உள்ளடக்கத்துக்குச் செல்

பாட்டாளி மக்கள் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பா.ம.க இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பாட்டாளி மக்கள் கட்சி
சுருக்கக்குறிபாமக
தலைவர்அன்புமணி இராமதாசு
பொதுச் செயலாளர்வடிவேல் இராவணன்
நிறுவனர்ச. இராமதாசு
தொடக்கம்16 சூலை 1989 (37 ஆண்டுகள் முன்னர்) (1989-07-16)
தலைமையகம்தைலாபுரம், திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம், சென்னை - 604001, தமிழ்நாடு
செய்தி ஏடுமக்கள் தொலைக்காட்சி (தொலைக்காட்சி அலைவரிசை)
மாணவர் அமைப்புபாமக மாணவர் அணி
இளைஞர் அமைப்புபாமக இளைஞர் அணி
Labour wingபாட்டாளி தொழிற்சங்கம்
கொள்கைசமூகநீதி, சனநாயகம், சமத்துவம், மனித நேயம்
நிறங்கள் நீலம்
மஞ்சள்
சிவப்பு
ECI statusமாநிலக் கட்சி[1]
Allianceதேசிய ஜனநாயகக் கூட்டணி (1998-2004, 2014 – தற்போது வரை)
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (2004-2009, 2011-13)
ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி (2009-2010)
Seats in Rajya Sabha
1 / 245
Seats in Lok Sabha
0 / 543
Seats in தமிழ்நாடு சட்டப் பேரவை
4 / 234
தேர்தல் சின்னம்
இணையதளம்
pmkofficial.com

பாட்டாளி மக்கள் கட்சி (Pattali Makkal Katchi, பா.ம.க) என்பது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். இக்கட்சியை 1989களில், மருத்துவர் ராமதாஸ் தொடங்கினார். வன்னியர் சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்ட வன்னியர் சங்கமானது, பின்னாளில் பாட்டாளி மக்கள் கட்சி என்னும் அரசியல் கட்சியாக மாறியது. இந்தக் கட்சியின் சின்னமாக 90-களில் 'யானை' சின்னமும், தற்போழுது 'மாம்பழம்' ஆகும்.

இதுவரை இக்கட்சி தமிழ்நாடு சட்டமன்றத்திலும், இந்திய நாடாளுமன்றத்திலும் இடம் பெற்றுள்ளது. இந்தியாவை ஆட்சி செய்த பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது.

சனநாயக முற்போக்கு கூட்டணியில் மார்ச் 26, 2009 வரை இருந்தது.[2] 14வது மக்களவையில் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இரா. வேலு இரயில்வே இணை அமைச்சராக இருந்தார். இந்திய மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணி ராமதாஸ் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்தார்.

சூலை 29, 2010 ஆணையில் இந்திய தேர்தல் ஆணையம் மாநில கட்சிக்கான விதிகளை புதுச்சேரி பாமக பெறாததால் அங்கு பாமக-விற்கான மாநில கட்சி என்ற உரிமையை பறித்துள்ளது. ஆனால் இக்கட்சி சின்னத்தை (மாம்பழம்) இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம் என கூறியுள்ளது.[3][4]

தமிழகத்தின் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற 13வது சட்டமன்றத்தில் 18 உறுப்பினர்களை கொண்டு இருந்தது. 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து 30 தொகுதிகளில் போட்டியிட்டதில் 3 தொகுதிகளில் வெற்றிபெற்றது.

15வது மக்களவைக்கான தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த பாமக 7 தொகுதிகளில் போட்டியிட்டது.[5][6] ஆனால் போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வியடைந்தது.

பின்னர் 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி வைத்து 23 தொகுதிகளில் போட்டியிட்டு, 5 தொகுதிகளில் வெற்றிபெற்றது மற்றும் 3.80% சதவீத வாக்குகளை பெற்றது.[7]

சின்னம்

இக்கட்சி ஆரம்பத்தில் யானை சின்னத்தில் போட்டியிட்டு வந்தது. பகுசன் சமாச் கட்சிக்கு தேசிய அரசியல் கட்சி என்று 1997இல் தகுதி உயர்த்தப்பட்டதாலும் யானை சின்னத்தை அது நாடு முழுக்க பயன்படுத்தியதாலும் யானை சின்னம் அதற்கு ஒதுக்கப்பட்டது.[8] பாமக தமிழ்நாடு மாநில அரசியல் கட்சி என்ற தகுதியை இழந்ததால் அதன் யானை சின்னம் பறிக்கப்பட்டது. ஆனால் புதுச்சேரியில் தகுதி இழக்காததால், அங்கு யானை சின்னத்தை பயன்படுத்திக்கொள்ள தேர்தல் ஆணையம் இசைந்தது.

