உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கைத் தமிழ்த் தேசியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கைத் தமிழ்த் தேசியம் (Sri Lankan Tamil nationalism) என்பது இலங்கையில் வாழும் சிறுபான்மை தேசிய இனமக்களான இலங்கைத் தமிழர்கள் தங்களது உரிமை மற்றும் அரசியல் விடுதலைக்காக தனி நாடு அல்லது தன்னாட்சி கோரும் கருத்தியல் ஆகும். 19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் இலங்கைத் தமிழ் தேசிய விழிப்புணர்வு தொடங்கியது. தமிழ்ச் சைவ மறுமலர்ச்சியாளர்கள் சீர்திருத்தத் திருச்சபையின் நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கு முயன்றனர். ஆறுமுக நாவலரின் தலைமையில் ஏற்பட்ட சைவசமய மறுமலர்ச்சியின்போது, சைவசமயத்தையும் அதன் கொள்கைகளைப் பரப்புவதற்கும் கல்வியறிவானது ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டது.[1]

1921 ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசாங்கத்தால் மாற்றியமைக்கப்பட்ட புதிய சட்டமன்றம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இனவாரியான பிரதிநிதித்துவத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. இது தமிழர்களை சிறுபான்மை இனக்குழுக்கள் என்பதை உணர்ந்து கொள்ளவும், இந்த இனப் பிரதிநிதித்துவத்தினால் தமிழ்த் தேசிய உணர்வானது நீறுபூத்த நெருப்பாக இருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழர்கள் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் என்ற தமிழ் அரசியல் கட்சியைத் துவக்கினர். இலங்கைக்கு சுதந்திரம் வழங்கக்கூடிய காலகட்டம் நெருங்கிய ஆண்டுகளில், பெரும்பான்மை சிங்களவர் மற்றும் சிறுபான்மை தமிழ் சமூகங்களுக்கிடையில் அரசியல் பதற்றம் உருவாக்கியது. வரும் காலத்தில் அரசியல்ரீதியாக பெரும்பான்மை சிங்களவர்களின் ஆதிக்கம் ஏற்படும் என்பதைக் கருத்தில்கொண்டு அவ்வாறு ஏற்படாமல் தடுக்க நாடாளுமன்றத்தில் "ஐம்பதுக்கு-ஐம்பது" என்ற விகிதத்தில் பிரதிநிதித்துவத்தை வழங்கவேண்டும் என தமிழக் காங்கிரஸ் கோரியது. இந்த கொள்கையால் நாடாளுமன்றத்தில் சிங்கள பெரும்பான்மையினருக்கு பாதி இடங்களும் மீதி பாதி இடங்கள் சிறுபான்மை சமூகங்களான இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர், சோனகர் மற்றும் பிறருக்கு ஒதுக்கப்பட்ட கேட்கப்பட்டது, ஆனால் இக்கோரிக்கை ஏற்கப்படவில்லை.

1948 இல் இலங்கை விடுதலை அடைந்த பின்னர், தமிழ்க் காங்கிரசுக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் (ஐதேக) இணைவந்து ஆட்சியமைக்க முடிவு செய்தது. இதற்கு காங்கிரசின் உறுப்பினர்களில் பாதிபேர் ஆதரவளிக்கவில்லை, இதன் விளைவாக கட்சியில் பிளவு ஏற்பட்டது. ஐதேகவுடன் ஒன்றிணைக்க எடுத்த முடிவால் அதிருப்தியாளர்கள் கட்சியில் இருந்து வெளியேறி புதியதாக தமிழர்களுக்கான கட்சியாக சமஷ்டிக் கட்சியை 1949 இல் துவக்கினர். தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த அரசுகள் சிங்களர்களுக்கான அரசாங்கங்களாக இருந்தன, மேலும் 1956 இல் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா தலைமையில் ஆட்சிக்கு வந்த சிங்கள தேசியவாத அரசாங்கத்தின் வெற்றியால், சமஸ்டி கட்சியே தமிழர் அரசியலில் முதன்மைக் குரலாக மாறியது.[2] தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணியில் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் இணைத்தது, இரண்டு சமூகங்களுக்கும் இடையிலான இன, அரசியல் பதட்டங்களை அதிகரித்தது. இதன் பின்னர் தமிழ்த் தேசிய போராளி இயக்கங்கள் உருவாயின.[3]

விடுதலைக்கு முன்பு

[தொகு]

துவக்கக் காலம்

[தொகு]
2001 அல்லது 1981 கணக்கெடுப்பு அடிப்படையில் மாவட்டங்களில் இலங்கைத் தமிழர்களின் விழுக்காடு

