உள்ளடக்கத்துக்குச் செல்

ஆகா கல்யாணம் (விசய் தொலைக்காட்சி தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆகா கல்யாணம்
வகை
இயக்கம்பிரான்சிசு கதிரவன்
நடிப்பு
    • மௌனிகா
    • விக்ரம் சிறீ
    • காயத்ரி சிறீ
    • விபிசு அசுவந்த்
    • ஆர்.சி.ராம்
    • பவ்ய சிறீ
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தயாரிப்பு
படவி அமைப்புபல ஒளிப்படக்கருவி
ஓட்டம்ஒரு அத்தியாயத்திற்கு சுமார் 20-22 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்டெலி தொழிற்சாலை
விநியோகம்காட் ச்டார்
ஒளிபரப்பு
அலைவரிசை விசய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்2023 (2023)
Chronology
தொடர்புடைய தொடர்கள்காட்சோரா

ஆகா கல்யாணம் (Aaha Kalyanam) வரவிருக்கும் இந்திய தமிழ்மொழி தொலைக்காட்சித் தொடராகும். இதில் மௌனிகா, விக்ரம் சிறீ, காயத்ரி சிறீ, விபிசு அசுவந்த், ஆர்.சி.ராம் மற்றும் பவ்யா சிறீ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[1] இந்தத் தொடர் வங்காள மொழி தொலைக்காட்சியான ச்டார் சல்சாவின் பிரபலமான நாடகமான காட்சோராவின் அதிகாரப்பூர்வ மறுஆக்கமாகும்.[2]இத்தொடர் 2023 ஆம் ஆண்டில் விசய் தொலைக்காட்சியில் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.[3]

கதை

[தொகு]

கோடீசுவரி (மௌனிகா) என்ற ஒற்றைத் தாய் தன் மூன்று மகள்களுடன் போராடுவதைச் சுற்றியே கதை சுழல்கிறது. என்றாவது ஒரு நாள் தன் மகள்கள் பணக்கார குடும்பத்தில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஒரு தாய் விரும்புகிறாள். ஆனால் யாருடன் யாருடைய பந்தம் உருவாகும், முடிவு கடவுளின் கையில் உள்ளது.

நடிகர்கள்

[தொகு]

முக்கிய கதாபாத்திரங்கள்

[தொகு]
  • விக்ரம் சிறீ
  • காயத்ரி சிறீ
  • விபிசு அசுவந்த்
  • ஆர்.சி.ராம்
  • பவ்ய சிறீ

தொடர்

[தொகு]

தயாரிப்பு

[தொகு]

நடிப்பு

[தொகு]

பிரபல தமிழ் நடிகை மௌனிகா[4] கோடீசுவரியாக நடித்தார். காயத்ரி சிறீ கோடீசுவரியின் மூத்த மகளாக கதாநாயகியாக தமிழில் அறிமுகமானதன் மூலம் கதாநாயகியாக நடித்தார். ஆரம்பத்தில், சே டிசோசா ஆண் கதாபாத்திரங்களில் நடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆனால் அவர் மறுத்துவிட்டார்.[5] பின்னர், அவருக்கு சோடியாக விக்ரம் சிறீ கதாநாயகனாக நடிக்கிறார்.

வெளியீடு

[தொகு]

முதல் ப்ரோமோ 8 பிப்ரவரி 2023 அன்று வெளியிடப்பட்டது, இதில் கதாநாயகி இடம்பெற்றுள்ளார். கோடீசுவரி மற்றும் அவரது மூன்று மகள்கள் மகிழ்ச்சியுடன் கடையில் ஷாப்பிங் செய்வதைக் காணலாம். கடையின் உரிமையாளர் அவளிடம் மகளின் திருமணத்தைப் பற்றி கேட்டார்.[6] ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மௌனிகா தொலைக்காட்சிக்குத் திரும்புவதை இது குறிக்கிறது.

இரண்டாவது ப்ரோமோ 13 பிப்ரவரி 2023 அன்று வெளியிடப்பட்டது, இதில் கதாநாயகன் மூன்று சகோதரர்கள் மற்றும் கோடீசுவரியின் மகள்கள் நகைக்கடையில் சந்திக்கிறார்கள்.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Aaha Kalyanam Serial on Star Vijay". www.newsbugz.com (in ஆங்கிலம்).
  2. "Aaha Kalyanam new serial on Star Vijay". themayabazaar.com (in ஆங்கிலம்).
  3. "Upcoming Vijay Tv serials". timesofindia.indiatimes.com (in ஆங்கிலம்).
  4. "Popular actress Mounika to play the titular role in upcoming show 'Aaha Kalyanam'". timesofindia.indiatimes.com (in ஆங்கிலம்).
  5. "விஜய் டிவியில் புதிதாக தொடங்க இருக்கும் பிரமாண்ட சீரியல் – ஹீரோவாக ரீஎன்ட்ரி கொடுத்துள்ள நடிகர்!". tamil.examsdaily.in.
  6. Mounika. Aaha Kalyanam | Star Vijay.
  7. Mounika. Aaha Kalyanam | Star Vijay.