1998இல் இக்கட்சிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது.[9] அன்றிலிருந்து மாம்பழம் சின்னத்திலேயே போட்டியிட்டு வருகிறது. விதிகளின் படி மாநில அரசியல் கட்சி என்ற தகுதியை தேர்தல் ஆணையம் பறித்து விட்டாலும், 2016 சட்டமன்றத் தேர்தலில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட இக்கட்சிக்கு அனுமதி வழங்கியது.

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு

இக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் விடுத்த கோரிக்கையின் படி, அதிமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு, வன்னியர் சமூகத்தினருக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் உள் ஒதுக்கீடாக 10.5% வழங்கி சட்டம் இயற்றியும், அரசாணையும் வெளியிட்டது. தமிழ்நாடு அரசு, வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு செய்தது தவறு என்று கூறிய வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம், 10.5% இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. எனவே திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு, 10.5% உள் ஒதுக்கீடு வழங்க அரசாணை வெளியிட்டது.[10]

கட்சித் தலைவர்களின் பட்டியல்

கட்சித் தலைவர்கள்

வ. எண் படம் பெயர்
(பிறப்பு–இறப்பு)
பதவிக்காலம்
பதவி ஆரம்பம் பதவி முடிவு மொத்த நாட்கள்
1 பேராசிரியர் தீரன்
(தெரியவில்லை)
16 சூலை 1989 31 திசம்பர் 1997 8 ஆண்டுகள், 168 நாட்கள்
2 கோ. க. மணி
(1952–)
31 திசம்பர் 1997 28 மே 2022 24 ஆண்டுகள், 148 நாட்கள்
3 அன்புமணி ராமதாஸ்
(1968–)
28 மே 2022 தற்போது பதவியில் 4 ஆண்டுகள், 82 நாட்கள்

கட்சியின் கௌரவத் தலைவர்கள்

வ. எண் படம் பெயர்
(பிறப்பு–இறப்பு)
பதவிக்காலம்
பதவி ஆரம்பம் பதவி முடிவு மொத்த நாட்கள்
1 கோ. க. மணி
(1952–)
28 மே 2022 26 திசம்பர் 2025 3 ஆண்டுகள், 212 நாட்கள்

பொதுச் செயலாளர்

  1. தலித் எழில்மலை
  2. வடிவேல் இராவணன்

முக்கியத் தலைவர்கள்

தேசிய செயற்குழு
வ. எண் உறுப்பினர் பதவி
1. ச. இராமதாசு பாமக நிறுவனர்
2. அன்புமணி ராமதாஸ் பாமக மாநில தலைவர்
3. வடிவேல் இராவணன் பாமக மாநிலப் பொதுச்செயலாளர்
4. திலகபாமா பாமக மாநிலப் பொருளாளர்
5. கே. பாலு பாமக பேச்சாளர்
6. ஏ. கே. மூர்த்தி பாமக துணைப் பொதுச்செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மத்திய இரயில்வே துறை இணை அமைச்சர்
5. அர. வேலு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் இரயில்வே அமைச்சர்

தேர்தல் வரலாறு

தமிழ்நாடு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்
ஆண்டு தேர்தல் மொத்த வாக்குகள் வென்ற தொகுதிகள் மாற்றம் கூட்டணி முடிவு
1991 10ஆவது சட்டமன்றம் 1,45,982
1 / 194
Increase1 எதிரணி
1996 11ஆவது சட்டமன்றம் 10,42,333
4 / 116
Increase 3 பாமக+திவாரி எதிரணி
2001 12ஆவது சட்டமன்றம் 15,57,500
20 / 27
Increase 16 அதிமுக+ அரசு
2006 13ஆவது சட்டமன்றம் 18,63,749
18 / 31
2 திமுக + அரசு
2011 14ஆவது சட்டமன்றம் 19,27,783
3 / 30
15 திமுக + எதிரணி
2016 15ஆவது சட்டமன்றம் 23,00,775
0 / 234
3 தோல்வி
2021 16ஆவது சட்டமன்றம் 17,56,796
5 / 234
Increase 5 அதிமுக+ எதிரணி
2026 17ஆவது சட்டமன்றம்
4 / 234
1 அதிமுக+ மற்றவை
இதுவரை பாமக பெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை


மக்களவைத் தேர்தல்
வருடம் தேர்தல் மொத்த வாக்குகள் வென்ற தொகுதிகள் மாற்றம் கூட்டணி முடிவு
1996 11ஆவது மக்களவை 5,52,118
0 / 15
15 பாமக + திவாரி காங்கிரசு தோல்வி
1998 12ஆவது மக்களவை 15,48,976
4 / 5
Increase4 தேசகூ அரசு
1999 13ஆவது மக்களவை 22,36,821
5 / 7
Increase1 தேசகூ அரசு
2004 14ஆவது மக்களவை 19,27,367
5 / 5
மாற்றங்கள் இல்லை மமுகூ அரசு
2009 15ஆவது மக்களவை 19,44,619
0 / 6
5 ஐதேமுகூ தோல்வி
2014 16ஆவது மக்களவை 18,04,812
1 / 8
Increase1 தேசகூ அரசு
2019 17ஆவது மக்களவை 22,97,431[11]
0 / 7
1 தேசகூ அரசு
2024 18ஆவது மக்களவை 18,79,689
0 / 10
1 தேசகூ அரசு

மமுகூ - மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தேசகூ - தேசிய சனநாயகக் கூட்டணி ஐதேமுகூ - ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி - பாமக-திவாரி காங்கிரசு முன்னணி

இதுவரை பாமக வென்றுள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை

புதுச்சேரி

வருடம்பொதுத் தேர்தல்கிடைத்த வாக்குகள்வெற்றி பெற்ற தொகுதிகள்
19899வது மக்களவை25,0210
19918வது சட்டசபை11,4020
199110வது மக்களவை13,3750
19969வது சட்டசபை11,5441
199611வது மக்களவை19,7920
199913வது மக்களவை1,40,9200
200110வது சட்டசபை36,7880
200414வது மக்களவை2,41,6531
200611வது சட்டசபை23,4262
200915வது மக்களவை2,08,6190

மக்களவை உறுப்பினர்கள்

எண் வருடம் தேர்தல் உறுப்பினர் தொகுதி வகித்த பதவி
1 1998 12ஆவது மக்களவை தலித் எழில்மலை சிதம்பரம் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் (தனி பொறுப்பு), 1999
2 1998 12ஆவது மக்களவை துரை வந்தவாசி
3 1998 12ஆவது மக்களவை கே. பாரிமோகன் தருமபுரி
4 1998 12ஆவது மக்களவை என். டி. சண்முகம் வேலூர்
5 1999 13ஆவது மக்களவை துரை வந்தவாசி 2வது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்
6 1999 13ஆவது மக்களவை பு. தா. இளங்கோவன் தருமபுரி
7 1999 13ஆவது மக்களவை ஏ. கே. மூர்த்தி செங்கல்பட்டு இரயில்வே துறை அமைச்சர் (சூலை 2002- 15 சனவரி, 2004)
8 1999 13ஆவது மக்களவை இ. பொன்னுசாமி சிதம்பரம் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் (1999-2001)
9 1999 13ஆவது மக்களவை என். டி. சண்முகம் வேலூர் 2வது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்

இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு), சுகாதாரம் & குடும்ப நலத்துறை அமைச்சகம் (அக்டோபர் 1999 - மே 2000)

இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு), நிலக்கரி அமைச்சகம் (மே 2000 - பிப்ரவரி 2001)

இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு), உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் (சூலை 2002 - சனவரி 2004)

10 2004 14ஆவது மக்களவை கோ. தன்ராஜ் திண்டிவனம்
11 2004 14ஆவது மக்களவை ஏ. கே. மூர்த்தி செங்கல்பட்டு 2வது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்
12 2004 14ஆவது மக்களவை இ. பொன்னுசாமி சிதம்பரம் 2வது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்
13 2004 14ஆவது மக்களவை செந்தில் இராமன் தருமபுரி
14 2004 14ஆவது மக்களவை அர. வேலு அரக்கோணம் இரயில்வே துறை அமைச்சர் (2004) 29 மார்ச், 2009 அன்று இரயில்வே துறை அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்
15 2014 16ஆவது மக்களவை அன்புமணி ராமதாஸ் தருமபுரி

மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல்

வ. எண் படம் பெயர்
(பிறப்பு–இறப்பு)
பதவி பதவிக்காலம் தொகுதி
பதவி ஆரம்பம் பதவி முடிவு மொத்த நாட்கள்
1 அன்புமணி ராமதாஸ்
(1968–)
மாநிலங்களவை உறுப்பினர் 2004 2010 6 ஆண்டுகள் தமிழ்நாடு
(மாநிலங்களவை)
2019 2025 6 ஆண்டுகள்
2026 தற்போது பதவியில்