1814 இல் தொடங்கி இலங்கைக்கு பெரிய அளவில் சீர்திருத்தத் திருச்சபை சமய பரப்புநர்களின் வருகை, தமிழ் மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றியது.[4] அமெரிக்க சமயபரப்புக் குழுக்கள், மெத்தடிஸ்டுகள், ஆங்கிலிக்கம் தேவாலயங்கள் ஆகிய வெளிநாட்டு சமயபரப்புக் குழுக்களின் நடவடிக்கைகள் தமிழர்களின் மத்தியில் இந்து மதம் புத்துயிர் பெற வழிவகுத்தன. பிரித்தானிய காலனித்துவம் மற்றும் சமயபரப்புநர்களின் நடவடிக்கைகளை தங்கள் கலாச்சாரத்திற்கு ஏற்பட்ட அச்சுறுத்தலாக கருதி அதிலிருந்து தங்ளை தற்காத்துக் கொள்ள ஆறுமுக நவாலாரின் தலைமையில் இந்து சமய மறுமலர்ச்சி மற்றும் சீர்திருத்த இயக்கம் முன்னெடுக்கப்பட்டது.[4] தமிழ் மொழிப் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், சைவக் கோட்பாடுகளைப் பரப்பவும் இலக்கிய படைப்புகளை அவர் மொழிபெயர்த்தார். இலங்கைத் தமிழ் மக்களின் முதன்மை சமயமான இந்து சமயத்துக்கு புத்துயிரூட்டுவதற்காக நாவலர் செய்த முயற்சிகளால், தமிழர்கள் தங்களுக்கு என சொந்தமாகக் கல்விக்கூடங்கள், கோயில்கள் போன்றவற்றைக் கட்டியெழுப்பினர். மேலும் மிஷனரிகளை எதிர்த்தும் தாக்கியும் இலக்கியங்களை வெளியிட்டனர். 1925 வாக்கில், பட்டிக்கோட்டா குருமடம் உள்ளிட்ட கிட்டத்தட்ட 50 பள்ளிகள் முழுமையாகச் செயல்பட்டன.[5] இந்த மறுமலர்ச்சி இயக்கம் நவீனத் தமிழ் உரைநடையை வளர்த்தது.[6]

இந்த முயற்சிகளின் வெற்றியானது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடையில் தமிழர்கள் தங்களை ஒரு தனிச் சமூகமாக நம்புவதற்கும் தங்களுக்கிடையே பொதுவாக உள்ள கலாச்சார, சமய, மொழியியல் உறவு பற்றிய விழிப்புணர்வு பெறுவதற்கான பாதையை உருவாக்கியது.[4][7] தமிழ் மக்களுக்கு இத்தகைய பங்களிப்புகளை வழங்கிய, ஆறுமுக நவாலரை ஈழத் தமிழர்களுக்கு தனித்துவமான ஒரு அடையாளத்தை வழங்கிய தலைவர் என்று போற்றப்படுகிறார்.[8]

இன உணர்வு

[தொகு]

