ஆர். வைத்திலிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆர். வைத்திலிங்கம் என்பவர் ஓர் தமிழக அரசியல்வாதி. இவர் ஒரத்தநாடு தொகுதியிலிருந்து தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1] 2001 ஆம் ஆண்டில் தமிழக அரசின் தொழில்துறை அமைச்சராகப் பணியாற்றினார். பின்னர், துறை மாற்றப்பட்டு, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை வழங்கப்பட்டது தற்போது தமிழக அரசின் வீட்டுவசதி மற்றும் ஊரக வீட்டுவசதித் துறை அமைச்சராகப் பணியாற்றி வருகிறார்.[2] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இவரது பெற்றோர் ரெங்கசாமி, முத்தம்மாள் ஆவர். இவரின் சொந்த ஊர், தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள தெலுங்கன் குடிக்காடு என்பதாகும். இவர் சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் இளநிலைப் பட்டப்படிப்பை மேற்கொண்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011". தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி.
  2. "தமிழக அமைச்சரவை". தமிழக அரசு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._வைத்திலிங்கம்&oldid=1722732" இருந்து மீள்விக்கப்பட்டது