ப. உ. சண்முகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ப உ சண்முகம்
பொதுச் செயலாளர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
பதவியில்
11 ஜூன் 1980 – 13 மார்ச் 1985
முன்னவர் இரா. நெடுஞ்செழியன்
பின்வந்தவர் எஸ். இராகவானந்தம்
உயர்நிலை செயல்திட்டக்குழுத்தலைவர் திராவிட முன்னேற்றக் கழகம்
பதவியில்
1989–2007
முன்னவர் பதவி உருவாக்கப்பட்டது
பின்வந்தவர் ஜானகி ராமன், முன்னாள் புதுவை முதலமைச்சர்
தனிநபர் தகவல்
பிற அரசியல்
சார்புகள்
மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் (1977)

ப. உ. சண்முகம் (P. U. Shanmugam) (15 ஆகத்து 1924 - 11 ஏப்ரல் 2007) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், தி.மு.கவின் அமைப்புக்கழக செயலாளர், உயர்நிலை செயல்திட்டக்குழுத்தலைர், அஇஅதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளார் ஆகிய பொறுப்புகளை வகித்த திராவிடத்தலைவரும் ஆவார்.[1] இவர் திருவண்ணாமலையில் உள்ள நகரவை உயர்நிலைப் பள்ளியில் தனது இடைநிலைக் கல்வியை முடித்தார்.[2] 1957ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 1971 மற்றும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 1977 களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4][5]1980 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மேல்மலையனூர் சட்டமன்றத் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். [6] இவர் அஇஅதிமுகவின் பொதுச்செயலாளாராக 1980 முதல் 1985 பதவி வகித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._உ._சண்முகம்&oldid=3711195" இருந்து மீள்விக்கப்பட்டது