ரொனால்டு பிசர்
சர் ரொனால்டு பிசர் Sir Ronald Fisher | |
---|---|
பிறப்பு | இலண்டன், இங்கிலாந்து | 17 பெப்ரவரி 1890
இறப்பு | 29 சூலை 1962 அடிலெயிட், தெற்கு ஆஸ்திரேலியா | (அகவை 72)
வாழிடம் | இங்கிலாந்து, ஆத்திரேலியா |
தேசியம் | பிரிட்தானியர் |
துறை | புள்ளியியல், மரபியல், பரிணாம உயிரியல் |
பணியிடங்கள் | உரொதம்ஸ்டட் ஆய்வு, இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி, கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம், அடிலெயிட் பல்கலைக்கழகம், பொதுநலவாய அறிவியல், தொழில் ஆய்வு நிறுவனம் |
கல்வி கற்ற இடங்கள் | கோன்வில் கேயசு கல்லூரி, கேம்பிரிட்சு |
Academic advisors | ஜேம்சு ஆப்வுட் ஜீன்சு |
அறியப்படுவது | பிசரின் கொள்கை |
சர் ரொனால்டு ஐல்மர் பிசர் (Sir Ronald Aylmer Fisher) அல்லது ஆர். ஏ. பிசர்,[1] 17 பெப்ரவரி 1890 – 29 சூலை 1962) என்பவர் ஆங்கிலேய புள்ளியியலாளரும், உயிரியலாளரும் ஆவார். இவர் மெண்டலின் விதிகள், இயற்கைத் தேர்வு ஆகியவற்றை இணைக்க கணிதத்தைப் பயன்படுத்தினார். இதன் மூலம் நவீன பரிணாமப் பகுப்பு எனப்படும் படிவளர்ச்சிக் கொள்கையின் புதிய டார்வினியத் தொகுப்பைக் கண்டுபிடிக்க முடிந்தது. இவர் ஆரம்ப காலத்தில் பிரபலமான இனவாக்க மேம்பாட்டு ஆய்வாளராக இருந்தார். பிழைக்கொள்கைகளில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்தார். இதனால் அவர் புள்ளியியல் தொடர்பான கணக்குகளை சோதனை செய்ய நேரிட்டது. 1915-1919 இடைப்பட்ட காலத்தில் அவர் கணித ஆசிரியராகவும், இயற்பியல் ஆசிரியராகவும் விளங்கினார். உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் பரவல்படி பகுப்பாய்வு மற்றும் சமவாய்ப்புச்சோதனை மாதிரிகளை ஆராய்ந்தார். நவீன புள்ளியியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Yates, F.; Mather, K. (1963). "Ronald Aylmer Fisher 1890-1962". Biographical Memoirs of Fellows of the Royal Society 9: 91–129. doi:10.1098/rsbm.1963.0006.