1815 ஆம் ஆண்டு பிரிட்டன் முழு தீவையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, நாட்டின் நிர்வாகத்தை ஐக்கியப்படுத்தியது. 1833 ஆம் ஆண்டில் ஆளுநருக்கு ஆலோசனையாக செயல்பட்ட ஒரு சட்டமன்றக் குழு அமைக்கப்பட்டது. குழுவில் மூன்று ஐரோபியரும். சிங்களவர், இலங்கைத் தமிழர், பரங்கியரில் தலா ஒருவர் என பிரதிநிதிகள் இருந்தனர்.[9] ஆனால் இந்த நிலைமையானது 1919 இல் பிரித்தானிய ஆளுநராக வில்லியம் மன்னிங்கின் வந்தபிறகு மாற்றப்பட்டது, அவர் "இனப் பிரதிநிதித்துவம்" என்ற கருத்தைத் தீவிரமாக ஊக்குவித்தார். அவர் 1921 ஆம் ஆண்டில் மாற்றியமைக்கப்பட்ட சட்டமன்றக் குழுவொன்றை உருவாக்கினார். அதில் நடந்த முதல் தேர்தல் வாயிலாக 13 சிங்களர் மற்றும் மூன்று தமிழர்கள் என பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். இது நேரடியாக நியமிக்கப்பட்ட முந்தைய காலத்து அவையுடன் ஒப்பிடும்போது தமிழர்களுக்கான பிரதிநிதித்துவத்தில் பேரிழப்பாகும்.[10][11] இதன் காரணமாக, தமிழர்கள் தங்களை ஒரு சிறுபான்மை சமூகமாக உணர்ந்து, அதன் வெளிப்பாடாக இன உணர்வு தலைத் தூக்கியது. அவர்கள் தேசியப் பிரதிநிதித்துவத்தை விட அவையில் இனவழி பிரதிநிதித்துவத்தின் மீது கவனம் செலுத்தினர். தங்கள் பிரதிநிதிகளாக வருபவர்கள் தங்கள் சொந்த சமூகத் தலைவர்களாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். புதியதாக உருவான இந்த சமூக அடையாள உணர்வானது தமிழ் தேசியத் திசையில் வந்து சேர்ந்தது. 1920 களின் நடுப்பகுதியில் தொடங்கி, வளர்ந்த தமிழ்த் தேசிய உணர்வு, இலங்கைத் தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பது என்ற ஒரு உயர்ந்த கொள்கையுடன், இன்னும் தீவிரமான தேசிய உணர்வாக உருமாறியது. இது இலங்கை அரசியல் வரலாற்றில் பெரிதும் செல்வாக்கு செலுத்தியது. இந்த தமிழ் தேசிய உணர்வு தமிழ் அரசியல்வாதி ஜி ஜி.பொன் பொன்னம்பலம் தலைமையில் அனைத்து இலங்கை தமிழ் காங்கிரசை நிறுவ வழிவகுத்தது.[12]

வளர்ச்சி

[தொகு]

1931 இல் வரலாற்று மாற்றங்கள் நிகழ்ந்தன: சீர்திருத்த சட்டமன்ற சபை அகற்றப்பட்டது. டோனோமோர் ஆணையம் இனப் பிரதிநிதித்துவத்தை நிராகரித்தத்து. அதற்கு பதிலாக, ஆணயம் பொது வாக்குரிமையை அறிமுகப்படுத்தியது, இதில் பிரதிநிதித்துவமானது மக்கள் தொகையின் விகிதாசாரத்தில் அமைந்தது. இந்த புதிய திட்டத்தால் புதிய நாடாளுமன்றத்தில் சிறுபான்மையினருக்கான பிரதிநிதித்துவம் குறைந்துவிடும் என்பதை உணர்ந்த தமிழ்த் தலைவர்கள் கடுமையாக எதிர்த்தனர். அனைத்து பிரிவினருக்குமான இந்த பொது வாக்குரிமை முறையை பல சிங்களத் தலைவர்களும் எதிர்த்தனர்.[சான்று தேவை] டோனோமோர்ம் ஆணையத்தை ஜி.ஜி. பொன்னம்பலம் கடுமையாக எதிர்த்தார். டோனோமூர் ஆணையத்தில் இருந்த குறைபாடுகளை மாற்ற சோல்பரி ஆணயத்தில் பரிந்துரைத்தார். புதிய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் சமமான எண்ணிக்கையில் நாடாளுமன்ற இடங்களை ஒதுக்கீடு செய்யக் கோரினார். ஆனால் அவரது பரிந்துரை நிராகரிக்கப்பட்டது. இந்த அதிகார பகிர்வு பிரச்சினை இரு இனங்களின் தேசியவாதிகளாலும் இனங்களுக்கு இடையிலான இனரீதியான போட்டிகளை உருவாக்க பயன்படுத்தப்பட்டது.

சாலமன் பண்டாரநாயக்க தலைமையிலான சிங்கள மகா சபையின் சிங்கள தேசியவாதிகளுக்கும் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியவாதிகளுக்கும் இடையில் வாதப் பிரதிவாதங்கள் நடந்தன. பொன்னம்பலம் தன்னை ஒரு "பெருமைமிகு திராவிடன்" என்று அழைத்துக்கொண்டார்.[13] இந்த சிக்கல்களும் அரசியல் அழுத்தமும் 1939 இல் முதல் சிங்களர்-தமிழர் கலவரத்திற்கு வழிவகுத்தது.[14](காண்க இலங்கை இனக்கலவரங்கள்)

விடுதலைக்குப் பிறகு

[தொகு]

