வடிவேல் பாலாஜி
வடிவேல் பாலாஜி | |
---|---|
பிறப்பு | பெப்ரவரி 17, 1975 மதுரை, தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | 10 செப்டம்பர் 2020 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 45)
பணி | தொலைக்காட்சி நகைச்சுவை நடிகர், மிமிக்ரி கலைஞர் மற்றும் திரைப்பட நடிகர் |
அறியப்படுவது | கலக்கப் போவது யாரு? அது இது எது |
வாழ்க்கைத் துணை | ஜோதிலட்சுமி |
பிள்ளைகள் | 2 |
வடிவேல் பாலாஜி (Vadivel Balaji, 17 பிப்ரவரி 1975 - 10 செப்டம்பர் 2020) ஓர் இந்திய தமிழ் தொலைக்காட்சி நகைச்சுவை நடிகர், மிமிக்ரி கலைஞர் மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் குரலைப் பின்பற்றியதற்காக பார்வையாளர்களிடையே புகழ் பெற்ற பின்னர், இவர் வடிவேல் என்ற புனைப்பெயரைப் பெற்றார்.[1] தொலைக்காட்சித் துறையில் தனது படைப்புகளுக்கு நன்கு அறியப்பட்ட இவர், ஸ்டார் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான கலக்கப் போவது யாரு?, சிரிச்சா போச்சு மற்றும் அது இது எது போன்றவற்றில் தோன்றினார்.[2] ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான ஜோடி நம்பர் ஒன்னின், எட்டாவது சீசனில் போட்டியாளராகவும் பங்கேற்றார்.[3]
தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]
இவர் ஜோதிலட்சுமி என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஸ்ரீகாந்த் மற்றும் ஸ்ரீதேவி என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இறப்பு[தொகு]
24 ஆகத்து 2020 அன்று, மாரடைப்பு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 10, 2020 அன்று காலை, தனது 45 ஆவது வயதில் இறந்தார்.[4]
நடித்த திரைப்படங்கள்[தொகு]
- யாருடா மகேஷ் (2013)
- சுட்ட பழம் சுடாத பழம் (2016)
- கோலமாவு கோகிலா (2018)
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Bhasin, Shriya (10 September 2020). "Comedian Vadivel Balaji dies due to heart attack in Chennai" (en).
- ↑ "'Kalakka Povadhu Yaaru Champions' all set for its grand finale - Times of India" (en).
- ↑ Balach, Logesh. "Comedian Vadivel Balaji dies at 45 in Chennai" (en).
- ↑ "வடிவேல் பாலாஜி உடல் அடக்கம்: நடிகர்கள் உதயநிதி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி".