ஆர். பி. உதயகுமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆர். பி. உதயக்குமார் என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சரும் ஆவார். இவர் பி. காம்., பி. எல்., எம். எஸ். டபிள்யூ படித்துள்ளார். 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தகவல் தொழில்நுட்ப அமைச்சராக பணியாற்றினார். பின்னர் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு, வருவாய்த்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1] இவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "புதிய அமைச்சர்கள் வாழ்க்கை குறிப்பு". தினத்தந்தி. 2016 மே 29. 29 மே 2016 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
  2. "16th Assembly Members". Government of Tamil Nadu. 2021-05-07 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._பி._உதயகுமார்&oldid=3268742" இருந்து மீள்விக்கப்பட்டது