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்

[தொகு]
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கொடி

1944 இல் ஜி. ஜி. பொம்பம்பலம் நிறுவிய அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், தமிழ் அடையாளத்தைக் காப்பதை ஊக்குவித்தது. இது தமிழ் மக்களிடையே பிரபலமாக இருந்தது. பாராளுமன்றத்தில் ஐம்பது சதவீத இடங்களை தமிழர்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கும் மீதமுள்ள ஐம்பது சதவீத இடங்கள் சிங்களவர்களுக்கு என ஒதுக்கீடு செய்யக்கோரி "ஐம்பதுக்கு-ஐம்பது" என்ற கொள்கையை அஇதகா பரிந்துரைத்தது. இதன் பொருள் 50% வாய்ப்புகள் [கல்வி (பல்கலைக்கழக இடங்கள்), வேலைவாய்ப்பு, முதலியன) சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பதாகும். சிங்களர்களின் ஆதிக்கத்தைத் தடுக்கும் ஒரு தற்காப்பு நடவடிக்கையாக அஇதகா இக்கோரிக்கையை வைத்தது. 1947 ஆம் ஆண்டில் பொன்னம்பலம் சோல்பரி ஆணையத்தில் தீர்வை வழங்கினார். இதை அவர் "சீரான பிரதிநிதித்துவம்" என்று குறிப்பிட்டார். இந்த ஐம்பதுக்கு-ஐம்பது கொள்கையை முஸ்லீம் சிறுபான்மையினாலும், தமிழ் சமூகத்தினரில் ஒரு பகுதியினராலும் எதிர்க்கப்பட்டது. சிங்கள அரசியல் குழுக்களின் தலைவரான டி. எஸ். சேனநாயக்க, சோல்பரி ஆணைக்குழுவிற்கு முன்னர் பொன்னம்பலத்தின் விளக்கங்களையும் யோசனைகளையும் எதிர் விளக்கங்கள் அளித்து முழுமையாக கட்டுப்படுத்தினார். இதன் மூலம் சாலமன் பண்டாரநாயக்க போன்ற சிங்கள தேசியவாதிகளின் மேடை விமர்சனங்களைத் தடுத்துக்கொண்டார். இறுதியில் சோல்பெரி ஆணைக்குழு தமிழர்களுக்கு எதிரான பாகுபாடு குற்றச்சாட்டுகளை நிராகரித்தது, மேலும் ஐம்பதுக்கு-ஐம்பது சூத்திரமானது ஜனநாயகத்தை சீர்கெடுக்கும் எனக் கூறி நிராகரித்தது.[15]

பின்னர் அஇதகா "முற்போக்கான சிந்தனை கொண்ட சிங்களவர்களுடன் ஒத்துழைப்பு" என்ற ஒரு புதிய கொள்கையை கடைப்பிடிக்க முடிவு செய்தது. ஐதேக முற்போக்கான சிந்தனை கொண்டது அல்ல என்று முன்னர் பொன்னம்பலம் குறிப்பிட்டிருந்த நிலையில், 1948 ஆம் ஆண்டு, ஆளும்ஐக்கிய தேசியக் கட்சியுடன் அஇதகாஐ ஒன்றிணைக்க முடிவு செய்தார். இந்த முடிவை கட்சியினரின் எதிர்ப்பை சம்பாதித்தது. இதனால் கட்சி இரண்டாக உடைந்தது. உடைந்த ஒரு பிரிவினர் பொன்னம்பலத்துடன் டி.எஸ். சேனநாயக்கவின் ஐதேகயுடன் இணைந்த்து. இன்னொரு பிரிவினர் சா. ஜே. வே. செல்வநாயகம் தலைமையில் கட்சியைவிட்டு விலகி, சம உரிமைக்கு போராடவும், எந்தவொரு இனப் பிரச்சனையுமின்றி தமிழர்களுக்கு 100% வாய்ப்புகளைப் பெறவும் தீர்மானித்தனர். 1948 ஆம் ஆண்டில், பொன்னம்பலம் பல மசோதாக்களை ஆதரவாக இருந்தார் அவற்றில் ஒன்று பின்னர் இலங்கைக் குடியுரிமைச் சட்டம் என அழைக்கப்பட்டது, இது இந்திய தமிழர்களை ("மலையகத் தமிழர்கள்") குடியுரிமை அற்றவர்களாக்கியது. அவர் இலங்கை குடியுரிமைச் சட்டத்தின் மசோதாக்களுக்கு வாக்களிக்கவில்லை என்றாலும், நாடாளுமன்றத்தில் அவரது மெளனத்தின் காரணமாக இந்தியத் தமிழர்களின் உரிமையைக் காக்கவில்லை என தமிழ் மக்கள் நம்பினர். 1956 ஆம் ஆண்டு வரை அஇதகா பெரிய தமிழ்க் கட்சியாக இருந்தது, பின்னர் அந்த இடத்துக்கு சமஸ்டி கட்சி வந்தது.[16] இருந்தும் தமிழ் காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் இடங்களைக் கொண்டிருந்ததுடன், தமிழ் அரசியலில் ஒரு சக்தியாக தொடர்ந்து செயல்பட்டது. 1976 ஆம் ஆண்டில் அஇதகா தமிழர் விடுதலைக் கூட்டணி (TULF) என்னும் ஒரு புதிய கூட்டணியை அமைப்பதற்கு ஏதுவாக மற்ற தமிழ் அரசியல் பிரிவுகளுடன் ஒன்றிணைந்தது. ஏ.ஜே. வில்சனின் கூற்றுப்படி, பொன்னம்பலத்தின் பணிகள் தமிழ் மக்களிடையே எழுச்சியை உருவாக்கியது. அவர்கள் தங்களை ஒரு தனி தமிழ் தேசிய அடையாளமாகக் கருதியதால், தீவு அரசியலில் முழுமையாக இணைந்தனர்.:80–81

சமஷ்டிக் கட்சி

[தொகு]

அஇதகா கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களால் 1949 ஆம் ஆண்டு, சமஷ்டிக் கட்சி ("இலங்கைத் தமிழரசுக் கட்சி") துவக்கப்பட்டது. தமிழ் மக்களின் உரிமையை ஆதரித்து செல்வநாயகத்தால் வழிநடத்தப்பட்ட இந்த புதிய கட்சி தமிழ் மக்கள் மத்தியில் புகழ் பெற்றது. இலங்கைக் குடியுரிமைச் சட்டம் மற்றும் சிங்களம் மட்டும் சட்டம் [17][18] ஆகியவற்றைக் கட்சி கடுமையாக எதிர்த்ததின் காரணமாகவும் இது பிரபலமடைந்தது. இதன் விளைவாக, 1956 தேர்தல்களுக்குப் பிறகு, தமிழ் மாவட்டங்களில் சமஷ்டி கட்சியே ஆதிக்கம் செலுத்தியது. அக்காலத்தில் சமஷ்டிக் கட்சி தனித் தமிழ் மாநிலத்தையோ அல்லது சுயநிர்ணய உரிமையையோ கூட கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பதிலாக அவர்கள் ஆட்சி மொழியாக தமிழ் மற்றும் சிங்கள மொழிகளுக்கு சமமான அந்தஸ்து வேண்டியும், தமிழ்ப் பிரதேசங்களுக்கு இயன்ற அளவு உரிமைகளை வழங்கும் ஒன்றுபட்ட நாட்டுக்கு ஆதரவாகவே இருந்தனர்.:82–90 இந்தப் பின்னணியில் 1957 சூலையில் பண்டாரநாயக்க-செல்வநாயகம் உடன்படிக்கை கைச்சாத்திட்டது, ஆனால் இதற்கு சிங்களத் தலைவர்களிடம் எழுந்த எதிர்ப்பு மற்றும் தீவிரவாத குழுக்களிடமிருந்து வந்த அழுத்தங்களால் பண்டாரநாயக்க ஒப்பந்தத்தை ஒழிக்கும் கட்டாயத்துக்கு உட்பட்டார். பண்டாரநாயக்க படுகொலை செய்யப்பட்ட பின்னர், 1965 ஆம் ஆண்டில் செல்வநாயகம் மற்றும் டட்லி செனநாயக்க ஆகியோருக்கு இடையில் டட்லி-செல்வநாயகம் ஒப்பந்தம் என்ற மற்றொரு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் பண்டாரநாயக்க - செல்வநாயகம் உடன்படிக்கை போன்றே இந்த ஒப்பந்தமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.:81–110 1970 தேர்தலில் யூ.என்.பி. தோற்கடிக்கப்பட்டப் பிறகு அதற்குப் பதிலாக சாலமன் பண்டாரநாயக்கவின் விதவை மனைவியான சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான ஐக்கிய முன்னணி (யு.எஃப்) ஆட்சிக்கு வந்தது.

