தமிழர் பண்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழ் கலாச்சாரம், தமிழ் மக்களின் பண்பாடு ஆகும். தமிழ் கலாச்சாரம் கலை மற்றும் இந்தியா, இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர் மற்றும் உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்க்கை வழிகளில் வேரூன்றி உள்ளது. தமிழ் கலாச்சாரம் மொழி, இலக்கியம், இசை, நடனம், நாட்டுப்புற கலை, தற்காப்பு கலை, ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை, விளையாட்டு, ஊடகங்கள், நகைச்சுவை, உணவு, ஆடைகள், கொண்டாட்டங்கள், தத்துவம், மதங்கள், மரபுகள், சடங்குகள், நிறுவனங்கள், அறிவியல் வெளிப்படுத்தப்படுகிறது மற்றும் தொழில்நுட்பம். தமிழர் பண்பாடு தமிழ் மொழியின் ஊடாகவும், தமிழர் தாயகப் பிணைப்பின் ஊடாகவும், தமிழர் மரபுகள், வரலாறு, விழுமியங்கள், கலைகள் ஊடாகவும், சமூக, பொருளாதார, அரசியல் தளங்கள் ஊடாகவும் பேணப்படும் தனித்துவ பண்பாட்டுக் கூறுகளைக் குறிக்கும்.

தமிழர் பண்பாடு பல காலமாக பேணப்பட்டு, திருத்தப்பட்டு, மேம்படுத்தப்பட்ட அம்சங்களைக் குறித்து நின்றாலும், அது தொடர் மாற்றத்துக்கு உட்பட்டு நிற்கும் ஒரு இயங்கியல் பண்பாடே.

"தமிழர் பண்பாட்டின் அமைப்பொழுங்கானது அடிப்படையில் இரண்டு அம்சங்களைக் கொண்டதாகும். ஒன்று: அதனளவில் சார்புடையது (culture dependent). மற்றறொன்று, உலகளாவிய அமைப்பியல்புகளோடு பொருந்தக்கூடியது (culture independent). அதாவது, தமிழ்ப் பண்பாட்டின் உருவகத்தைத் தரக்கூடிய 'புறக் கூறுகள்' பண்பாட்டு சார்ந்தும், அவற்றின் 'அகக் கூறுகள்' உலகளாவிய அமைப்புகளோடு ஒத்திசைவு பெறுவதும் இதன் உட்பொருளாகும்." [1]

பாவாணர் கூறுவது போல , பண்பாடு என்பது திருந்திய ஒழுக்கம் , நாகரிகம் என்பது திருந்திய வாழ்க்கை . முன்னது 'அகக்கூறு ' பின்னது 'புறக்கூறு'. நாகரிகம் சேர்ந்த பண்பாடுண்டு , நாகரிகம் இல்லாத பண்பாடுமுண்டு . தமிழர் பண்பாடு இவிரண்டிலும் மெச்சத்தக்கது .

பல சந்தர்ப்பங்களில் தமிழர் பண்பாடு இது, தமிழர் பண்பாடு இதுவல்ல என்று தெளிவாக வரையறைப்பது கடினமாகினும் ஒரு அறிவுசார் மதிப்பீடு செய்யமுடியும். எடுத்துக்காட்டாக யூத சமயமோ, சீக்கிய சமயமோ தமிழர் பண்பாட்டு வட்டத்துக்குள் வரமாட்டா. மாறாக சைவ சமயத்துக்கு தமிழர் பண்பாட்டுடன் ஒரு இறுகிய தொடர்பு உண்டு.

மொழி, இலக்கியம்

தமிழ் மொழி உலகின் முதன் முதலில் தோற்றிய மொழி என்றும் உலக மொழிகள் பலவற்றுக்கு இது தாய் மொழி என்றும் பல்வேறு உலக மொழியியல் மற்றும் மெய்யியல் அறிவியல் ஆய்வாளர்கள் அதற்கான ஆதாரங்களோடு குறிப்பிடுகின்றனர்..

தமிழர்கள் தாங்கள் பரவிய இடங்களில் எல்லாம் தமிழின் எச்சங்களை வைத்துவிட்டே சென்றிருக்கிறார்கள். உடனடியான பண்பாட்டு தொடர்புக்கு ஊர்ப்பெயர்களே வரலாற்று சாட்சிகள்.

அது ஈழத்தில் உள்ள திருநெல்வேலி போன்ற எண்ணற்ற ஊர்ப்பெயர்களாக இருக்கலாம், தென் கிழக்காசிய மலையகம், பொருணை, மதுரா போன்ற இடங்களாக இருக்கலாம், ஈராக்கின் தீரநதி (Tigris), எகிப்தின் நீல நதியாக (Nile) இருக்கலாம். இந்த உலகளாவிய தமிழ் ஊர்கள் பற்றி மட்டும் சொல்ல வேண்டுமென்றால் அதற்கென தனி பதிவே போடவேண்டி வரும்.

மேலும் பார்க்க:[தொகு]

தமிழ்ப் பண்பாட்டின் கூறுகள்

மேற்கோள்கள்[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழர்_பண்பாடு&oldid=2139463" இருந்து மீள்விக்கப்பட்டது