அணு, மூலக்கூறு, ஒளி இயற்பியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அணு, மூலக்கூறு, ஒளி இயற்பியல் (atomic, molecular, and optical physics) என்பது பருப்பொருள்-பருப்பொருள் மற்றும் ஒளிக்கற்றை-பருப்பொருள் இடையேயான தொடர்புகள் மற்றும் இடைவினைகளை விவரிக்கும் இயற்பியலின் ஒரு துறை ஆகும். இந்த இடைவிளைவுகள் ஒரு சில அணுக்களுக்கு இடையே அமைவதாகும்.[1] பொதுவாக இந்த இடைவினைகளால் ஏற்படும் ஆற்றலானது இலத்திரன்வோல்ட்டில் அளக்கப்படுகிறது.[2]:1356[3]

பொதுவாக இத்துறை அணுக்களால் ஏற்படும் மின்காந்த அலைகளின் சிதறல், பரப்புக் கவர்ச்சி, இலத்திரன்களின் கிளர்ச்சி நிலை கதிரியக்கம் மற்றும் மூலக்கூறுகளின் ஒளியியல் மற்றும் கதிரியக்க பண்புகள் குறித்து விளக்குகிறது.

குறிப்புகள்[தொகு]