புதிய அரசாங்கமானது தமிழ் மக்களுக்கு எதிரான பாரபட்சம் காட்டக்கூடிய இரண்டு புதிய கொள்கைகளை ஏற்றுக்கொண்டது. முதலாவது, தரப்படுத்துதல் கொள்கை என்ற இரட்டை அளவுகோள் கொள்கை அதாவது பல்கலைக் கழகங்களில் சேரவேண்டுமானால், சிங்கள மாணவர்களை விட தமிழ் மாணவர்கள் கூடுதலான மதிப்பெண் எடுக்கவேண்டி இருந்தது.[19] இரண்டாவதாக, அரசு மற்றும் பொதுத் துறை வேலைவாய்ப்புகளில் தமிழ் பேசும் மக்களுக்கு பத்து விழுக்காடுக்கும் குறைவான வேலைவாய்ப்புகள் அளிக்கவேண்டும் என்ற கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது.:102–103[20] இந்தக் கொள்கைகளை சமஷ்டி கட்சி கடுமையாக எதிர்த்தது. அதன் விளைவாக செல்வநாயகம் அக்டோபர் 1972 இல் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு விரைவில், 1973 இக்குப் பிறகு, சமஷ்டி கட்சி தங்களுக்கென்று ஒரு தனித் தமிழ் ஈழ நாட்டைக் கோரியது. 1973 வரை, செல்வநாயகம் மற்றும் சமஷ்டி கட்சியானது ஒன்றுபட்ட நாட்டிற்காக பிரச்சாரம் செய்தன, எந்தவிதப் பிரிவினையும் "தற்கொலை முயற்சி" என்று கருதினர். இருப்பினும், அரசின் புதிய கொள்கைகள் தமிழ் தலைமையால் பாரபட்சமானதாக் கருதப்பட்டது,[21] இது கட்சியின் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக மாற்றியது. 1975 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட புதிய அரசியல் முடிவுகளைத் தொடர்ந்து, தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற பெயரில் பிற தமிழ் அரசியல் கட்சிகளுடன் கூட்டணியில் இணையில் இணைந்தது.:82–111 1976 ல், தவிகூயின் முதல் மாநாட்டில், இலங்கைத் தமிழர்கள் இறுதியான தேசிய விடுதலைக் கொள்கையை நோக்கி நகர்ந்து, இனி ஒரே நாட்டில் வாழ இயலாது என்ற நிலைக்கு வந்தனர்.:101–110

தமிழர் விடுதலைக் கூட்டணி

[தொகு]

தமிழ் அரசியல் கட்சிகளின் தமிழர் விடுதலைக் கூட்டணியானது வட்டுக்கோட்டையில் நடத்திய அதன் மாநாட்டில், மாநாடு நடந்த்த கிராமமான வட்டுக்கோட்டையை அடைமொழியுடன் பின்னர் பரவலாக அறியப்பட்ட "வட்டுக்கோட்டைத் தீர்மானம்" என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. 1977 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், சுதந்திரத் தமிழீழக் கொள்கைக்கு மக்கள் ஆணை கோரிப் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி18 இடங்களைப் பெற்று பெரும் வெற்றி பெற்று, இலங்கைப் பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க் கட்சியாக அமரும் வாய்ப்பைப் பெற்றது.[22] வட்டுக்கோட்டைத் தீர்மானம் தமிழ் அரசியலில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது- பாராளுமன்றத்தில் போராடும் முறையானது விரைவில் துப்பாக்கிகளால் போராடும் முறையாக மாறியது. தவிகூயின் அரசியல் பிரிவானது இலங்கையின் அப்போதைய சனாதிபதியுடனான ஜே. ஆர். ஜெயவர்தனேயுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண முயன்றது. மாவட்ட அபிவிருத்தி சபை திட்டம் என அழைக்கப்படும் இந்த உடன்படிக்கை 1980 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணி கூடுதலாக வாக்குகளைப் பெற்ற ஐந்து தமிழ் மாவட்டங்களில் இருந்து ஐந்து மாவட்ட அமைச்சர் பொறுப்புகளை அளிக்க ஜே. ஆர். ஜெயவர்தனே உறுதி அளிக்காததால் தவிகூ இதை நிராகரித்தது.[23] 1983 ஆம் ஆண்டில் ஆறாவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது, அதன்படி நாடாளுமன்றம் மற்றும் பிற அரசு அலுவலகங்கள் போன்றவற்றில் தமிழர்கள் ஒன்றுபட்ட இலங்கைக்கு விசுவாசமாக இருப்பதாக உறுதிமொழி எடுக்க வேண்டும் எனப்பட்டது. தனி ஈழத்தை வேண்டிய, தவிகூ உறுப்பினர்கள் இந்த உறுதிமொழியை பதவி ஏற்க மறுத்ததற்காக நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

