அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அ.இ.அ.தி.மு.க இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
தலைவர் ஜெ. ஜெயலலிதா
நிறுவனர் ம. கோ. இராமச்சந்திரன்
தொடக்கம் 17 அக்டோபர் 1972
தலைமையகம் 226, அவ்வை சன்முகம் சாலை, ராயப்பேட்டை, சென்னை - 600014
கொள்கை Social democracy,
Populism
அரசியல் நிலைப்பாடு Centre
இ.தே.ஆ நிலை மாநிலக்கட்சி[1]
கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணி (1998 & 2004–06)
மூன்றாவது அணி (2008-முதல்)
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
37 / 543
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
11 / 245
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., தமிழ்நாடு
134 / 234
தேர்தல் சின்னம்
AIADMK Two Leaves.png
இணையதளம்
aiadmk.com

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (சுருக்கமாக அதிமுக அல்லது அண்ணா திமுக) என்பது இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவின் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் முக்கிய அரசியல் கட்சியாக விளங்குகிறது.

இக்கட்சியின் மூலம் தேர்தலை சந்தித்தும், தற்காலிகமாகவும் எம்.ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்), இரா. நெடுஞ்செழியன், ஜானகி இராமச்சந்திரன், ஜெ. ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழகத்தின் முதல்வர்களாக ஆகியுள்ளார்கள்.

வரலாறு[தொகு]

காலஞ்சென்ற சி.என். அண்ணாதுரையின் மறைவுக்குப்பின் மு. கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் ஆனார். அக்காலத்தில் கட்சியின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர். கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். புதிய கட்சி தொடங்க விரும்பிய எம்.ஜி.ஆர் அப்போது அனகாபுத்தூர் இராமலிங்கம் என்பவர், ‘அதிமுக’ என்ற பெயரில் பதிவு செய்து வைத்திருந்த கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார். அப்போது, ‘ஒரு சாதாரணத் தொண்டன் தொடங்கிய கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்’ என அறிவித்ததுடன் இராமலிங்கத்துக்கு மேல்சபை உறுப்பினர் (எம்.எல்.சி.) பதவியும் அளித்தார். [2]. இக்கட்சி பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

எம்.ஜி.ஆர். காலம்[தொகு]

அ. தி. மு. க கட்சியின் நிறுவனரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர் பரப்புரை செய்யும் படம்

எம்.ஜி.ஆரால் 1972ல் தொடங்கப்பட்ட அ.தி.மு.க. தனது முதல் தேர்தலை 1973-ல் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலின்போது சந்தித்தது. இத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[3] அதைத் தொடர்ந்து 1977-ல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்), அனைத்திந்திய பார்வார்டு பிளாக், இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டுப் பெரும்பாலான இடங்களில் வெற்றி கண்டது.[4] நான்குமுனைப் போட்டியில் தி.மு.க. மொத்தமிருந்த 234 இடங்களில் வெறும் 48 இடங்களை மட்டுமே பெற்றது.

எம்.ஜி.ஆர்-ஐ தொடர்ந்து என்.டி. இராமராவ் ஆந்திராவில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பிரசாரத்திற்கே செல்லாமல் ஒரு தேர்தலில் எம்.ஜி.ஆர் வெற்றி பெற்றார்.

கொடியின் வரலாறு[தொகு]

எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிக்கப் போவதாக செய்தியை அறிந்த எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் தாமரை படமிட்ட கொடியை கட்சி கொடியாக தங்கள் வீடுகளிலும், குடிசைகளிலும் ஏற்றினார்கள். அதன் பிறகு எம்.ஜி.ஆர், அண்ணாவின் புகைப்படங்களை ஆய்வு செய்து அதில் சிறப்பாக இருந்த அண்ணாவின் படமொன்றினை தேர்வு செய்தார். அதில் அண்ணா ஆணையிடுவதைப் போல தோற்றமளிப்பார். இந்த படத்தினை அண்ணா தோற்றுவித்த தி.மு.கவின் சிகப்பு கருப்பு கொடியோடு இணைத்து அண்ணா தி.மு.கவின் தற்போதைய கொடியமைப்பினை எம்.ஜி.ஆர் உருவாக்கினார்.

பெயர் மாற்றம்[தொகு]

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று எம்.ஜி.ஆர் மாற்றினார். இதற்கு கட்சிக்குள் சிலர் ஏற்கவில்லை என்றாலும், பின் எம்.ஜி.ஆர் பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்தப் பின் எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள்.

எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகு எழுந்த சர்ச்சை[தொகு]

பொதுக்கூட்டம் ஒன்றில் கருணாநிதி, எம்ஜிஆருடன் ஜெயலலிதா

தமிழக முதல்வராக இருந்த எம். ஜி. இராமச்சந்திரன் திசம்பர் 24, 1987 அன்று மரணமடைந்தார். அவரது மறைவுக்குப் பின் யார் முதல்வராவது என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சர்ச்சை எழுந்தது. ஆர். எம். வீரப்பனின் ஆதரவுடன் எம்ஜியாரின் மனைவி ஜானகி இராமச்சந்திரன் முதல்வரானார். ஆனால் அதை கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான ஜெ. ஜெயலலிதா ஏற்கவில்லை. 132 சட்ட மன்ற உறுப்பினர்கள் கொண்ட அதிமுகவில் 33 பேர் ஜெயலலிதாவை ஆதரித்தனர், மற்றவர்கள் ஜானகியை ஆதரித்தனர். எட்டாவது சட்டமன்றத்தின் பேரவைத் தலைவர் பி. எச். பாண்டியனும் ஜானகியை ஆதரித்தார்.

புதிய அரசின் மீது சனவரி 26, 1988 இல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. திமுக, இந்திரா காங்கிரசு உள்ளிட்ட எதிர்கட்சிகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களுக்கும் ஜானகி ஆதரவு உறுப்பினர்களுக்கும் இடையே சட்டமன்றத்தில சச்சரவு ஏற்பட்டது. அவைத் தலைவர் ஜெயலலிதா தரப்பு உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றி, வெறும் 111 உறுப்பினர்களுடன் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார். ஜானகி இராமச்சந்திரன் அதில் வெற்றி பெற்றார். சனவரி 21, 1989 இல் 232 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 69.69 % வாக்குகள் பதிவாகின. மருங்காபுரி மற்றும் மதுரை கிழக்கு ஆகிய இரு தொகுதிகளுக்கு நிருவாக காரணங்களால் தேர்தல் நடைபெறவில்லை; இருமாதங்கள் கழித்து மார்ச்சு 11 ஆம் நாள் நடைபெற்றது. இதற்குள் அதிமுக கட்சி ஒண்றிணைந்து விட்டதால், மீண்டும் அதற்கு “இரட்டை இலை” சின்னம் ஒதுக்கப்பட்டது. ஜெயலலிதா தலைமையிலான அக்கட்சியே இரு தொகுதிகளிலும் வென்றது.[5]

அ.தி.மு.க வின் வெற்றி,தோல்விகள்.[தொகு]

எம்.ஜி.ஆர்க்கு பின் திராவிட கட்சிகளான அதிமுகவும், திமுகவும் மாறி மாறிதான் ஆட்சிசெய்துகொண்டு வருகின்றன.

15ஆவது மக்களவை[தொகு]

15ஆவது மக்களவைக்கு அதிமுக 23 தொகுதிகளில் போட்டியிட்டு பின்வரும் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது.[7]

 1. திருவள்ளூர் (தனி)
 2. தென்சென்னை
 3. விழுப்புரம் (தனி)
 4. சேலம்
 5. திருப்பூர்
 6. பொள்ளாச்சி
 7. கரூர்
 8. திருச்சி
 9. மயிலாடுதுறை

16ஆவது மக்களவை[தொகு]

16ஆவது மக்களவைக்கு அதிமுக 39 தொகுதிகளில் போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்று மக்களவையின் 3ஆவது பெரிய கட்சியாகியது. இது தமிழக தேர்தல் வரலாற்றிலேயே இதுவரை எந்த ஒரு கட்சியும் பெறாத ஒரு சாதனையாகும்[8].

தமிழ்நாடு வேட்பாளர்கள் பட்டியல், வெற்றிபெற்ற வாக்குகள்[தொகு]

மக்களவை[தொகு]

வரிசை எண் பெயர் தொடக்கம் முடிவு முறை கட்சி
1 எம். ஜி. இராமச்சந்திரன் 30 ஜூன், 1977 17 பிப்ரவரி, 1980 1 அ.தி.மு.க.
2 எம். ஜி. இராமச்சந்திரன் 9 ஜூன், 1980 15 நவம்பர், 1984 2 அ.தி.மு.க.
3 எம். ஜி. இராமச்சந்திரன் 10 பிப்ரவரி, 1985 24 டிசம்பர், 1987 3 அ.தி.மு.க.
4 இரா. நெடுஞ்செழியன் 24 டிசம்பர், 1987 7 ஜனவரி, 1988 1 அ.தி.மு.க.
5 ஜானகி இராமச்சந்திரன் 7 ஜனவரி, 1988 30 ஜனவரி, 1988 1 அ.தி.மு.க.
6 ஜெ. ஜெயலலிதா 24 ஜூன், 1991 12 மே, 1996 1 அ.இ.அ.தி.மு.க.
7 ஜெ. ஜெயலலிதா[6] 14 மே, 2001 21 செப்டம்பர், 2001 2 அ.இ.அ.தி.மு.க.
8 ஓ. பன்னீர்செல்வம் 21 செப்டம்பர், 2001 1 மார்ச்சு, 2002 1 அ.இ.அ.தி.மு.க.
9 ஜெ. ஜெயலலிதா 2 மார்ச்சு, 2002 12 மே, 2006 3[6] அ.இ.அ.தி.மு.க.
10 ஜெ. ஜெயலலிதா 16 மே, 2011 27 செப்டம்பர், 2014 4[6] அ.இ.அ.தி.மு.க.
11 ஓ. பன்னீர்செல்வம் 29 செப்டம்பர், 2014 22 மே, 2015 2 அ.இ.அ.தி.மு.க.
12 ஜெ. ஜெயலலிதா 23 மே, 2015 22 மே, 2016 5 அ.இ.அ.தி.மு.க.
13 ஜெ. ஜெயலலிதா 23 மே, 2016 - 6 அ.இ.அ.தி.மு.க.
வருடம் பொதுத்தேர்தல் கிடைத்த வாக்குகள் வெற்றிபெற்ற தொகுதிகள் வேட்பாளர் பட்டியல்
1977 6ஆவது மக்களவை 5,365,076 17
1980 7ஆவது மக்களவை 4,674,064 2
1984 8ஆவது மக்களவை 3,968,967 12
1989 9ஆவது மக்களவை 4,518,649 11
1991 10ஆவது மக்களவை 4,470,542 11
1996 11ஆவது மக்களவை 2,130,286 0
1998 12ஆவது மக்களவை 6,628,928 18
1999 13ஆவது மக்களவை 6,992,003 10
2004 14ஆவது மக்களவை 8,547,014 0
2009 15ஆவது மக்களவை 6,953,591 9
2014 16ஆவது மக்களவை 17,983,168 37

