திராவிடத் தேசியம்
தமிழர் |
---|
திராவிடத் தேசியம் (Dravidian nationalism or Dravidianism) என்பது தென் இந்தியாவில் உள்ள நான்கு முக்கிய இன-மொழி மக்களை உள்ளடக்கிய சென்னை மாகாணத்தில் வளர்ந்தது. இந்த கருத்தானது 1930 களில் இருந்து 1950 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தென்னிந்தியர்கள் (திராவிடர்கள்) வட இந்தியர்களிடமிருந்து வேறுபட்ட இன மற்றும் கலாச்சாரத்தைக் கொண்ட மக்கள் என்று கூறி வந்த சிறிய இயக்கங்கள் மற்றும் அமைப்புகளின் தொடர்ச்சியான பரப்புரைகளால் பிரபலமடைந்தது. இந்த இயக்கத்தினர் பிராமணர்கள் வடக்கிலிருந்து வந்தவர்கள் என்று கூறியது, அவர்கள் தென் இந்திய மக்களின் மீது தங்கள் மொழியான, சமஸ்கிருதத்தையும், சமயம் மற்றும் பாரம்பரியம் போன்றவற்றை திணிக்கின்றனர் என குற்றஞ்சாட்டினர்.
பெரியார் ஈ. வே. ராமசாமி தலைமையிலான துவக்கக் கால திராவிட இயக்கமானது தென்னிந்தியாவின் அனைத்து திராவிட மொழி பேசும் மாநிலங்களையும் உள்ளடக்கிய சுதந்திர திராவிட நாடு வேண்டும் என்று கோரியது.[1] இந்த இயக்கமானது மற்ற திராவிட மக்களிடையே ஆதரவை பெற இயலாமல் தோல்வியுற்றது ஆனால் தமிழர்களிடையே ஓரளவு ஆதரவை பெற்றிருந்தது. 1930 இல் இருந்து 1950 வரையிலான காலகட்டங்களில் தமிழ் பேச்சாளர்களிடையே திராவிடத் தேசியமானது புதிய சித்தாந்தமாக உருவானது. ஆனால் மொழிவழி மாநிலங்களின் பிரிவினைக்குப் பிறகு தமிழ்நாட்டில் தமிழ்த் தேசியமே திராவிட தேசியம் என்ற பெயரில் இயங்கியது.
தமிழ்த் தேசியம் மூன்று கருத்தியல்களை அடிப்படையாகக் கொண்டது: பிராமண மேலாதிக்கத்தை அகற்றுவது; "தனித்ததமிழுக்கு புத்துயிரூட்டுவது, சமூகச் சீர்திருத்தங்களாக, சாதி அமைப்பை ஒழித்தல், சமய நடைமுறைகள் மற்றும் சமுதாயத்தில் பெண்களுக்கு சம உரிமையை மீட்டு அளித்தல் போன்றவை ஆகும்.
1960 களின் பிற்பகுதியால், திராவிட சிந்தனைகளைக் கொண்ட அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டில் அதிகாரத்தை பெற்றன.[2] பின்னர் தேசியக் கருத்துக்களாக தமிழ்த் தலைவர்களின் மத்தியில், குறைந்தபட்சம், தமிழர்கள் சுயாட்சி கொண்டிருக்க வேண்டும் அல்லது அதிகபட்சம் இந்தியாவில் இருந்து பிரிவினை வேண்டும் என்பதாக இருந்தது [3]
திராவிடத் தேசியம் பல்வேறு கோட்பாடுகளை வளர்த்தது அதாவது கி.மு 16,000 இந்தியப் பெருங்கடலில் பரவி இருந்து மூழ்கிய குமரிக்கண்டம் குறித்த கருத்துகள், 10,000 ஆண்டுகளுக்கு முன்பு அசலான வேதத்தை எழுதியவர் மாமுனி மயனே என்னும் கருத்து, கி.மு. 50,000 இருந்த குமரிக் கண்ட நாகரீகம், கி.மு 6097 இல் பாண்டியனின்கீழ் செயல்பட்ட இரண்டாவது தமிழ்ச் சங்கம் போன்றவை.
அரசியல் கட்சிகள்
[தொகு]- கா. ந. அண்ணாதுரையின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் 1969 தேர்தலில் வெற்றி பெற்றது. தமிழ்த் தேசியவாதம் தமிழக அரசின் நிரந்தர அம்சமாக இருந்து வந்தது.
