரு குறித்து அறிவதற்கு அணுக்கரு இயற்பியல் என்ற தனிப்பிரிவு உள்ளது. பொதுவாக இயற்பியல் ஆய்வுகளைப் பொறுத்தவரை இத்துறை அணு, மூலக்கூறு, ஒளி இயற்பியல் என்ற பெரும் தலைப்பின் கீழ் உள்ளது.

குறிப்பிடத்தக்க அணுவியலாளர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அணுவியல்&oldid=2220940" இலிருந்து மீள்விக்கப்பட்டது