சட்டசபை[தொகு]

வருடம் பொதுத்தேர்தல் கிடைத்த வாக்குகள் வெற்றிபெற்ற தொகுதிகள் வேட்பாளர் பட்டியல்
1977 6வது சட்டசபை 5,194,876 131 [1]
1980 7வது சட்டசபை 7,303,010 129 [2]
1984 8வது சட்டசபை 8,030,809 134 pdf
1989 9வது சட்டசபை 148,630 2 pdf
1991 10வது சட்டசபை 10,940,966 164 pdf
1996 11வது சட்டசபை 5,831,383 4 pdf
2001 12வது சட்டசபை 8,815,387 132 pdf
2006 13வது சட்டசபை 10,768,559 61 pdf
2011 14வது சட்டசபை 1,41,49,681 151
2016 15வது சட்டசபை 1,76,17,060 134

புதுச்சேரி[தொகு]

வருடம் பொதுத்தேர்தல் கிடைத்த வாக்குகள் வெற்றிபெற்ற தொகுதிகள்
1974 3வது சட்டசபை 60,812 12
1977 4வது சட்டசபை 69,873 14
1977 6வது மக்களவை 115,302 1
1980 5வது சட்டசபை 45,623 0
1985 6வது சட்டசபை 47,521 6
1990 7வது சட்டசபை 76,337 1
1991 8வது சட்டசபை 67,792 6
1996 9வது சட்டசபை 57,678 3
1998 12வது மக்களவை 102,622 0
2001 10வது சட்டசபை 59,926 3
2006 11வது சட்டசபை 3
2011 12வது சட்டசபை 5
2016 13வது சட்டசபை 1,34,597 4

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013". India: Election Commission of India (2013). பார்த்த நாள் 9 May 2013.
 2. http://tamil.thehindu.com/india/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/article6561928.ece?homepage=true
 3. Duncan Forrester (1976). "Factions and Filmstars: Tamil Nadu Politics since 1971". Asian Survey 16 (3): 283–296. http://www.jstor.org/stable/2643545. 
 4. 1977 Tamil Nadu Election Results, Election Commission of India accessed April 19, 2009
 5. http://www.valaitamil.com/political-tamilnadu-election-history-1989th-tamil-nadu-assembly-election-articles103-166-6599-0.html
 6. 6.0 6.1 6.2 On செப்டம்பர் 21, 2001, a five-judge constitutional bench of the Supreme Court of India ruled in a unanimous verdict that "a person who is convicted for a criminal offence and sentenced to imprisonment for a period of not less than two years cannot be appointed the Chief Minister of a State under Article 164 (1) read with (4) and cannot continue to function as such". Thereby, the bench decided that "in the appointment of Ms. Jayalalithaa as Chief Minister there has been a clear infringement of a Constitutional provision and that a writ of quo warranto must issue". In effect her appointment as Chief Minister was declared null and invalid in retrospect. Therefore, technically, she was not the Chief Minister in the period between மே 14, 2001 and செப்டம்பர் 21, 2001 (The Hindu — SC unseats Jayalalithaa as CM, full text of the judgment from official Supreme Court site).
 7. http://thatstamil.oneindia.in/news/2009/04/09/tn-list-of-admk-candidates.html
 8. http:http://www.thehindu.com/news/national/tamil-nadu/emphatic-win-for-aiadmk-in-tn/article6017569.ece?ref=relatedNews Emphatic win for AIADMK in T.N.

வெளி இணைப்புகள்[தொகு]