- அதே போல் பேரறிஞர் அண்ணா திமுக கட்சியில் முதலமைச்சர் ஆன பிறகு மத்திய கட்சிகளுடன் கூட்டாட்சி கொள்கை இல்லை என்ற அவர் முடிவில் அதற்கு பதிலாக மாநில சுயாட்சி கொள்கை முறையை அவர் இருக்கும் வரை கடைபிடித்த மாநில சுயாட்சி கொள்கை இருந்த வரை தமிழ் தேசியம் கொள்கையால் தமிழ் மக்கள் ஓரளவு சுயநிர்ணயத்தை அடைந்த பின்னர் பிரிவினைக்கான முழக்கங்கள் ஒரு சிலரைத் தவிர மிக முக்கிய அரசியல் கட்சிகளிடம் இல்லாமலே போய்விட்டது. ஒன்றுபட்ட இந்தியாவில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களுக்கு வேண்டிய திட்டங்களை செய்தே தங்கள் கடமை எனக் கூறியும் மாநில கட்டுபாட்டில் உள்ள அதிகாரங்களுக்கு உட்பட்ட செயல் திட்டங்களை நிறைவேற்றியும், மத்திய அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ள தேவையான அதிகாரங்களை போராடியோ அல்லது கேட்டு பெறுவதில் தான் அரசியல் மாண்புமிக்க செயல்களாக மாநில சுயாட்சி தத்துவத்தும் கூறும் உயிர் நாடி கொள்கைகளாகும்.
- பின்பு திமுகவில் பேரறிஞர் அண்ணா மறைவிற்குப் பிறகு முதலமைச்சர் பதவியில் இருந்த மு. கருணாநிதி அவர்கள் 1971 நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுக மற்றும் அதன் முன்னோடி கட்சியான திராவிடர் கழகம் கட்சியின் அடிப்படை கொள்கைக்கு எதிரான மத்திய காங்கிரஸ் கட்சியுடன் முதல் முதலாக கூட்டணி வைத்த போது தி.க தலைவர் பெரியார் அவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட போதிலும் அதை பொருட்படுத்தாமல் தேர்தல் கூட்டணியே தவிர கொள்கை கூட்டணி இல்லை என்ற மு. கருணாநிதி அவர்கள் கூற்றாக இருந்தாலும் மத்திய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் அதன் பிறகு வந்த ஜனதா கட்சி, மதச்சார்பற்ற ஜனதா கட்சி, ஜனதா தளம், சமாஜ்வாடி ஜனதா கட்சி, பாரதிய ஜனதா கட்சி போன்ற மத்திய கட்சிகளிடம் தனது உயிர் நாடி கொள்கைகளான திராவிடம், தமிழ் தேசியம், சமூகநீதி, சிறுபான்மையினத்துவம், சாதி, மதம், கடவுள் மறுப்பு கொள்கைகள்யாவும் மத்திய கட்சிகளின் கூட்டாட்சி தத்துவம் என்ற முறையில் மாநில சுயாட்சி தத்துவம் நசுக்கப்பட்டுவிட்டது. என்பதே இன்றைய காலத்தில் திராவிட கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகளின் நிலையாகும்.
கொள்கைகள் சிதைவுர காரணம்
[தொகு]- தமிழ்நாட்டின் பெரிய மாநிலக் கட்சிகளான திராவிட சித்தாந்த கொள்கையுடைய திமுக, அதிமுக, மதிமுக போன்ற மாநில கட்சிகள், மத்திய தேசிய கட்சிகளுடன் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு புது தில்லியில் அமைகின்ற மத்திய அரசில் அடிக்கடி பங்கேற்கின்றன. இந்த மாநில கட்சிகள் தமிழ் தேசியவாதத்தை நாடாளுமன்ற மக்களவையில் தமிழ் தேசியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துறைத்தபோதிலும் அதை புரிந்து கொள்ளவதிலும், செயல்படுத்துவதிலும் இந்திய தேசிய மத்திய கட்சிகள் தமிழ் தேசிய கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுக்காத இயலாமை செயல் காரணமாக நவீன தமிழ் நாட்டில் அவை செல்வாக்கு இல்லாமல் போனதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. நவீனகால தமிழ் தேசியவாதம், உண்மையில் தமிழ் அடையாளக் கொண்டாடுவது மற்றும் ஏழைகளின் 'உயர்வு' ஆகியவற்றைக் கொண்டுள்ளது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Indian Society and Social Institutions (2001), p. 541.
- ↑ Moorti 2004, ப. 549
- ↑ Kohli 2004, ப. 285–299
- ↑ Palanithurai 1989