போராளிக் குழுக்கள்

[தொகு]
2004 ஆம் ஆண்டில் கிளிநொச்சியில் பெண் புலிப் போராளிகள்

பாராளுமன்றத்தில் இருந்து தவிகூ வெளியேற்றப்பட்ட பின்னர், தமிழ் அரசியல் இயக்கமானது போராளிக் குழுக்களின் கைகளுக்குச் சென்றது. இதன் விளைவாக, 1970 களில் 30 க்கும் மேற்பட்ட தமிழ் போராளிக் குழுக்கள் தோன்றின. தமிழீழ விடுதலைப் புலிகளின் சித்தாந்த வழிகாட்டியான அன்ரன் பாலசிங்கம், தமிழ் இளைஞர்கள் போராளிகளாக ஆனதற்குக் காரணங்களாக வேலையின்மை, உயர்கல்விக்கான வாய்ப்புகள் இல்லாமை, அந்நிய மொழித் திணிப்பு ஆகியவை என்று கூறுகிறார். மேலும் அவர் இந்த பிரச்சினைகளுக்கு பேரினவாத சிங்கள அரசாங்கமே பொறுப்பு என்று அவர் குற்றம்சாட்டினார். தமிழ் இளைஞர்களுக்கு இருந்த ஒரே வழி "தேச விடுதலைக்கான புரட்சிகர ஆயுதப் போராட்டமே" என்றானது என்று குறிப்பிட்டார்.:124[24] பல போராளிக் குழுக்கள் தோன்றினாலும் அதில் ஐந்து போராளி குழுக்கள் மட்டுமே வலுவான அரசியல் சக்கியாக இருந்தன அவை— , தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எஃப்), ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (ஈரோஸ்) — இதை விடுத்து வேறு குழுக்கள் தத்துவார்த்த ரீதியாக குறைபட்டுள்ளதால், அவற்றைத் தமிழ் தேசியப் பிரிவுகள் அல்ல.

இந்த ஐந்து முதன்மைக் குழுக்களில், விடுதலைப் புலிகள் அமைப்பு தேசியக் கொள்கையில் மிக உறுதியான அமைப்பு ஆகும். ஏனென்றால், அதன் கொள்கைகள், ஆக்கபூர்வமான தமிழ்த் தேசிய அடித்தளம், தேசிய சுயநிர்ணயத்தின் மீதுள்ள பற்று போன்றவற்றின் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தமிழ் சமூகத்தின் முக்கிய பிரிவினர்களால் ஆதரிக்கப்பட்டது.[25] இது தமிழ் ஈழம் என்று அழைக்கப்படும் தன் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் தனியாக நீதிமன்றங்கள், காவல்துறை, மனித உரிமை அமைப்பு, மனிதாபிமான உதவி குழு.[26] நலவாழ்வுத் துறை, கல்வித் துறை .[27] வங்கி (தமிழீழ வைப்பகம்), வானொலி நிலையம் (புலிகளின் குரல்), தொலைக்காட்சி நிலையம் (தமிழீழ தேசியத் தொலைக்காட்சி).[28] போன்ற ஒரு தனி நாட்டுக்கு உரிய கட்டமைப்புடன் தனி அரசை நிர்வகித்தது.

