தமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திய நாடாளுமன்றத்தின் 245 உறுப்பினர்கள் கொண்ட மேலவையான மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா என அழைக்கப்படுகின்ற அவையில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களால் 18 மேலவை உறுப்பினர்கள் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் ஆகும். மேலவையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முடிவடையும்.

கட்சி 31/03/19 நிலவரப்படி கூட்டணி தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்(2016) மாநிலங்களவை உறுப்பினர்கள்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தே.ஜ.கூ 123 5
இந்திய தேசிய காங்கிரசு ஐ.மு.கூ 7 -
திராவிட முன்னேற்றக் கழகம் ஐ.மு.கூ 101 10
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) ஐ.மு.கூ - -
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஐ.மு.கூ - 1
பாட்டாளி மக்கள் கட்சி தே.ஜ.கூ - 1
தமிழ் மாநில காங்கிரசு தே.ஜ.கூ - 1

2013 தேர்தல்[தொகு]

ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைவதை ஒட்டி இத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் அதிமுக சார்பில் நான்கு வேட்பாளர்களும், சிபிஐ சார்பில் ராஜாவும், திமுக சார்பில் கனிமொழியும், தேமுதிக சார்பில் இளங்கோவனும் போட்டியில் உள்ளனர்.[1] இத்தேர்தலில், இரண்டு உறுப்பினர்களைக் கொண்டுள்ள மமகவும், புதிய தமிழகமும் திமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கின்றனர்.[2]. நாளை கூடும் செயற்குழுவில் திமுகவிற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று பாமக அறிவித்துள்ளது. காங்கிரஸிடம் தேமுதிகவும், திமுகவும் ஆதரவு கோரியுள்ள நிலையில், தில்லி தலைமை இறுதி முடிவெடுக்கும் என்று அறிவித்துள்ளனர்.

2013 சூன் உறுப்பினர்கள் நிலை[தொகு]

கட்சி கூட்டணி(20/06/13ல்) தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள், (2013) மாநிலங்களவை உறுப்பினர்கள்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 150 5
இந்திய தேசிய காங்கிரசு UPA 5 4
திராவிட முன்னேற்றக் கழகம் 22 7
பாட்டாளி மக்கள் கட்சி இல்லை 03
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 10 1
இந்தியப் பொதுவுடமைக் கட்சி 9 1
தேசிய முற்போக்கு திராவிட கழகம் இல்லை 22
தேசிய முற்போக்கு திராவிட கழகம் (அதிருப்தி உறுப்பினர்கள் - அதிமுக ஆதரவு) இல்லை 7
மனிதநேய மக்கள் கட்சி இல்லை 2
புதிய தமிழகம் இல்லை 2

2011ல் உறுப்பினர்கள் நிலை[தொகு]

கட்சி கூட்டணி(24/08/11ல்) சட்டமன்ற உறுப்பினர்கள், (2011) மாநிலங்களவை உறுப்பினர்கள்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் TF 150 5
இந்திய தேசிய காங்கிரசு UPA 5 4
திராவிட முன்னேற்றக் கழகம் UPA 22 7
பாட்டாளி மக்கள் கட்சி இல்லை 03
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) TF 10 1
இந்தியப் பொதுவுடமைக் கட்சி TF 9 1
தேசிய முற்போக்கு திராவிட கழகம் இல்லை 29

உறுப்பினர்கள் பட்டியல் (2021)[தொகு]

ஆதாரம்: இந்திய நாடாளுமன்றம் (மாநிலங்களவை)[3]

தமிழகத்தின் நடப்பு மாநிலங்களவை உறுப்பினர்கள்
வ.எண் பெயர் கட்சி காலவரை
1 திருச்சி சிவா3 தி.மு.க மார்ச், 2020
2 ஏ. நவநீதகிருஷ்ணன் அ.இ.அ.தி.மு.க ஜூன் 30, 2016-ஜூன் 29, 2022
3 எஸ். ஆர். பாலசுப்ரமணியன் அ.இ.அ.தி.மு.க ஜூன் 30, 2016-ஜூன் 29, 2022
4 ஆர். எஸ். பாரதி தி.மு.க ஜூன் 30, 2016-ஜூன் 29, 2022
5 ஏ. விஜய குமார் அ.இ.அ.தி.மு.க ஜூன் 30, 2016-ஜூன் 29, 2022
6 டி. கே. எஸ். இளங்கோவன் தி.மு.க ஜூன் 30, 2016-ஜூன் 29, 2022
7 எம்.சண்முகம் தி.மு.க ஜூலை, 2019-ஜூன், 2025
8 பி. வில்சன் தி.மு.க ஜூலை, 2019-ஜூன், 2025
9 என். சந்திரசேகரன் அ.இ.அ.தி.மு.க ஜூலை, 2019-ஜூன், 2025
10 அன்புமணி ராமதாஸ் பா.ம.க ஜூலை, 2019-ஜூன், 2025
11 வைகோ3 ம.தி.மு.க ஜூலை, 2019-ஜூன், 2025
12 என். ஆர். இளங்கோ தி.மு.க மார்ச், 2020
13 அந்தியூர் செல்வராஜ் தி.மு.க மார்ச், 2020
14 மு. தம்பிதுரை அ.இ.அ.தி.மு.க மார்ச், 2020
15 ஜி. கே. வாசன் த.மா.க (மூ) மார்ச், 2020
16 எம். எம். அப்துல்லா தி.மு.க ஆகஸ்ட், 2021-ஜூலை, 2026
17 கனிமொழி என்.வி.என்.சோமு தி.மு.க ஆகஸ்ட், 2021
18 கே.ஆர்.என். ராஜேஷ்குமார் தி.மு.க ஆகஸ்ட், 2021
  • குறிப்பு: எத்தனையாவது முறை உறுப்பினராக பொறுப்பு வகிக்கின்றனர் என்பதை அவர்களின் பெயர்கள் மேல் உள்ள எண்கள் குறிக்கின்றது.

இதையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. "RS polls: Seven to contest six seats in TN". தி இந்து (சென்னை). சூன் 20, 2013. http://www.thehindu.com/news/national/tamil-nadu/rs-polls-seven-to-contest-six-seats-in-tn/article4833865.ece?homepage=true. பார்த்த நாள்: சூன் 20, 2013. 
  2. (சூன் 19, 2013). "மாநிலங்களவைத் தேர்தல் -திமுகவிற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு ஏன்?". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: சூன் 20, 2013. பரணிடப்பட்டது 2014-04-02 at the வந்தவழி இயந்திரம்
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-07-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-05-30 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)