ஒன்றிய அமைச்சரவையில் பங்கு

இரண்டாம் வாச்பாய் அரசு (19 மார்ச்சு - 12 அக்டோபர் 1999)
அமைச்சர்அமைச்சர் பதவிபதவிக் காலம்
தலித் எழில்மலைசுகாதாரம் & குடும்ப நலம்20 மார்ச் 1998 - 14 ஆகசுட்டு 1999
மூன்றாவது வாச்பாய் அரசு (13 அக்டோபர் 1999 - 22 மே 2004)
அமைச்சர்அமைச்சர் பதவிபதவிக் காலம்
என். டி. சண்முகம்உணவு பதப்படுத்துதல்1 யூலை 2002 - 15 சனவரி 2004
என். டி. சண்முகம்சுகாதாரம் & குடும்ப நலம்13 அக்டோபர் 1999 - 27 மே 2000
என். டி. சண்முகம்சுற்றுச்சூழல் & காடு13 அக்டோபர் 1999 - 21 திசம்பர் 2003
ஏ. கே. மூர்த்திதொடருந்து (ரயில்)1 யூலை 2002 - 15 சனவரி 2004
எ. பொன்னுசாமிபெட்ரோலியம் & இயற்கை எரிவாயு13 அக்டோபர் 1999 - 7 பிப்ரவரி 2001
முதலாம் மன்மோகன் சிங் அமைச்சரவை (22 மே 2004 - 22 மே 2009)
அமைச்சர்அமைச்சர் பதவிபதவிக் காலம்
அன்புமணிசுகாதாரம் & குடும்ப நலம்23 மே 2004 - 29 மார்ச்சு 2009
அர. வேலுதொடருந்து (ரயில்)23 மே 2004 - 29 மார்ச்சு 2009

ஊடகம்

மக்கள் தொலைக்காட்சி ஆனது பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவில், செப்டம்பர் 6, 2006 இல் தொடங்கப்பட்டது. இன உணர்வும், சமுதாய உணர்வும் கொண்ட நிகழ்ச்சிகளைத் தமிழ் மக்களுக்கு வழங்குவதை இத்தொலைக்காட்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. வெறும் பொழுது போக்கு என்பதையும் தாண்டி "மண் பயனுற வேண்டும்" என்னும் நோக்கத்தை இத்தொலைக்காட்சி முன்வைத்துள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013" (PDF). India: Election Commission of India. 2013. Retrieved 9 May 2013.
  2. http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=PMK+swings+AIADMK+way&artid=HtcJD1dO7X4=&SectionID=vBlkz7JCFvA=&MainSectionID=fyV9T2jIa4A=&SectionName=EL7znOtxBM3qzgMyXZKtxw==&SEO=
  3. http://eci.nic.in/eci_main/ElectoralLaws/PoliticalParties.pdf
  4. "தமிழகத்தில் மதிமுக-புதுச்சேரியில் பாமக கட்சி அங்கீகாரம் ரத்து!". Archived from the original on 2 ஆகத்து 2010. Retrieved 10 March 2018.
  5. "பாமக போட்டியிடும் தொகுதிகள்-ஜெ அறிவிப்பு!". Retrieved 10 March 2018. [தொடர்பிழந்த இணைப்பு]
  6. "Parliament Elections 2009 - PMK Candidates, நாடாளுமன்றத் தேர்தல் 2009 - பாமக வேட்பாளர்கள் பயோடேட்டா". thatstamil.oneindia.in. Archived from the original on 9 திசம்பர் 2010. Retrieved 10 March 2018.
  7. "மு.க.ஸ்டாலின் முதல்வர் பதவியேற்பு எப்போது? எந்தக் கட்சிக்கு எவ்வளவு வாக்கு?".
  8. "BSP gets recognition as national party". ரி டிப். Retrieved 28 மார்ச் 2016.
  9. "PMK allotted 'mango' symbol for 2016 polls". த இந்து. Retrieved 28 மார்ச் 2016.
  10. 10.5% இட ஒதுக்கீடு: மருத்துவ, பொறியியல் கல்வியில் அமல்படுத்த தமிழக அரசு முடிவு?
  11. "Archived copy". Archived from the original on 26 May 2019. Retrieved 12 June 2019.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாட்டாளி_மக்கள்_கட்சி&oldid=4581007" இலிருந்து மீள்விக்கப்பட்டது