குறிப்புகள்

[தொகு]
  1. Russell, J. (1982). Communal politics under the Donoughmore Constitution. Colombo: Tissara Publishers. pp. Ch. iv. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85118-002-8.
  2. Wilson, A.J. (1994). S. J. V. Chelvanayagam and the Crisis of Sri Lankan Nationalism 1947-1977. London: Hurst & Co. pp. 140ff. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8248-1608-0.
  3. Roberts, Michael (2004). "Essay". Journal of South Asian Studies 27 (1): 67–108. doi:10.1080/1479027042000186441. http://www.informaworld.com/smpp/content~content=a713631227?words=michael. பார்த்த நாள்: 2008-10-14. 
  4. 4.0 4.1 4.2 Gunasingam, Murugar (1999). Sri Lankan Tamil nationalism: A study of its origins. MV Publications. pp. 108, 201. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-646-38106-7.
  5. Russell, J. (1982). Communal Politics under the Donoughmore Commission, 1831-1947. Ph. D. Thesis. Tissara Publishers. p. 21. 
  6. Russell, J. (1982). Communal politics under the Donoughmore Constitution. Colombo: Tissara Publishers. pp. 22, p. 315. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85118-002-8.
  7. Vaitheespara, R. (2006). "Beyond ‘Benign’and ‘Fascist’Nationalisms: Interrogating the Historiography of Sri Lankan Tamil Nationalism". South Asia: Journal of South Asian Studies 29 (3): 435–458. doi:10.1080/00856400601032003. 
  8. Wilson, A.J. (2000). Sri Lankan Tamil Nationalism: Its Origins and Development in the Nineteenth and Twentieth Centuries. University of British Columbia Press. pp. 1–12, pp. 27–39, pp. 66–81, pp. 82=111, p. 124. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7748-0760-1.
  9. Stokke, K.; Ryntveit, A.K. (2000). "The Struggle for Tamil Eelam in Sri Lanka". A Journal of Urban and Regional Policy 31 (2): 285–304. doi:10.1111/0017-4815.00129. 
  10. De Silva, K.M.De Silva (2005). A History of Sri Lanka. Penguin. p. 448. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-55394-121-7.
  11. De Silva, K. M. (1972). "The Ceylon National Congress in Disarray, 1920-1921". Ceylon Journal of Historical and Social Studies 2 (1): 114. 
  12. Gunasingham, M. (1999). Sri Lankan Tamil nationalism: A study of its origins. MV Publications. pp. 6, p. 76. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-646-38106-7. இணையக் கணினி நூலக மைய எண் 44777400.
  13. Hansard, 1935, Col. 3045
  14. Full report in the "Hindu organ", June 12 (1939)
  15. Report of the Soulbury Commission , London (1965)
  16. Kearney, R.N. (1985). "Ethnic Conflict and the Tamil Separatist Movement in Sri Lanka". Asian Survey 25 (9): 898–917. doi:10.1525/as.1985.25.9.01p0303g. https://archive.org/details/sim_asian-survey_1985-09_25_9/page/898. 
  17. De Silva, P.L. (1997). "The growth of Tamil paramilitary nationalisms: Sinhala Chauvinism and Tamil responses" (PDF). South Asia: Journal of South Asian Studies 20 (1): 97–118. doi:10.1080/00856409708723306. http://www.informaworld.com/index/778260866.pdf. பார்த்த நாள்: 2008-04-27. 
  18. Tambiah, S. J. (1986). Sri Lanka: Ethnic Fratricide and the Dismantling of Democracy. IB Tauris & Co Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-226-78952-1. இணையக் கணினி நூலக மைய எண் 12808514.
  19. De Silva, K.M. (1984). "University Admissions and Ethnic Tension in Sri Lanka, 1977–1982". From Independence to Statehood: Managing Ethnic Conflict in Six African and Asian States. (London: Frances Pinter): 97. 
  20. Goldmann, Robert B.; A.J. Wilson (1984). From Independence to Statehood. Palgrave Macmillan. pp. 173–184. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-312-30723-3.
  21. Russell R. Ross; Andrea Matles Savada. "Tamil Alienation". Library of Congress. பார்க்கப்பட்ட நாள் 2008-05-05.
  22. DBS Jeyaraj. "TULF leader passes away". Hindu News. Archived from the original on 2009-01-24. பார்க்கப்பட்ட நாள் 2008-05-04. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  23. Wilson, A. J. (1988). The Break-up of Sri Lanka: The Sinhalese-Tamil Conflict. C. Hurst & Co. Publishers. pp. 228, 142–143. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7748-0760-1. இணையக் கணினி நூலக மைய எண் 21523218.
  24. Balasingham, A.S. (1983). "Liberation Tigers and Tamil Eelam Freedom Struggle". Liberation Tigers of Tamil Eelam, Jaffna. 
  25. Wilson, A. J. (2000). Sri Lankan Tamil Nationalism:Its Origins and Development in the Nineteenth and Twentieth Centuries. Sydney: C. Hurst & Co. Publishers. pp. 131–132. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85065-338-0. இணையக் கணினி நூலக மைய எண் 237448732. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help); More than one of |OCLC= and |oclc= specified (help); More than one of |author= and |last= specified (help)
  26. Stokke, K. (2006). "Building the Tamil Eelam State: emerging state institutions and forms of governance in LTTE-controlled areas in Sri Lanka". Third World Quarterly 27 (6): 1021–1040. doi:10.1080/01436590600850434. https://archive.org/details/sim_third-world-quarterly_2006_27_6/page/1021. 
  27. McConnell, D. (2008). "The Tamil people's right to self-determination" (PDF). Cambridge Review of International Affairs 21 (1): 59–76. doi:10.1080/09557570701828592. http://www.informaworld.com/index/790622093.pdf. பார்த்த நாள்: 2008-03-25. 
  28. Ranganathan, M. (2002). "Nurturing a Nation on the Net: The Case of Tamil Eelam". Nationalism and Ethnic Politics 8 (2): 51–66. doi:10.1080/13537110208428661. http://www.ingentaconnect.com/content/routledg/nep/2002/00000008/00000002/art00004. பார்த்த நாள்: 2008-03-25. 

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]