அது இது எது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அது இது எது
வகைநகைச்சுவை
வழங்கல்மா கா பா ஆனந்த்
சிவகார்த்திகேயன்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்2
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 40–55 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்6 சூன் 2009 (2009-06-06) –
24 பெப்ரவரி 2019 (2019-02-24)

அது இது எது என்பது விஜய் தொலைக்காட்சியில் 2009 முதல் 2019 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான நகைச்சுவை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியை முதலில் தொகுப்பாளர் மற்றும் நடிகருமான சிவகார்த்திகேயன் தொகுத்துவழங்கினார், அதன் பிறகு தொகுப்பாளர் மா கா பா ஆனந்த் என்பவர் தொகுத்து வழங்கினார்.[1][2]

இந்த நிகழ்ச்சியின் முதல் பருவமானது ஜூன் 6, 2009 முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பானது. இரண்டாம் பருவமானது ஜூலை 29, 2017 முதல் ஒவ்வொரு சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கும் ஒளிபரப்பானது. அதன் பிறகு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பானது.[3]

பருவம் 1[தொகு]

முதல் பருவத்தில் குரூப்பிலை டூப்பு, சிரிச்ச போச்சு மற்றும் மாத்தியோசி போன்ற மூன்று சுற்றுக்கள் உண்டு. 3 பிரபலங்கள் கலந்துகொள்ளவர்கள், முதலில் அவர்களுக்கு 1000 மதிப்பெண் கொடுக்கப்படும். ஒவ்வொரு சுற்றிலும் அவர்களின் மதிப்பெண் கணக்கிடப்படும் இறுதியில் யாரிடம் அதிக மதிப்பெண் இருக்கிறன்றது அவரே வெற்றியாளர் ஆவார்.

இந்த பருவத்தில் சிரிச்ச போச்சு சுற்றில் பங்குபெற்ற நகைச்சுவை நடிகர்கள் ரோபோ சங்கர், ராமர் போன்ற சிலர் தற்பொழுது மிகவும் பிரபலமாக உள்ளார்கள். இந்த பருவத்தை தொகுத்து வழங்கிய சிவகார்த்திகேயன் தமிழ் திரைப்படத்துறையில் எல்லோராலும் அறியப்படும் நடிகராக உள்ளார்.[4]

பருவம் 2[தொகு]

இரண்டாம் பருவத்தில் சிங் இன் த ரெயின், சிரிச்ச போச்சு, 5 என்றுதலுக்குள்ள போன்ற சுற்றுக்கள் உண்டு, நான்கு பெயர் இரண்டு அணியாக பங்கு கொள்வார்கள்.

பிரச்சனைகள்[தொகு]

இந்த நிகழ்ச்சியில் சிரிச்ச போச்சு என்ற சுற்றில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை அவமதிக்கும் விதமாக பேசப்பட்டது என்று வழக்க போடப்பட்டது. அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களை கிண்டல் மற்றும் அவமானம் செய்யப்பட்டது. அவர் கூறிய வசனங்களான என்னமா இப்படி பன்றிங்கலேம்மா, போலீசை கூப்புடுவான் போன்ற வசனங்கள் மிகவும் பிரபலமானது. இந்த வசனங்களை வைத்து பாடல்கள், நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் வசனங்களாக பயன்படுத்தினார்கள்.[5]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அது_இது_எது&oldid=3597937" இருந்து மீள்விக்கப்பட்டது