உள்ளடக்கத்துக்குச் செல்

வட்டுக்கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வட்டுக்கோட்டை

வட்டுக்கோட்டை
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - யாழ்ப்பாணம்
அமைவிடம் 9°43′43″N 79°56′51″E / 9.728497°N 79.947463°E / 9.728497; 79.947463
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)

வட்டுக்கோட்டை இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வலிகாமப் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். யாழ்ப்பாண நகரில் இருந்து ஏறத்தாழ 11 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள இந்த ஊரை யாழ்ப்பாண நகரில் இருந்து வடக்கு நோக்கிச் சென்று பின்னர் பொன்னாலையில் இருந்து கிழக்கு நோக்கித் திரும்பும் யாழ்ப்பாணம்-பொன்னாலை-பருத்தித்துறை வீதி (AB21) ஊடறுத்துச் செல்கின்றது, இதைத்தவிர இவ்வூரை கொக்குவில்-வட்டுக்கோட்டை வீதி வழியாகவும் வந்தடையலாம். இவ்வூரைச்சூழ அராலி, மூளாய், சித்தங்கேணி போன்ற ஊர்கள் அமைந்துள்ளன. தனித் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும் எனும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் இவ்வூரில் நடைபெற்றது ஒரு சிறப்பம்சம் ஆகும்.[1][2][3]

பெயர்க்காரணம்

[தொகு]

வட்டுக்கோட்டை என்ற பெயரானது வட்டக் கோட்டை என்பதில் இருந்து மருவி வந்ததென்று ஒருசாராரும், மறுசாரார் வடுகக் கோட்டையில் இருந்து (வடுகர் என்னும் தென்னிந்தியர்களின் கோட்டை) வந்தது என்றும் வாதிடுகின்றனர்.[4][5]

பாடசாலைகள்

[தொகு]
  • வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி - இது வட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தேசிய பாடசாலை ஆகும். 1894 புரட்டாதி 9ம் திகதி அம்பலவாண நாவலர் ஆல் ஆங்கில பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டது.
  • யாழ்ப்பாணக் கல்லூரி - ஒரு தனியார்மய புகழ்பெற்ற கலவன் பாடசாலை ஆகும். 1823இல் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கல்வி கற்பிக்கப்படுகின்றது.
  • வட்டு மத்திய கல்லூரி
  • துணவி அ. மி. த. க. பாடசாலை
  • வட்டு மேற்கு அ. மி. த. க. பாடசாலை
  • வட்டு சுப்பிரமணிய வித்தியாசாலை
  • வட்டு கார்த்திகேய வித்தியாலயம்
  • வட்டுக்கோட்டை திருநாவுக்கரசு வித்தியாலயம்

ஆலயங்கள்

[தொகு]

சைவ ஆலயங்கள்

[தொகு]

இவ்வூரில் "துணவி பிரகேஷ்வரன் (ஆதிசிவன்) ஆலயம்" என்ற பெயரில் ஒரு பழைமை வாய்ந்த சிவாலயம் ஒன்று காணப்படுகின்றது. இத்துடன் வட்டுக்கோட்டையில் உள்ள சைவ ஆலயங்கள் பின்வருமாறு அமைந்துள்ளன:[6][7]

  • துணவி அரசடிப் பிள்ளையார் கோயில்
  • உழுத்தொல்லைப்பதி (ஆத்தியடி) சர்வசித்தி விநாயகர் ஆலயம்[8][9]
  • வட்டுக்கோட்டை அடைக்கலம் தோட்டம் கந்தசுவாமி கோவில்
  • வட்டுக்கோட்டை பங்குரு கந்தசுவாமி ஆலயம்
  • வட்டுக்கோட்டை பரமகுரு ஸ்ரீ முதலியப் பெருமான் தேவஸ்தானம்[10]
  • வட்டுக்கோட்டை வன்னியன்தோட்டம் சின்னக் கதிர்காமம் (சிந்துபுரம்)
  • துணவி தெவிண்டப்பிராய் முருகமூர்த்தி தேவஸ்தானம்
  • வட்டூர் வீயோடை இலுப்பையடி ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம்
  • வெப்பட்டியொல்லை செந்தில் முருகையா தேவஸ்தானம்
  • பிராட்டிவளவு ஞானவைரவர் ஆலயம்
  • துறட்டிப்பனை முத்துமாரியம்பாள் ஆலயம்[11]
  • தெக்கணப்பாய் கண்ணகாம்பிகா சமேத கண்ணலிங்கேஸ்வரர் ஆலயம் (கண்ணகி அம்மன் ஆலயம்)[12]
  • புயங்கொல்லை ஞானவைரவர் ஆலயம்
  • வட்டுக்கோட்டை மூன்றாம்பனை ஞானவைரவர் ஆலயம்
  • வட்டுக்கோட்டை உடுக்கியவளை மகாகணபதிப் பிள்ளையார் ஆலயம்
  • வட்டுக்கோட்டை காக்கையம்பதி காளியம்மன் ஆலயம்
  • வட்டுக்கோட்டை கிராவளை ஞானவைரவர் ஆலயம்
  • வட்டுக்கோட்டை வீரபத்திர சிவன் கோவில்

கிறிஸ்தவ ஆலயங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hoole, Ratnajeevan. "The first modern Asian University". Retrieved 2007-10-19.
  2. Mathew, Ninan. "Church of South India, a brief history". Retrieved 2007-10-19.
  3. TULF. "Vaddukoddai Resolution, of May 1976". Retrieved 2007-10-19.
  4. "Thikili-vaddai, Kahatagas-digiliya". TamilNet. May 5, 2013. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=36293. 
  5. கலாநிதி இ. பாலசுந்தரம் (April 6, 2002). "ஈழத்து இடப்பெயர் ஆய்வு - யாழ்ப்பாண மாவட்டம்". தமிழர் செந்தாமரை வெளியீட்டகம், ரொறன்ரோ, கனடா. https://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_-_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D. 
  6. நாகலிங்கம் புவனசுந்தரம் (February 17, 2009). "அருளமுதம் (இசைப்பாடல்கள்)". வட்டுக்கோட்டை தமிழ் இலக்கிய மன்றம். https://noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D). 
  7. "வட்டுக்கோட்டை மத்திய கல்லூரிப் பவள விழா மலர் (1926-2001) - பக். 95-98". யா/ வட்டு மத்திய கல்லூரி. https://noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_1926-2001. 
  8. "நவமணி, கண்ணபிரான் (நினைவுமலர்)". 2008. https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF,_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D). 
  9. "Athiadi Pilliar Temple Vaddukoddai - முகநூல் பக்கம்". https://www.facebook.com/athiadipilliartemple.vaddukoddai. 
  10. "Vaddukoddai - Part 02 (Vanakkam Thainaadu)". IBC Tamil. April 3, 2017. https://www.youtube.com/watch?v=tf7rvs2KOYI. 
  11. "Taṉip-paṉai, Paṉai-muṉai, Paṉai-niṉṟāṉ". TamilNet. August 28, 2012. https://www.tamilnet.com/art.html?artid=35507&catid=98. 
  12. "Kōp-pāy, Neṭṭilip-pāy, Mayilap-pai, Pallup-pai". TamilNet. September 12, 2007. https://tamilnet.com/art.html?catid=98&artid=23242. 

இவற்றையும் பார்க்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வட்டுக்கோட்டை&oldid=4446263" இலிருந்து மீள்விக்கப்பட்டது